கிளைக்குத் திரும்பும் இலைகள்
கிளைக்குத் திரும்பும் இலைகள், கவிஞர் பாரியன்பன், அகநி வெளியீடு, வந்தவாசி, பக். 64, விலை 30ரூ.
பட்டுப்போயின மரங்கள்! பாட்டெடுக்கும் குயில்கள்! மரம் பட்டுப்போனதற்கு குயில் எழுப்பும் பாட்டு, நம்மையும் அந்த சோகவலிக்குள் இழுத்துப் போட்டுக்கொள்கிறது. இதுதான் கவிதை. இதுதான் கவிதையின் உயிர். பாரியன்பனின் ஹைக்கூ கவிதைகளுக்கு எளிதில் நம்மை ஆட்கொள்ளும் சக்தி உண்டு என்பதற்கு இஃதோர் உதாரணம். அவர் கையாளும் குறியீடுகள், படிமங்கள், காட்சிப் புனைவுகள் நம்மை கவிதைகளிடம் நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன. பாசங்கற்ற, போலிகளற்ற பரவசம் நிறைந்த கவிதைகளின் தொகுப்பு. நன்றி: குமுதம், 2/2/2015.
—-
அடால்ப் ஹிட்லர், சித்தார்த்தன், கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
வெற்றிக்கும், வீரத்துக்கும் மறுபெயராக விளங்கியவர் ஹிட்லர். இவர் சர்வாதிகாரியாக விளங்கினாலும், அவருக்குள்ளும் பல நல்ல குணங்கள் குடி கொண்டிருந்தன. அவற்றை விவரிக்கிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 4/2/2015.