முருகு சுந்தரம்
முருகு சுந்தரம், சேலம் கு. கணேசன், சாகித்ய அகாடமி, சென்னை, பக். 128, விலை 50ரூ.
பாரதி பரம்பரையில், வந்த சிறந்த படைப்பாளர் முருகு சுந்தரம். பழமையில் பூத்து, புதுமையில் கனிந்த முருகு சுந்தரம், மரபில் துவங்கி, புதுக்கவிதையில் உயர்ந்து நின்றார்.புதிய உத்திகள், படிமங்களுடன் புதுக்கவிதையில் நாடகமாக ஈழப் பிரச்சினையை, எரி நட்சத்திரம் ஆக்கினார். அவர் எழுதிய அருவ ஓவியங்கள், கனிந்த பழம், பொம்மைக் காதல் முதலிய ஆறு புதுக்கவிதை நாடகங்களும், அவருக்கு பெருமை சேர்த்தன. மறத்தகை மகளிர், பாரும்போரும், பாவேந்தர் நினைவுகள், மலரும் மஞ்சமும் ஆகிய நூல்கள் சிறந்த வரவேற்பை பெற்றன. குழந்தைகளுக்காக நாட்டுக்கு ஒரு நல்லவர், அண்ணல் இயேசு, பாரதி வந்தார் முதலிய நூல்களை தந்துள்ளார். தன்னை வழிகாட்டி வளர்த்த, பாரதிதாசன் பற்றி, 2007ல் சாகித்ய அகாடமியில் நூல் எழுதினார். திரைத்துரையினர் பேச்சிற்கும், அவரின் வாழ்விற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது; பணம் சேர்ப்பதே அந்த சமூகப் போலிகளின் வேலை என்பதை, தன் கவிதையால் சாடுகிறார்(பக். 24). -முனைவர் மா.கி.ரமணன். நன்றி: தினமலர், 12/4/2015.
—-
இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம், ஆயிஷா இரா. நடரசான், புக் பார் சில்ட்ரன், சென்னை, விலை 30ரூ.
அறிவியல் மனிதகுலத்துக்கு ஒளியூட்டக்கூடியது. அந்த ஒளிவிளக்கை ஏற்றி வைத்த பல இந்திய அறிவியல் வல்லுநர்களின் வாழ்க்கையும், வரலாறும் இந்தியப் பாடப்புத்தகங்களில் மாணவர்கள் காண முடியாத இருண்ட சரித்திரங்களாக இருப்பதை நூலாசிரியர் உணர்வு பூர்வமாக விளக்கி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 25/2/2015.