தமிழ்த் திரையிசை ஆளுமைகள்

தமிழ்த் திரையிசை ஆளுமைகள்,  ஞா.கற்பகம், கற்பக வித்யா பதிப்பகம், பக்.400; ரூ.300; தமிழ்மொழியில் முதல் பேசும் படம் 1931 – ஆம் ஆண்டில் வெளியானது. அதற்கு முன்னர் மெளனப் படங்களே வெளிவந்தன. தமிழ்த் திரைப்படம் பேசத் தொடங்கிய, பாடத் தொடங்கிய 1931 முதல் 2000 -ஆம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் தமிழ்த் திரைப்பட உலகில் பணியாற்றிய 61 இசையமைப்பாளர்கள், 64 பாடகர்கள், 54 பாடகிகள், 22 இசைக்கருவி இசைக்கும் கலைஞர்கள் என மொத்தம் 201 பேரைப் பற்றிய தகவல்கள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. […]

Read more

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை, சித்ரா லட்சுமணன், எழுத்து பிரசுரம், விலை 340ரூ. தமிழ் சினிமா உலகில், திரைக்குப் பின்னால் நடைபெற்ற காதல், மோதல், துரோகம் போன்ற பலதரப்பட்ட சம்பவங்கள் இந்த நூல் மூலம் வெளிச்சத்துக்கு வந்து இருக்கின்றன. நடிகர், நடிகைகள் மட்டும் அல்லாது, திரைப்படத்துறை சார்ந்த அத்தனை பிரிவினர் வாழ்வில் நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வுகள், இதுவரை அறியப்படாத ஆச்சரியமான செய்திகள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய கடிதம், பல பிரபலங்கள் போராட்ட வாழ்வுக்குப் பின் திரைப்படத்துறையில் நுழைந்த கதை, சிவாஜி […]

Read more

திரைக்கவித் திலகம் 100

திரைக்கவித் திலகம் 100, வானொலி அண்ணா என்.சி.ஞானப்பிரகாசம், பரணி பதிப்பகம், விலைரூ.250 கலைமாமணி அறிஞர் அ.மருதகாசி திரைக்கதைப் பாடல்களில் முத்திரை பதித்தவர். அவரைப்பற்றிய இந்த நுாலை வானொலி அண்ணா ஞானப்பிரகாசம், நுாற்றாண்டு விழாவைக் கருதி படைத்திருக்கிறார். அவர் எழுதிய எளிய தத்துவப்பாடல்கள் காலத்தில் நின்று நிற்பவை. மொழி அறிவும் இசை அறிவும் கொண்ட அவர், ‘மெட்டுக்குப் பாட்டு எழுதுவதில் முதன்மையானவர்’ என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார். ‘கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்… அறிவை நம்பு உள்ளம் தெளிவாகும்’ என்ற பாடல் நினைத்ததை முடிப்பவன் படத்திற்கு […]

Read more

பாடும் நிலா பாலு பற்றிய பல்சுவைத் தகவல்கள்

பாடும் நிலா பாலு பற்றிய பல்சுவைத் தகவல்கள், டி.என்.இமாஜான், மணிமேகலைப் பிரசுரம், விலை 170ரூ. கொரோனா தாக்கியதால் மரணம் அடைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் வாழ்க்கை வரலாறு, திரைப்படம் தொடர்பான பல துறைகளிலும் அவர் ஆற்றிய சாதனைகள் இந்த நூலில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் திரைப்படத் துறையில் எவ்வாறு நுழைந்தார் என்பதும் அவரது நேரம் தவறாமை, எளிமை, நகைச்சுவை உணர்வு, எல்லோரிடமும் அன்பாகப் பழகும் தன்மை போன்ற அவரது குணாதிசயங்கள், பல்வேறு சம்பவங்ளை சுட்டிக்காட்டி அழகாகப் படம்பிடித்து தரப்பட்டுள்ளன. […]

Read more

தர்மேந்திரா மக்கள் கலைஞன்

தர்மேந்திரா மக்கள் கலைஞன், அப்சல், இருவாட்சி, விலைரூ.200 ஹிந்தி நடிகர் தர்மேந்திரா பற்றிய நுால். அவருடன் பணியாற்றிய, நடிகர்கள், நடிகையர், இயக்குனர்கள்,பாடலாசிரியர்கள், பாடகர்கள் குறித்த அரிய தகவல்கள் அடங்கியுள்ளன.தர்மேந்திரா நடித்த, 283 திரைப்படங்களின் பட்டியல், கவுரவ வேடத்தில் நடித்த படங்கள்,ஊதியம் வாங்காமல் நடித்தவை, விருது பெற்றவை, சிறந்த, 13 படங்கள், அதன் புகைப்படங்கள், இந்நுாலில் இடம் பெற்றுள்ளன. மேலும், எந்தெந்த தமிழ் படங்கள், ஹிந்தியில் ‘ரிமேக்’ செய்து, அதில் தர்மேந்திரா நடித்துள்ளார், இவருடன் நடித்த தமிழ் நடிகர்கள், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் விவரிக்கிறது. […]

