மனதிற்கு மருந்து ஆல்பா
மனதிற்கு மருந்து ஆல்பா, நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
மனம் சக்தி மிக்கது. அதை சரியான பாதையில் இயக்க நமக்குத் தெரிய வேண்டும். அதற்கு தியானப்பயிற்சி மிக முக்கியமாகிறது. இதன்மூலம் கிடைக்கும் மனவலிமையால் வாழ்க்கையில் ஏற்படும் தினசரி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இதனை மையமாக வைத்து டாக்டர் விஜயலட்சுமி பந்தையன் எழுதி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 16/4/2014.
—-
மாசறு கற்பினாள் அகலிகை, முல்லை பி.எல். முத்தையா, முல்லை பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் வரும் கிளைக் கதைகளில் ஒன்ற அகலிகை கதை. அகலிகை பாத்திரம் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை படைப்பாளர்கள் பலர் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து தெரிவித்த கருத்துக்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. நன்றி: தினத்தந்தி, 16/4/2014.