உட்கவர் மனம்
உட்கவர் மனம், மரியா மாண்டிசோரி, தமிழாக்கம்-சி.ந. வைத்தீஸ்வரன், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, பக். 446, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-180-4.html
குழந்தை நம்மால் நிறைக்கப்பட வேண்டிய ஒரு காலிப் பாண்டம் அன்று. ஓர் அசைவற்ற பொருள் அன்று. அது எதையெதைச் செய்கிறதோ, அத்தனையும் நம்மாலே தான் என்றும் கருதக்கூடாது. மனிதனை ஆக்குவது குழந்தையே (பக். 29) குழந்தையின் உள்ளத்தில் ஒரு சக்தி குடி கொண்டிருக்கிறது. இந்தச் சக்தியை மலரும்படி செய்வதே கல்வியின் பேருதவியாகும் (பக். 13) இவ்விதமாக குழந்தை ரகசியம் புதல்வருக்கான கல்வியை வழங்கிய இத்தாலி நாட்டவரான மாண்டிசோரி அம்மையார், பல நாட்டுக் குழந்தைகளுடன் நேரடியாகப் பழகி, அவர்களிடம் கண்ட சிறப்பு அம்சங்களை உளவியல் ரீதியாக அணுகி, அறிவியல் அடிப்படையில் அமைந்தக் கல்விக் கொள்கைகளை இந்நூல் படிப்படியாக விளக்குகிறது. பிறப்பிலிருந்தே கற்பித்தல் என்ற கருத்தை உலகைத் திருத்தி அமைப்பதில் குழந்தையின் பங்கு எனத் தொடங்கி அன்பும் அதன் மூலமும் குழந்தை என 28 தலைப்புகளில் இந்நூல் விரிவடைந்துள்ளது. கல்வியாளர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் பண்படக்கூடிய உளவியல் ஆய்வு நூல் இது. -பின்னலூரான். நன்றி; தினமலர், 1/12/13.
—-
துளித்துளியாய் பொது அறிவு, டி.எம்.சண்முகவடிவேல், அருணா பப்ளிகேஷன்ஸ், 12, முதல்தெரு, வடக்கு ஜெகநாதன் நகர், வில்லிவாக்கம், சென்னை 49, விலை 40ரூ.
மாணவ மாணவிகளுக்குப் பெரிதும் உதவக்கூடிய பொது அறிவுத் தகவல்கள் கெண்ட புத்தகம். நன்றி: தினத்தந்தி, 4/12/13.