திடீர் இடியோசை
திடீர் இடியோசை, ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கண்ணதாசன் பதிப்பகம், பக். 416, விலை 260ரூ.
தூங்கிக் கொண்டிருப்பவர்களின் மனக் கதவுகளைத் திடீரென்று திறக்க, இந்த இடியோசை தேவைப்படுகிறது. உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது கிடையாது. நீங்கள் விழிப்புணர்வு அடைந்தவர்களாக ஆகிவிட்டாலே போதும். ஏனெனில் உண்மை என்பது இங்கே ஏற்கெனவே இருக்கிறது. ஓஷோவைப் பொறுத்தவரையில் எல்லா மாற்றங்களுமே தனி மனிதனிடம் ஏற்படுவதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஓஷோவின் இந்த நூல் வார்த்தைகளுக்கு அப்பால், உள்ளத்திற்கு அப்பால், எல்லா புரிதர்களுக்கும் அப்பால் உண்டாகும் மௌனத்தை கேட்பதற்கு நமது இதயங்களைத் திறக்கின்ற அழைப்பிதழாக இருக்கிறது. வாசகர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் செய்திகள் இவை. நன்றி: குமுதம், 7/12/2015.
—-
ஒவ்வொரு துளியும் எனர்ஜி, பே. இராஜேந்திரன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 108, விலை 70ரூ.
மழைக்கு முன்னதான கடலின் வேதனை எனதாக இருந்தாலும், மழைக்குப் பின்னதான நிலத்தின் மகிழ்ச்சி உங்களதாக இருக்கட்டும் கவிஞரின் என்னுரையே ஒரு எனர்ஜி துளியாக நம்மேல் பட்டுத்தெறிப்பது பரவசம். கடல் துளிகளின் விந்தை மழை/மழைத்துளிகளின் மந்தை கடல் என்று மழையின் பிறப்பு வரலாற்றை எண்ண எண்ண மகிழ்ச்சித் துளிகள். நனைந்தால் நீங்கள் நதியுடன் உரையாடலாம், உறவாடலம். நதியின் தாய்மொழி அதுதான் என்கிறார். மழையையும் மழைத் துளிகளையும் கொண்டு காதல், குழந்தை, அன்னையர், நிலம், நதி, குடை என்று காட்டும் காட்சிகளை யதார்த்தமான நடையில் படிக்கப் படிக்க நமக்குள் மழை நீர் ஊற்றெடுத்து வருகிறது. நன்றி: குமுதம், 7/12/2015.