பாரதப் பெருமகன், டாக்டர் ப. சுப்பராயன்

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன், செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு, பக். 212, விலை 120ரூ.

அகன்ற சென்னை மாநிலத்தின் முதல்வராக ஆட்சி புரிந்த முதல் தமிழர் என்ற பெருமையுடைய டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். சட்டப்பேரவை உறுப்பினர் தொடங்கி மாநில ஆளுநர் வரையான அவர் வகித்த பதவிகள், அவரது முன்னோர் பற்றிய வரலாறும் அவரது குமரமங்கலம் இன்றைய தலைமுறை வரையான வரலாறும் கணக்கிடைக்கும் நூல். டாக்டர் சுப்பராயனின் கல்வி, அவர் வகித்த பதவிகளை மட்டும் கூறாது, அவரது முன்னோர் செய்த ஆலயப்பணி, இலக்கியப்பணி, அவரது அரசியல், சமூகத் தொண்டு உள்ளிட்ட அனைத்தும் விடாமல் பதிவாகியுள்ளன. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 28/9/2015.  

—-

அலாரத்தை எழுப்புங்கள், முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக். 224, விலை 150ரூ.

நல்ல நம்பிக்கையோடு செயலாற்றினால் எதுவும் பெரிதல்ல. எந்த இலக்கையும் நாம் எட்ட முடியும் என்ற நம்பிக்கை விதையை மனதில் பதிய வைக்கும் கட்டுரைகள் அடங்கிய நூல். காலையில் எழுவதிலிருந்து இரவு படுக்கைக்குப் போகும்வரை நம்முடைய செயல்களை கட்டுரையாக்கி அதில் நம்பிக்கையை சேத்துத் தந்துள்ளார். இடையிடையே தன்னம்பிக்கை கதைகள், கவிதை வரிகள் சேர்த்திருப்பது படிக்க சுவாரஸ்யம். வெற்றியாளர்களையும் அவர்கள் வெற்றி பெற்றதற்கான காரணங்களையும் பட்டியலிட்டு, சராசரி மனிதனால் எட்டிப் பிடிக்க முடிந்த ஒன்றுதான் வெற்றி என்பதை எளிய முறையில் நம் மனதில் பதிவு செய்கிறார் நூலாசிரியர். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 28/9/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *