எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு
எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு, ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், சென்னை 4, பக். 160, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-426-6.html
செங்கோல் வார இதழில் ம.பொ.சிவஞானம் நானறிந்த கலைஞர்கள் என்ற தலைப்பில் எழுதிய தொடரின் நூல்வடிவம் இது. எம்.ஆர்.ராதா, என்.எஸ். கிருஷ்ணன், கே.ஆர். ராமசாமி போன்ற கலைஞர்களைப் பற்றிக் குறைவாகவும் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பற்றிய தகவல்கள் அதிகமாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு நடிகர் என்ற முறையிலும் ஓர் அரசியல்வாதி என்ற முறையிலும், நல்ல மனிதர் என்கிற முறையிலும், எம்.ஜி.ஆரின் நற்பண்புகளை மிகவும் சுவையாக விவரித்துச் செல்கிறார் ம.பொ.சி. மக்களவை மேலவைத் தலைவராக இருந்தபோது ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளில் எம்.ஜி.ஆர். அவரிடம் நடந்து கொண்ட முறைகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்வது மனதைத்தொடுகிறது. எம்.ஜி.ஆரின் சமகாலத்தில் இருந்த பிற அரசியல் தலைவர்களின் பண்புகளோடு எம்.ஜி.ஆரின் பண்புகளை ஒப்பிட்டுச்சொல்ல எம்.ஜி.ஆரின் மேன்மையை எடுத்துக் காட்டுகிறார். பலரும் அறியாத பல புதிய தகவல்கள் நிரம்பிய சுவையான நூல். நன்றி: தினமணி, 23/1/2012.
—-
தமிழ்ப் பண்பாட்டில் பவுத்தம், தொகுப்பு – பிக்கு போதிபாலா, பேராசிரியர் க. ஜெயபாலன், உபாசகர் இ.அன்பன், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-180-2.html
சென்னையில் நடந்த தமிழ்ப் பண்பாட்டில் பவுத்தம் என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட 42 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பவுத்த ஆய்வு எழுச்சியில் ஆக்கத்தோடு பணியாற்றி வரும் பல்வேறு ஆய்வாளர்கள் தங்கள் சிந்தனைகளை வெளிப்படுத்தியவிதம் பவுத்த பேரெழுச்சியைக் கொண்டு வருவதை இந்த நூல் வலியுறுத்துகிறது. உலகத்திற்கே பவுத்தத்தைப் போதித்தவர்கள் தமிழர்களே, என்பதையும் இந்த நூல் உணர்த்துகிறது. இந்திய வரலாற்றையும், தமிழக வரலாற்றையும் முழுமையாக தெரிந்து கொள்ள பெரிதும் இந்த நூல் உதவும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் படித்து பயன்பெறக்கூடிய நூல்.
—-
கனல், பெருமாங்குப்பம் சா. சம்பத்து, இரேணுகாம்பாள் பதிப்பகம், 5, 4வது குறுக்குத் தெரு, அரியந்து நகர், வேலூர் 632006. விலை 100ரூ.
இளைய சமுதாயம் விரும்பிப் படித்துப் பழகும் வகையில் எழுதப்பட்ட கவிதைநூல். நன்றி: தினமணி, 25/9/2013.