எம்.எஃப். உசேன் இந்திய சமகால ஓவியக்கலையின் முன்னோடி
எம்.எஃப். உசேன் இந்திய சமகால ஓவியக்கலையின் முன்னோடி, ஓவியர் புகழேந்தி, தூரிகை, குக 63, 3வது தெரு, முதல் செக்டார், கலைஞர் நகர், சென்னை 78, விலை 175ரூ.
ஆய்வுநூல் இந்திய சமகால ஓவியக்கலையின் முன்னோடியான எம்.எஃப். உசேன் பற்றி ஓவியர் புகழேந்தி எழுதியிருக்கும் இந்த நூல் ஒரு நூற்றாண்டு இந்திய ஓவியக்கலையின் பல்வேறு கூறுகளை உசேனின் வாழ்க்கையின் வழியாகக் கூறுகிறது. இந்தூருக்கு அருகே எளிய போரா இஸ்லாமியச் சமூகத்தில் பிறந்த உசேன் எந்த ஓவியக்கல்லூரியிலும் சேர்ந்து முறைப்படி பயிலவில்லை. ஆனால் அவருடைய 100 ஓவியங்கள் நூறு கோடி ரூபாய்க்கு விலை பேசப்படும் அளவுக்கு உயர்கிறார். செருப்பணியாத அவரது கால்கள், உணர்ச்சிகளை மறைக்காத அவரது ஆளுமை, புகழ்பெற்ற மனிதர்களுடனான அவரது தொடர்பு, அவர் சந்தித்த சர்ச்சைகள், எதிர்கொண்ட வழக்குகள் என அனைத்தையும் குறித்து ஆய்வு செய்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நன்றி: அந்திமழை, 1/12/13.
—-
அருள்தரும் ஸ்ரீ அன்னை, யோகி அரவிந்தர், அரவிந்த், மேகதூதன் பதிப்பகம், 7, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 120ரூ.
ஸ்ரீ அன்னை, அரவிந்தர் வரலாற்று குறிப்புகளை தரும் நூல். நாம் அறிந்திராத தகவல்கள் ஏராளம் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 11/12/13.