உளவுத்துறை உலகை உற்றுப் பார்க்கும் கண்கள்
உளவுத்துறை உலகை உற்றுப் பார்க்கும் கண்கள், குன்றில் குமார், குறிஞ்சி பதிப்பகம், சென்னை, விலை 115ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-295-7.html உலக அளவில் பிரபலமாக விளங்கும் சில உளவுத் துறைகளின் செயல்பாடுகளைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. ஒரு நாடு பாதுகாப்புடன் இருக்க, தனக்கு எதிரிகள் யாரும் இருக்கிறார்களா? இருந்தால் அவர்களின் பலம், பலவீனம் என்ன? அவர்களை வீழ்த்த என்னென்ன வழிகள் உள்ளன என்பன போன்ற பல விவரங்களை, எதிரியின் இருப்பிடங்களுக்கே சென்று வேவு பார்த்து அறிவதுதான் அந்நாட்டின் உளவுத் துறையின் முக்கியப் பணி. இதில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள உளவுத்துறையும் தனக்கென்று சில பிரத்யேக வழிமுறைகளைக் கையாள்கின்றன. அவற்றைப் பற்றி இந்நூலாசிரியர் விளக்கியுள்ளது படிக்க பரபரப்பாக இருக்கிறது. உளவுத் துறை என்றால் என்ன என்பதை முதல் அத்தியாயத்தில் படிக்கும்போதே, இது எவ்வளவு ஆபத்தான பணி என்ற பயத்தை ஏற்படுத்துகிறது. நம் நாட்டில் மஹாபாரத காலத்திலேயும், குப்தர்கள் காலத்திலேயும், உளவுத் துறையின் செயல்பாடுகளைப் பற்றி துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளதையும் ஆசிரியர் இதில் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், ரஷ்யா, சோவியத் யூனியனாக சிதறாமல் இருந்தபோது பிரபலமாக விளங்கிய கே.ஜி.பி. என்ற உளவு அமைப்பு முதல், அமெரிக்காவின் சி.ஐ.ஏ., இஸ்ரேலின் மொசாட், இந்தியாவின் ரா, ரஷ்யாவின் எஸ்.வி.ஆர்., ஆஸ்திரேலியாவின் ஏ.எஸ்.ஐ.எஸ்., இங்கிலாந்தின் எம்16, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. வரை இவற்றின் செயல்பாடுகளையும், சாகசங்களையும் படிக்கும்போது திகில் ஏற்படுகிறது. -பரக்கத். நன்றி; துக்ளக், 10/9/2014.