புதுமையான அமைப்பில் திருக்குறள் நூல்
புதுமையான அமைப்பில் திருக்குறள் நூல், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 300ரூ.
உலகப் பொதுமறையாம் திருக்குறள் எண்ணற்ற மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு பரிமேலழகர் முதல் மு. வரதராசனார் வரை ஏராளமானோர் உரை எழுதியுள்ளனர். இப்போது அருணா பதிப்பகம் 6 இன் 1 என்ற வகையில், திருக்குறள் மூலம், ஆங்கிலம் எழுத்துப் பெயர்ப்பு, ஜி.யு. போப் உரை, லாசரஸ் ஆங்கில விளக்கம், பரிமேலழகர் உரை, கீர்த்தியின் தமிழ் விளக்கம் என்று புதிய உரை நூலை வெளியிட்டுள்ளது. பின்னிணைப்பாக செய்யுள் முதற்குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இது போற்றத்தக்க, பாராட்டத்தக்க சிறந்த முயற்சி. தமிழர்களின் இல்லங்களில் மட்டுமல்ல. ஆங்கிலம் அறிந்தவர்கள் இல்லங்களிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.
—-
மழை நாளின் காகிதக் கப்பல், வக்கீல் கே. சாந்தகுமாரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 90ரூ.
பெண் படைப்பாளிகளுக்கும் சமுதாயப் பார்வையும், உலகப் பார்வையும் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் எழுதப்பட்ட கவிதை தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.