முதல் தலைமுறை

முதல் தலைமுறை, வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 110ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-359-0.html ‘கல்லூரி கால் தடங்கள், இக்கணம் தேவை சிக்கனம், பணவீக்கம் ஒரு பார்வை, வேளாண்மை அன்றும் இன்றும் முதல் தலைமுறை, இளமையென்னும் தென்றல் காற்று போன்ற 39 தலைப்புகளில் வெ. இறையன்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தோல்வியையும், துயரத்தையும் உறவுகளாக மாற்றிக் கொள்பவர்கள்தான் சிற்பமாகச் சிறப்படைகிறார்கள். சுயநலம் குறித்து சிந்திக்காமல் பணியாற்றத் தொடங்குகிறபோதே ஜெயிக்க ஆரம்பித்து விடுகிறோம், வெற்றி என்பது நம் மீது எறிந்த கற்களால் எழுப்புகிற கோபுரம், எவ்வளவு கீர்த்திகள் இருந்தாலும், ஒரே ஒரு தவறு ஒருவனை அதலபாதாளத்தில் தள்ளி விடும், வாழ்வின் வசதி வருமானத்தில் இல்லை, சேமிப்பதில் உள்ளது, கல்லூரிப் படிப்பு என்பது தேர்வுக்கு தயார் செய்வதற்காக அல்ல, வாழ்க்கைக்காக தயார் செய்வதற்காக என்பன போன்ற வாழ்வியல் கருத்துகளை நூல் முழுவதும் காணலாம். சிந்தனைக்கு விருந்தளிக்கும் சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி, 5/11/2014.  

—-

ஒளிந்திருப்பது ஒன்றல்ல, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.

உடல், மனநலத்திற்கான தியானங்கள், ஓய்வு, விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் உள்ளடக்கிய ஒரு முழுமையான தொகுப்பாக, ஓஷோவின் பேச்சிலிருந்து தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தத்தைச் சமாளிக்க பலவிதமான எளிமையான மருந்தற்ற வழிமுறைகள் கூறப்பட்டுளள்ன. தலைவலி, தூக்கமின்மை, பதற்றம், புகைப்பிடித்தலை கைவிடுதல் முதலான அனைத்திற்கும் தியானம் மூலம் நிவாரணம் கிடைக்கும் என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் ஓஷோ. இந்த நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்திருக்கிறார் சுதாங்கன். நன்றி: தினத்தந்தி, 5/11/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *