அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், பி. எல். முத்தையா, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 80ரூ.
பெரியார், அண்ணா, ராஜாஜி ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில், அரசியல், வரலாறு, சமூகம், கலை, இலக்கியம் என்று பல்துறை சம்பந்தமாக ஆற்றிய உரைகளில் உதிர்த்த பயனுள்ள கருத்துக்களின் தொகுப்பு. மேடையில் மட்டுமல்லாது நண்பர்களிடையே பேசும்போதும், மக்கள் மன்றத்தில் உரை நிகழ்த்தியபோதும் பல்வேறு ஏடுகளில் எழுதியபோதும் அவர்கள் சொன்ன அரிய தகவல்களின் அணிவகுப்பு இந்நூல். தனக்குச் சரி என்று தோன்றுவதைக் கூறவோ எழுதவோ தயங்காதவர் பெரியார் என்பதை நிறுவும் இடங்கள் பல உள்ளன. அண்ணாவின் பேச்சில் எதிர்க்கட்சியினர்கூட ஏற்றுக்கொள்ளும் பண்பு நிறைந்திருந்ததை எடுத்துக் காட்டுவதும், பட்டம், பதவி, பணம், எதையுமே ராஜாஜி விரும்பாதவர் என்பதையும் இத்தொகுப்பு மூலம் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். இளைய தலைமுறையினரும் படித்துப் பயன்பெறும் வகையில் எளிய நடையில் அழகு தமிழில் எழுதப்பட்ட நூல். நன்றி: குமுதம், 19/1/2015.
—-
சதுரகிரி சுந்தரசிவன் வரலாற்றுத் திருவிளையாடல், வீ.கா. தங்கரா, சொர்ணகிரி நூல் கோர்வையகம் வெளியீடு, சென்னை, விலை 250ரூ.
சித்தர்கள் பலர் இன்றளவும் அருவமாக உலவும் இடமாக நம்பப்படும் திருத்தலம் சதுரகிரி. இந்த மலையைப் பற்றியும், இதில் வாழ்ந்த சித்தர்கள், மலையில் உள்ள விருட்சங்கள், மலையில் உள்ள ஆலயங்கள், தரிசிக்க வேண்டிய புண்ணிய இடங்கள் போன்றவற்றை பற்றி விளக்கும் ஒரு கையேடாக இந்நூல் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 22/4/2015.