இன்றைய பிரச்சனைகளும் தீர்வுகளும்
இன்றைய பிரச்சனைகளும் தீர்வுகளும், ப. திருமலை, கற்பகம் புத்தகாலயம், விலை 250ரூ.
சமூக, பொருளாதார, அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. இதில் பொதுமக்களிடம் இருந்து அன்னியப்பட்டு போகிறதா பொது வினியோகத் திட்டம்? அள்ளும் மணல் அழியும் உயிரினம், தமிழகத்தில் தலித் படுகொலைகள், பிளாஸ்டிக் பயங்கரம், சுங்கச் சாவடியா வழிப்பறி நிலையமா?, பொது சிவில் சட்டம் அவசியமா? என்பன போன்ற 42 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
தேசிய அளவிலும், மாநில அளவிலுமான மக்கள் பிரச்சினைகள் குறித்து இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன. மக்களின் அன்றாட வாழக்கையைப் பறிக்கும் அரசின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை எடுத்துரைக்கின்றன. விசாயிகளுக்காகவும், மீனவர்களுக்காவும், அடித்தட்டு மக்களுக்காகவும் இந்த நூலில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ப. திருமலை உரத்த குரல் எழுப்புகிறார்.
நன்றி: தினத்தந்தி, 13/9/2017.