முப்பெரும் புராணங்கள்
முப்பெரும் புராணங்கள், பரத்வாஜர், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, பக். 296, விலை 175ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-060-1.html சிவபுராணம், விநாயகர் புராணம், கந்தர் புராணம் ஆகிய மூன்று பெரும் கடவுளர்களின் புராணங்களை ஒரே நூலாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். இதில் முதல் பகுதியாக வரும் சிவபுராணமானது, சிவ மகா புராணம், திருவிளையாடல் புராணம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள புராணச் சம்பவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. இரண்டாவது பகுதியான விநாயர் புராணத்தில் புராணக் கதைகளைவிட விநாயகர் வழிபாடு குறித்த விளக்கங்களே மிகுதியாக உள்ளன. விநாயகர் திருமேனி தத்துவம், வைணவக் கோவில்களில் விநாயகர், வேதத்திலும் தொல்காப்பிய உரைகளிலும் இடம் பெற்றுள்ள விநாயகர் பற்றிய குறிப்புகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சுசீந்திரம் கோயிலில் உள்ள பெண் வடிவ கணேசினி, ஸ்ரீ சைலத்தில் குழலூதும் விநாயகர், ஹம்பியில் கடலைக்கொட்டை அளவிலான பிள்ளையார் உள்ளிட்ட வித்ததியாசமான விநாயகர் குறித்த குறிப்புகள் பாராட்டுக்குரியவை. மூன்றாவது பகுதியான கந்தபுராணம், கச்சியப்ப சிவாச்சாரியார் தமிழில் மொழிபெயர்த்த ஸ்கந்த புராணத்தின் சுருக்கமாக மலர்ந்துள்ளது. இமவானின் மகள் உமையாக சக்தி அவதாரம் எடுத்தது தொடங்கி, சிவபெருமானால் மன்மதன் எரியுண்டது, சிவபெருமான் – உமையம்மை திருமணம், ஆறுமுகன் தோற்றம் தொடங்கி, தெய்வானை மற்றும் வள்ளியை திருமணம் செய்தது வரை கந்தபுராணச் சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, சிவபுராணம் ஒரு கோவையாக இல்லாதிருப்பது குறையாகவே தெரிகிறது. பிழை திருத்தியதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நன்றி: தினமணி, 14/7/2014.
—-
ஒரு சிறு தூறல், வளவ. துரையன், தாரணி பதிப்பகம், சென்னை, பக். 72, விலை 100ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-241-8.html நம் அன்றாட வாழ்வில் நாம் கண்டும் காணாமலும் போகும் சாதாரண நிகழ்வுகளையே தம் கவிதையின் கருப்பொருளாக கவிஞர் எடுத்தாளும் திறன் போற்றுதற்குரியது. கவிஞரின் உணர்ச்சி அனுபவமும் வாசகனின் உணர்ச்சியும் சங்கமிக்கும் இடம் ஏராளம். வாசலில் அடிபட்டு இறந்துபோன நாயின் நிலையைக் கூட கவிஞர் விட்டுவைக்கவில்லை. இன்னமும் விழித்திருக்கும் கண்களில் கனவுகள் என்ற வரிகள் கண்ணீரை வரவழைக்கின்றன. ஒவ்வொரு கவிதைகளும் ஒரு சிந்தனைச் சுவையை நமக்குள் உருவாக்கிக் கொண்டே போகிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 16/7/2014.