வளம் தரும் வான்மீகியின் பாலகாண்டம், உரையும் ஆக்கமும்
வளம் தரும் வான்மீகியின் பாலகாண்டம், உரையும் ஆக்கமும், புலவர் ஆ. காளத்தி, கிள்ளை நிலையம், 16/383, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை 600024, பக். 294, விலை 190ரூ.
வான்மீகி இயற்றியுள்ள ராமாயணத்தின் பாலகாண்ட தமிழ் மொழிபெயர்ப்பான இந்த நூல் எளிமையான தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக வெளிவந்துள்ளது. பால காண்டத்தில் உள்ள எழுபத்து ஏழு சருக்கங்களில் சில சுலோகங்களை அழகிய முறையில் காளத்தி மொழி பெயர்த்துள்ளார். மூல நூலுக்கு ஊறு செய்யாது மொழி பெயர்த்திருப்பது பாராட்டுக்குரியது. இதைப் பாராட்டும் ஸ்ரீ வரத யதிராஜ ஜீயர் கூறுகையில், புலவரின் மேலையோர் வழிக்கு ஊறு விளைவிக்காது, எளிய தமிழில் பாரோர் அறியப் பகரும் பாங்கு நமக்கு ஒரு விதத்தில் பாலைவனச் சோலையாகவே மொண்டு கட்டுண்டு மகிழ்ந்தோம் என்று அழகிய தமிழில் அணிந்துரை தந்திருப்பது நூலை அணி செய்கிறது. நூலாசிரியரின் இனிய மொழிபெயர்ப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. ராம பிரானைப் பற்றிய வருணனையில் ஸ்ரீ ராமர் மக்களால் மொழியப்பட்டவர். கூர்மையான அறிவு படைத்தவர். நீதி நேர்மையுடையவர், பேசும் சொற்களால் பிறரைத் தன் வயப்படுத்துபவர். திரண்ட தோள் வலிமை படைத்தவர். பெரும் வலிமையுடையவர், அகன்ற மார்புடையவர், பெரிய வில்லாளி, என்று மொழி பெயர்த்திருப்பதில் எளிமை, இனிமை, அழகிய சொற்செட்டு, மொழிச்சிக்கனம், சுருங்க உரைக்கும் பாங்கு ஆகியவை வெளிப்படுகின்றன. இலகு தமிழில் அமைந்திருப்பத ஆன்மிக உணர்வுடையவர்களுக்கு பயன்தரும். நன்றி: தினமலர், 20/10/2013.
—-
நோயின்றி வாழ நாளும் ஒரு கீரை, டாக்டர் ஏ.ஆர்.என். துரைராஜ், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மைலாப்பூர், சென்னை 4. விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-439-9.html
27 கீரை வகைகளின் மருத்துவ குணங்களை விவரிக்கும் நூல். ஆரோக்கியமாக வாழ சிறந்த வழிகாட்டி இந்நூல். நன்றி: தினத்தந்தி, அக்டோபர் 2013.