மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை

மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை, மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 300ரூ.

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள், கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவைக் கைப்பற்றிக்கொண்டு ஆட்சி நடத்தினர். அவர்களை விரட்டி அடித்து, இந்தியாவை மீட்க கட்டபொம்மன் போன்ற மன்னர்கள் வீரப்போர் புரிந்தனர். பின்னர் மகாத்மா காந்தி தலைமை ஏற்று, சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக நடத்தினர். சுதந்திரப்போர் பற்றிய அனைத்து விவரங்களையும் எளிய இனிய நடையில் கதைபோல் கூறுகிறார் மு.அப்பாஸ் மந்திரி. ஏராளமான புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. மாணவ மாணவிகள் அவசியம் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 4/3/2015.  

—-

கிரிவலம், பா.சு.ரமணன், சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.

திருவண்ணாமலை அற்புத தலம். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், லட்சக்கணக்கான பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் வருவார்கள். திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்பையும், கிரிவலம் போகிறவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் இந்நூலில் விவரித்துள்ளார் பா.சு. ரமணன். திருவண்ணாமலை செல்வோருக்கு சிறந்த கையேடு. நன்றி: தினத்தந்தி, 4/3/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *