தமிழும் ஈழமும்
தமிழும் ஈழமும், குன்றில் குமார், செந்தமிழ் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 60ரூ.
இலங்கையின் வரலாற்றை, 160 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகத்தில் சிறப்பான முறையில் எழுதியிருக்கிறார் குன்றில் குமார். இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள், ராஜ ராஜ சோழன் ஆட்சியின் கீழ் இலங்கை இருந்திருக்கிறது. சிங்களவர்கள் தங்கள் புனித நூலாகப் போற்றும் மகா வம்சம் சிங்கத்தின் மூலமாகத் தோன்றியவர்கள் சிங்களர்கள் என்று கூறப்பட்டுள்ளது. முதலான விவரங்களுடன் தனி ஈழம் கேட்டு பிரபாகரன் நடத்திய போர் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றை சுருக்கமாக அறிந்து கொள்ள சிறந்த புத்தகம்.
—-
தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம், மூதறிஞர் தமிழண்ணல், தமிழ்பேராயம், இராமசாமி நினைவு பல்கலைக்கழகம், காட்டாங்கொளத்தூர், விலை 45ரூ.
ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நூல் தொல்காப்பியம். திருக்குறளுக்கு முந்தியது. இதில் திருமணம் பற்றிய பல அற்புத கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. களவியல், களவுக்காதல், மணமாகி செல்லும் பெண்ணுக்கு இருக்க வேண்டிய நற்குணங்கள், 10 பொருத்தங்கள், மணமகன், மணமகளுக்கு அமையக்கூடாத குணங்கள், மனக்கட்டுப்பாடுகள் ஆகியவை இந்நூலில் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
—-
சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, விலை 25ரூ.
சிலப்பதிகாரம் பற்றிய ஆராய்ச்சி நூல். இதை வித்துவான் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் எழுதியுள்ளார். சிலப்பதிகாரம் தமிழில் கற்பிக்கப்பெற்ற ஆரிய கற்பனைக் கதை என்பது நூலாசிரியர் முடிவு. இந்த நூலுக்கு பெரியார் ஈ.வெ.ரா. மதிப்புரை வழங்கியுள்ளார். தினத்தந்தி