Read more

சொல்லித்தந்த வானம்

சொல்லித்தந்த வானம், அருள்செல்வன், புதிய தமிழ் புத்தகம், பக். 256, விலை 230ரூ. தமிழ் சினிமாவில் புதிய நடைமாற்றத்தை வழங்கியவர் இயக்குனர் மகேந்திரன். வணிக சினிமா வந்தபோதும், திரைமொழி இலக்கியமாக மட்டுமே இருக்க வேண்டும் என உறுதியாக இருந்தவர். திரைப்படங்கள் மீது வைத்திருந்த காதலை, திரைத்துறையைச் சேர்ந்த, 56 பேர் எழுதி உள்ளனர்.நடிகர் ராஜேஷ், ‘சிறு வயதில் இருந்தே நிறைய படிப்பார். கமர்சியல் சினிமாக்களை கேலி செய்வார். ஒரு ஆள், 10 பேரை துாக்கி அடிப்பது போன்ற காட்சியை பார்த்து சிரிப்பார்… ‘ஒரு நடிகர், […]

Read more

திரைப்பாடல்களில் சுயமுன்னேற்றம்

திரைப்பாடல்களில் சுயமுன்னேற்றம், கமலா கந்தசாமி, அருணா பப்ளிகேஷன்ஸ், பக் 104, விலை 40ரூ. திரைப்படப் பாடலுக்கு என, நிறைய ரசிகர்கள் உண்டு. எத்தனையோ பாடல்கள் வெளிவந்திருந்தாலும், காலத்தை வென்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பாடல்கள் சிலவே. சுய முன்னேற்ற சிந்தனை தரும் பாடல்கள், கருத்தாழம் மிக்க வரிகள் கொண்ட தத்துவப் பாடல்கள் வழிகாட்டியாக இருந்து வருகின்றன. அத்தகைய பாடல்களை, 45 அத்தியாயங்களாக தொகுத்து, உட்கருத்தை விளக்கி, அதன் சுவையை அறிய வைக்கிறார். நன்றி: தினமலர், 13/9/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

எண்பதுகளின் தமிழ் சினிமா

எண்பதுகளின் தமிழ் சினிமா; ஸ்டாலின் ராஜாங்கம், நீலம் வெளியீடு, விலை: ரூ.150. எண்பதுகளில் வெளியான தமிழ் சினிமாக்களைச் சமூக, அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகியிருக்கும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் ‘எண்பதுகளின் தமிழ் சினிமா: திரைப்படங்களின் ஊடான தமிழ்ச் சமூக வரலாறு’ என்ற புத்தகம் ஒரு முக்கியமான வரவு. எண்பதுகளில் வெளியான சினிமாக்கள் என்னென்ன விஷயங்களைக் கையாண்டன, சமூகங்களை – குறிப்பாக, சாதிய உரையாடல்களை – சினிமாக்கள் எப்படிப் பிரதிபலித்தன, சினிமாக்களைச் சமூகங்கள் எப்படி உள்வாங்கிக்கொண்டன என்று சமூகத்துடன் திரைப் பிரதிகள் நிகழ்த்திய ஊடாட்டங்களை விரிவான ஆய்வுக்கு உட்படுத்துகிறது […]

Read more

கேரக்டர் (பாகம் 1)

கேரக்டர் (பாகம்-1), கலைஞானம், பக்.336; ரூ.280- (பாகம்-2) நக்கீரன் வெளியீடு, பக். 328; விலை: ரூ.280;  திரைப்பட கதாசிரியர், நடிகர், பாடலாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறன் கொண்ட கலைஞானம் எழுதிய திரையுலக அனுபவங்களின் தொகுப்பு. சென்னை பாண்டிபஜாரில் கார் ஓட்டுநர்கள் 4 பேர் சினிமா கனவுகளுடன் இருந்தார்கள்.அவர்களின் கனவு நிறைவேறியதா… என்பதை ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்புடன் எழுதியிருக்கிறார். அந்த 4 பேரில் ஒருவரான பாலகிருஷ்ணன் என்கிற கலைஞானம். கே.பாக்யராஜின் “இது நம்ம ஆளு” படத்தில் ஐயர் வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர். […]

Read more

கலைவாணர் மதுரம் திரையிசைப் பாடல்கள்

கலைவாணர் மதுரம் திரையிசைப் பாடல்கள், கவிஞர் பொன்.செல்லமுத்து, வைகுந்த் பதிப்பகம், பக்.223, விலை 250ரூ. செல்லமுத்து வருவாய் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், கவிஞர் என்ற எழுத்து பணியில் இருந்து ஓய்வு பெறாமல் தொடர்கிறார். காலத்தால் அழியாத என்.எஸ்.கிருஷ்ணனின் கலையுலக பயணத்தை தெரிந்து கொள்ளும் பொருட்டு அவர் பாடி, நடித்த, 176 பாடல்களையும், மதுரம் அம்மையாருடன் இணைந்து நடித்த, 74 படங்களையும் நுால் வழியே தொகுத்து அளித்ததன் மூலம் சினிமா மீதும், கலைவாணர் மீதும் இருக்கும் அன்பு வெளிப்படுகிறது. கலை வித்தகனின் நடிப்பு, குணம், […]

Read more
1 2 3 4 5 30