அகத்தியர் முதல் ஆதித்தனார் வரை

அகத்தியர் முதல் ஆதித்தனார் வரை, காவ்யா, சென்னை, விலை 480ரூ.

பழைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் சிறப்புகளை இந்த நூலில் ஓய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியர் எழிலமுதன் தொகுத்து வழங்கியுள்ளார். இயல், இசை, நாடகம், அறிவியல், ஆய்வு என ஐந்து தமிழுக்கும் நெல்லைத் தமிழ் தலைமை தாங்குகிறது. கவிதைக்குப் பாரதி, கதைக்குப் புதுமைப்பித்தன், நாடகத்துக்குச் சுந்தரம் பிள்ளை, அறிவியலுக்கு அப்புசாமி, சு. முத்து, ஆய்வியலுக்கு தி.க. சிவசங்கரன், தொ.மு. சி. ரகுநாதன் இப்படி நீள்கிறது, பட்டியல். ஜனநாயகத்திற்கேற்ப இதழியலை ஜனரஞ்சகமாக்கியவர் ஆதித்தனார். பாமரரென்று ஒதுங்கிக்கிடந்த பல்வேறு தமிழின மக்களிடமும் தமிழை வாசிக்கிற பழக்கத்தைத் துளிர்க்கச் செய்தார் என்று புகழாரம் சூட்டுகிறார். நெல்லையைப் பற்றிய ஒரு நல்ல கையேடு. நன்றி: தினத்தந்தி, 6/5/2015.  

—-

  தமிழ் இலக்கணம், ஜெ. நிர்மலா, டிகே பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 40ரூ.

பள்ளி மாணவர்களுக்காக எளிமையான முறையில் எழுதப்பட்ட இலக்கண நூல். இதில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணியின் இலக்கணம், வல்லினம் மிகு இடங்கள், மிகா இடங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 6/5/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *