வடநாட்டு கோயிற்கலைகள்

வடநாட்டு கோயிற்கலைகள், கோ.வீரபாண்டியன், வேலா வெளியீடு, சென்னை, பக். 356, விலை 260ரூ.

கி.மு. 3000 முதல் வடநாட்டில் கட்டப்பட்ட கோயில்களின் கட்டுமானப் பணிகள், பயன்படுத்தப்பட்ட பொருள்கள், கட்டியவர்கள் குறித்தும், இன்றைய காலத்தில் கட்டடம் கட்டும் பணியைக் காட்டிலும் அன்றைய காலத்தில் எவ்வளவு நவீன முறைகளைக் கையாண்டுள்ளனர் என்ற தகவல்களும் விரிவாக இடம்பெற்றுள்ளன. மொகஞ்சதாரோ, ஹரப்பா, உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் கட்டுமானப் பணிகள், நிர்வாகப் பணிகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன. கோயில்கள், வேள்வி பீடங்கள், குன்றுகள், குடைவரைகள், தூண்கள் போன்றவற்றின் கட்டுமான முறைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இயற்கையான குகை பொந்தில் அடைக்கலமான மனிதன், வீட்டை எவ்வாறு கட்டினான், கோயில்களை எவ்வாறு கட்டத்தொடங்கினான் என்று யோசிப்போருக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதமாகும். வரலாறு படிப்பவர்களும், ஆசிரியர்களும், ஆராய்ச்சியில் ஈடுபடுவோரும் படித்து பாதுகாக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினமணி, 24/9/2012.  

—-

வியாசர் அருளிய மகாபாரதம், செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.

மகாபாரதத்தை பலர் எழுதியுள்ளனர். வியாசர் அருளிய மகாபாரதத்தை எளிய தமிழில் இந்நூலில் கூறுகிறார் ரங்கவாசன் (பி. சீனிவாசன்). மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்லி, விநாயகர் அதை எழுதியதாகப் புராணங்கள் கூறுகின்றன. வியாசர் பிறப்பில் இருந்து, தருமர் சொர்க்கத்துக்குப் போவதுவரை இந்தப்புத்தகம் (447 பக்கம்) விவரிக்கிறது. நன்றி: தினத்தந்தி, 16/4/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *