முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள்

முற்பிறவி மறுபிறவி ஆதாரங்கள், விக்ரவாண்டி வி. ரவிச்சந்திரன், மேகதூதன் பதிப்பகம், பக். 288, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-163-7.html

பல்வேறு விதமாக ஆதாரங்கள் மூலமாக முற்பிறவி மறுபிறவி பற்றி எடுத்துக்கூறுகிறார் விக்கிரவாண்டி வி. ரவிச்சந்திரன். ஒரு பிறவியில் மனித உடலோடு வாழ்ந்த ஓர் ஆத்மா இறப்பின் மூலம் அந்த உடலைவிட்டு பிரிகிறது. சில காலம் கழித்து வேறு உடல் மூலம் இன்னோர் இடத்தில் பிறந்து, புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறது. இதைத்தான் மறுபிறவி என்கிறோம். முற்பிறவி, மறுபிறவி குறித்து இந்து மதம் சொல்வது தான் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. முற்பிறவி, மறுபிறவி குறித்து அறிய விரும்புவோர் படிக்கலாம். -ஸ்ரீநிவாஸ்.  

—-

  விருதுநகர் மாவட்ட பழியர்களின் வாழ்வியல், முனைவர் அழகர், வெண்ணிலா பதிப்பகம். பழியர்கள் என்பவர்கள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடி இனத்தவர்கள். இவர்கள், அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை அறியாதவர்களாக, கற்கால மனிதர்களைப்போல வாழ்ந்து வருகின்றனர். பழியர்களின் தொழில்முறை, உணவு, உடை, இருப்பிடம், பழக்க வழக்கங்கள், பரிணாம வளர்ச்சி, உடற்கூறு, உள்ளக்கூறுகள், சமுதாய அமைப்பு, சடங்குமுறைகள், வாழ்க்கை போராட்டம், உள்ளட்டவை இந்த நூலில் நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில், எட்டு இடங்களில் வாழ்கின்ற, பழியர் இனமக்களின் வாழ்வியல் கூறுகளை, வகைப்படுத்தி, தொக்கபடுத்தியதில், நூல் நம் கவனத்தை கவர்கிறது. மொத்தம் 202 பக்கங்களுடன் நூல் வெளிவந்திருக்கிறது. இதை கன்னிமாரா நூலகத்தில் படித்து பயன்பெறலாம். நன்றி: தினமலர், 13/10/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *