ஏன் எதற்கு

ஏன் எதற்கு, டி.வி. பாலசர்மா, நர்மதா பதிப்பகம், சென்னை 17, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-640-6.html

திருநீற்றின் மகிமை என்ன? ஜபத்தினால் என்ன பயன்? வழிபாட்டு தத்துவம் என்ன? இவை போன்ற ஆன்மிக சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் புத்தகம். மொத்தம் 350 கேள்விகளுக்கு பதில்கள் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/4/204.  

—-

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சுரா பதிப்பகம், சென்னை, விலை 50ரூ.

எழுத்தாளர் செ. சசிகலாதேவி, 25 தலைப்புகளில் சட்டமேதை பி.ஆர். அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை புத்தகமாக தொகுத்துள்ளார். வெளிநாடுகளில் அவர் கலந்து கொண்டு பேசிய கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. அவருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை ஆண்டு வாரியாக பின் இணைப்பாக சேர்த்திருப்பது நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. நன்றி: தினத்தந்தி, 2/4/204.  

—-

இராமாயணம், களிப்பட்டி சு. குப்புசாமி, சென்னை புக்ஸ், சென்னை, விலை 175ரூ.

இராமாயணத்தை எல்லோரும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் இனிய நடையில் எழுதியிருக்கிறார் கள்ளிப்பட்டி சு. குப்புசாமி. இளம் தலைமுறையினர் இராமாயணத்தை முற்றிலுமாக அறிந்து கொள்ள இந்நூல் உதவும். விலை 175ரூ. மற்றொரு இதிகாசமான மகாபாரதத்தையும் இதே பாணியில் எழுதியிருக்கிறார் கள்ளிப்பட்டி சு. குப்புசாமி. விலை 175ரூ. இரண்டு மாபெரும் இதிகாசங்களையும் அழகிய வடிவமைப்பில் வெளியிட்டு இருப்பது பாராட்டத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 2/4/204.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *