தேர்விலும் வெல்வோம்
தேர்விலும் வெல்வோம், கவி முருகபாரதி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 64, விலை 30ரூ.
மாணவர்கள் வெற்றி என்ற இலக்குநோக்கி பயணம் செய்வது எப்படி என்று எளிய நடையில் பல உதாரணங்களுடன் சொல்லித்தரும் நூல். தேர்வில் நூற்றுக்கு நூறு எடுப்பதன் அவசியத்தைக் கூறி, நூற்றுக்கு நூறு எடுப்பதற்கான பத்து வழிகளையும் தருவது சிறப்பு. மாணவர்கள் தேர்வில் மட்டுமல்ல வாழ்விலும் வெல்வது எப்படி என்பதை பளிச்சென விளக்கி, மாணவர் சமூகத்தை வல்லமைப்படுத்த முனைந்துள்ளார் ஆசிரியர் கவி. முருகபாரதி. மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் இந்நூலைப் படித்தால் அவர்கள் மனதில் மாற்றம் நிகழ்வது உறுதி. நன்றி: குமுதம், 21/9/2015.
—-
சத்தான தானிய உணவு, என். நாச்சாள், ஓம் பதிப்பகம், விலை 50ரூ.
அரிசியை தாண்டி உண்மையிலேயே சத்து கொடுக்கும் தானிய வகைகள் பல இருக்கின்றன. சோளம் உள்பட பல தானிய வகைகளில் என்னென்ன உணவு பண்டங்களை எவ்வாறு சமைக்கலாம் என்று விளக்கும் அற்புதமான ஆங்கில நூல் இது. நன்றி: தினத்தந்தி, 9/9/2015.