தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும்
தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும், சா. காந்தி, முகம் வெளியீடு.
தமிழக மின்வெட்டின் 50 ஆண்டு வரலாற்றைத் துல்லியமான தரவுகளுடன் சரியான அரசியல் நிலைப்பாட்டில் இருந்து தொகுத்து வழங்குகிறது இந்த நூல். மின்மிகை மாநிலமாக விளங்கிய தமிழகத்தில், 28/11/2008ம் தேதிக்குப் பின்னர்தான் அசுர மின்வெட்டு தொடங்கியது என்று துல்லியமான தரவுகளுடன் விவரிக்கிறார் சா. காந்தி. மின்சார அரசியலின் பன்முகங்களை, அரசு மின்வாரியத்தை அழித்து தனியார் துறையினர் ஆக்கிரமிப்பதையும், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரத்தை சகாய விலையில் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும் நெஞ்சம் பதைபதைக்க விவரிக்கிறார். நன்றி: ஆனந்த விடகன், 8/1/2014.
—-
அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள், மிகெய்ல் நைமி, தமிழில்-கவிஞர் புவியரசு, விஜயா பதிப்பகம், பக். 184, விலை 100ரூ.
மிகெய்ல் நைமி என்பவர் லெபனான் நாட்டு ஞானவான். அவரை ஒரு ஞானச்சிகரம் என்று போற்றுவோர் உள்ளனர். பல சீரிய கருத்துக்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். தன் பெயரே தனக்குத் தெரியாத ஓர் இளைஞன் மவுனமே கவசமாகக் பூண்டு, நியூயார்க் நகரின் ஒதுக்குப் புறமான ஒரு காப்பி/மதுக்கடையில் பணியாளனாக இருக்கிறான். முகமெல்லாம் கடுமையான அம்மைத் தழும்புகள், அந்த அனாதைப் பையனின் நினைவுப் பதிவுகளாக இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. தங்கு தடையில்லாத மொழி பெயர்ப்பு நடை, நூலை படிக்கத் தூண்டுகிறது. -சிவா. நன்றி:தினமலர்,12/1/2014.