புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்

புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை 40, விலை 50ரூ.

புதுமைப்பித்தனுக்குப் பின்னர் சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் பலர் தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்திருக்கிறார்கள் என்றாலும், சிறுகதை மன்னன் என்ற அடைமொழி புதுமைப்பித்தன் ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது. உலகத்தரம் வாய்ந்த சிறந்த சிறுகதைகள் பலவற்றை அவர் எழுதியிருப்பதும், அவை காலத்தை வென்று இன்றும் வாழ்ந்து கொண்டு இருப்பதும் இதற்குக் காரணம். புதுமைப்பித்தன் வெளியிட்ட புரட்சிகரமான கருத்துக்கள், அவர் நூல்களில் மூழ்கி எடுத்த முத்துக்கள், அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், புதுமைப்பித்தன்பற்றி அறிஞர்கள் கூறிய கருத்துக்கள் இந்த சிறு நூலில் அடங்கியுள்ளன. சிந்தனைக்கு விருந்தளிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 18/12/13.  

—-

  விலங்குகள் பெயரில் துலங்கும் பழமொழிகள், வலசை வீரபாண்டியன், சித்திரா நிலையம்.

உலக நாடுகள் பலவற்றிலும், மக்களின் வாழ்க்கை அனுபவங்களை நினைவூட்டும் காலக்கண்ணாடியாக பழமொழிகள் இருந்துள்ளன. தமிழகத்தில் பழமொழிக்கு தனி இடம் உண்டு. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி, நாகரிகம், அவசர வாழ்க்கை ஆகியவற்றால் பழமொழிகள் மறக்கடிக்கப்பட்டு பஞ்ச் டயலாக் எனும் முகம் சுளிக்க வைக்கும் வார்த்தை ஜாலங்கள் இளைய தலைமுறையினரின் அடையாளமாகி உள்ளது. அந்த வகையில் ருசி பார்க்க முழு கோழியையும் விழுங்க வேண்டியது இல்லை. பூனைக்கு மீன் வேண்டும். ஆனால் அது கால்களை நனைக்காது போன்ற 1123 பழமொழிகள் உள்ள 108 பக்க நூல் சென்னை செங்குன்றம் மாவட்ட முழு நேர நூலகத்தில் கிடைக்கிறது. நன்றி: தினமலர், 15/12/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *