கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு

கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு, சுரா பதிப்பகம், சென்னை, விலை 110ரூ.

நம்மில் பலர் மிக அழகான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். ஆனால் துயரங்களால் மனதை நிரப்பிக் கொண்டிருக்கிறோம். மன அழுத்தங்களை மாற்றி மகிழ்வுடன் வாழ நீங்கள் ஒன்றை மட்டும்தான் செய்யவேண்டும். அது உங்களை நீங்களே சீர்திருத்திக் கொள்வதுதான். இதனை மையமாக வைத்து நூலாசிரியர் டாக்டர். லட்சுமி விஸ்வநாதன் 400 சிறிய தலைப்புகளில் எளிய நடையில் கூறியிருப்பது நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. நன்றி:தினத்தந்தி, 7/5/2014.  

—-

வி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம், சங்கர சரவணன், ஆ. ராஜா, விகடன் பிரசுரம், சென்னை, விலை 500ரூ.  

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-228-7.html வி ஏ ஓ தேர்வுக்காக தமிழக அரசு தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட பாடத் திட்டங்களுக்கு ஏற்ப, சமச்சீர், மற்றும் முப்பருவ பாடங்களில் இடம் பெற்றுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து விவரங்களும் மிக எளிமையான முறையில் படித்து தெரிந்துகொள்ளும்வகையில், பல்வேறு துணைத் தலைப்புகளுடன் கொடுத்து இருப்பது மிக்க பயன் உள்ளதாக இருக்கும். அத்துடன் மாதிரி வினாக்கள், 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் வி ஏ ஓ தேர்வுகளின்போது கேட்கப்பட்ட வினாக்கள், அதற்கான விடைகள், 2013ம் ஆண்டில் நடைபெற்ற குரூப் 3, குரூப் 2 ஆகிய தேர்வு வினாக்களின் அடிப்படையிலான பல தகவல்கள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொடுத்து இருப்பது இதன் கூடுதல் சிறப்பு ஆகும். நன்றி:தினத்தந்தி, 7/5/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *