அறிவியல் முதல்வர்கள்
அறிவியல் முதல்வர்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-217-0.html அறிவியல் மட்டுமே வரலாற்றை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இளைய சமுதாயத்தினரின் இதயங்களை அறிவியலைக்கொண்டு ஆழ உழுதால் மட்டுமே அவர்கள் ஆற்றல் மிக்க, கற்பனைத்திறன் மிக்க விளைநிலங்களாக மாறும் என்பதால் அறிவியல் மேதைகளின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வதற்காக 12 விஞ்ஞானிகளை நூலாசிரியர் தேவிகாபுரம் சிவா தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 28/5/2014.
—-
மருத்துவ நாடி ரகசியங்கள், கோகிலா சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை, விலை 140ரூ.
ஆங்கில மருத்துவம் வருவதற்கு முன்பு மிக புகழ் பெற்று விளங்கியது நாடி வைத்தியம். நாடி பிடித்துப் பார்த்தே, என்ன நோய் அதற்கு என்ன மருந்து என்பதை உடனே கூறிவிடுவார்கள் நாடி வைத்தியர்கள். சித்தர்கள், வெறும் வார்த்தைகளால் கூறிச்சென்ற நாடி வைத்தியத்தை படங்களுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர் டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ்.சித்த மருத்துவம் பற்றிய பயனுள்ள நூல். நன்றி: தினத்தந்தி, 28/5/2014.