வடலிமரம்
வடலிமரம், முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோயில், பக். 124, விலை 80ரூ.
விடலைப் பருவத்தில் வரும் காதல், உடல் சம்பந்தப்பட்ட கவர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் இதில் வரும் அனந்தகிருஷ்ணன் சொர்ணா காதல் கவர்ச்சியைத் தாண்டிய காதலாக நம்முன் நிற்கிறது. பனைமரத்தில் வடலி மரம் என்பது விடலைப் பருவத்தைப் போன்றது. அந்தப் பருவத்தில் பனைமரத்தில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி யதார்த்தமானதாய் இருக்குமோ, அதைப்போலவே இவர்கள் காதலும், காதலைத் தாண்டிய நிஜவாழ்வும், சாதி ஆதிக்கமும், பண அதிகாரமும் அதற்கு எப்படியான எதிர்ப்பைக் காட்டும் என்பதும் நாவலில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. பனையேறிகள், அவர்களின் வாழ்வாதாரத் தொழில், அதில் உலாவும் மாந்தர்கள் எல்லாமே யதார்த்தம் என்றாலும் ஒரு சினிமாத்தனம் நாவல் போக்கில் வந்து உட்கார்ந்திருக்கிறது. நன்றி: குமுதம், 8/12/2014.
நீரிழிவு, ஒவ்வாமை, ஆஸ்துமா, வே. தமையந்திரன், கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
நோய்களைப் பற்றி சரியாக புரிந்துகொண்டு, முன்னரே அவற்றைத் தவிர்க்கவும், உடனடியாக மருத்துவ உதவியைப் பெறமுடியாத இடங்களில் உயிர்காப்பதற்குத் தேவையான முதலுதவி சிகிச்சைகள் ஏதாவது இருந்தால் அவற்றை மேற்கொள்வதற்கு வழிகாட்டும் நூல். நன்றி: தினத்தந்தி, 19/11/2014.