இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும், டாக்டர் சங்கரசரவணன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 195ரூ.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முதலான பரீட்சைகள் எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் எழுதப்பட்டுள்ள நூல் இது. ஆயினும், இந்தியாவுக்குள் வெள்ளையர்கள் எப்படி நுழைந்தார்கள், ஆட்சியைப் எப்படி கைப்பற்றி, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விவரங்கள் என்ன இதுபற்றி எல்லாம் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கமாகவும், விறுவிறுப்பாகவும் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. ஏறத்தாழ 200 ஆண்டுகள், இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்டனர். அந்தக் காலக்கட்டத்தில் எத்தனையோ வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அவற்றை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. நன்றி: தினத்தந்தி, 16/7/2014.
—-
இன்ஸ்பெக்டர் செண்பகராமன், அர்ந்தெடுத்த குறுநாவல்கள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 185ரூ.
அச்சில் வந்த என் புத்தகங்களைப் பார்க்க எனக்குத் தயக்கம். பயம் என்றுகூட கூறலாம். காரணம் அச்சுப்பிழைகள். ஒருமுறை என் பதிப்பாளரிடம் பிழை திருத்தம் போடலாமா? என்று கேட்டேன். புத்தகம் வந்ததே என்று சந்தோஷப்படுங்கள் என்று கூறினார் அவர். இந்த அனுபவத்திற்குப் பிறகு நான் என் நூல்களைப் படித்துப் பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆனால் தேர்ந்தெடுத்த குறுநாவல்கள் தொகுப்பு ஒன்று சமீபத்தில் வந்தது. 46 ஆண்டுகளுக்குப் பிறகு என் குறுநாவல் ஒன்றை நான் மீண்டும் படித்தேன். நிறைவாக இருந்தது. விழா என்ற குறுநாவலை நானே காலவாசி வெட்ட வேண்டியிருந்தது. தீபம் பார்த்தசாரதி ஒருமுறை வெளியூர் சென்றிருந்தார். அந்த ஒரு இதழை நான் முடிக்க வேண்டியிருந்தது. இருபது பக்கத்துக்கும் மேலாக வரும் குறுநாவலை பதினோரு பக்கங்களில் குறுக்க வேண்டியருந்தது. எங்கெல்லாம் வெட்டினேன் என்று எனக்கே உறுதியாகக் கூற முடியவில்லை. நன்றி: குங்குமம், 28/7/2014.