ஜப்பானில் அருணகிரி

ஜப்பானில் அருணகிரி, அருணகிரி, கலைஞன் பதிப்பகம், விலை 200ரூ. உலகம் சுற்றும் வாலிபன், வாங்க பறக்கலாம், அந்தமானில் அருணகிரி, உலக வலம், ஆல்ப்ஸ் மலையில் அருணகிரி, அலைந்தும் அறிந்ததும் என சுற்றுலா நோக்கில் பயனுள்ள நூல்களை அளித்து இருக்கின்ற நூலாசிரியர் அருணகிரியின் மற்றொரு புதிய பயண நூலிது. அருணகிரியின் பயணங்கள் பெற்ற வெற்றிக்கு காரணம், துல்லியமான திட்டமிடுதல், செல்லும் நாடு குறித்த தகவல்களை திரட்டுவது, முன் சென்று வந்தோர் அனுபவங்களைச் சேமித்து கொள்வது, பார்க்க வேண்டிய ஊர்களையும் இடங்களையும் சரியாகத் தீர்மானிப்பது, இயன்றவரை செலவைச் […]

Read more

நாடாளுமன்றத்தின் கதை

நாடாளுமன்றத்தின் கதை, அருணகிரி, குமுதம் பு(து)த்தகம், பக். 408, விலை 240ரூ. உலகின் பல நாட்டு நாடாளுமன்றங்களுக்கும் சென்று அவற்றின் செயல்பாடுகளைக் கண்டறிந்த இந்நூலாசிரியர், நமது நாடாளுமன்றத்தை பற்றி ஏ டு இசட் வரையிலான அனைத்து தகவல்களையும் இந்நூலில் எளிய தமிழ் நடையில் பதிவு செய்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவை நாடாளுமன்றம் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களில் இருந்து திரட்டியவை. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இந்தியர்கள் படிப்பறிவு அற்றவர்கள், அவர்களுக்கு தேர்தல், ஓட்டு, ஜனநாயகம் பற்றியெல்லாம் என்ன தெரியும்? என்று ஐரோப்பியர்களால் கேலி […]

Read more

நாடாளுமன்றத்தின் கதை

நாடாளுமன்றத்தின் கதை, அருணகிரி, குமுதம் புதுத்தகம் வெளியீடு, பக். 408, விலை 240ரூ. இந்திய பாராளுமன்றத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவின் வரலாற்றுப் பின்னணியை அறிந்திருக்க வேண்டும். இந்தியாவை உருவாக்கிய சட்டங்கள் என்னென்ன என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் தெரிந்தவராக அருணகிரி விளக்குகிறார் என்பதை நாடாளுமன்றம் அமைந்த விதத்தை அவர் விளக்கும்போதே நிரூபணமாகிவிடுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகை, தலைமைச் செயலாகம், தலைவர்கள், பிரதமர்கள், நாடாளுமன்ற நடைமுறைகள், தேர்தல் ஆணையம், ஆணையர்கள், தேர்தல் நடைமுறைகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் உரிமைகள், […]

Read more

தோழமைக் குரல்

தோழமைக் குரல், ஆளூர் ஷானவாஸ், கரிசல் பதிப்பகம், வேளச்சேரி, சென்னை 42, விலை 250ரூ. தொல். திருமாவளவன் இஸ்லாமிய சமூகத்திற்காக ஆற்றியிருக்கும் களப்பணிகளை விவரிக்கிறது இந்நூல். 1990களிலிருந்து அவருடைய உரைகள், அறிக்கைகள், தலையங்கம், கட்டுரைகள் மூலம் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதை தொடர்ந்து எதிர்த்து வந்திருப்பது பதிவாகியிருக்கிறது.   —-   நமோ நாமம், கோவி. லெனின், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 50ரூ. குஜராத்தில் மோடியின் ஆட்சியில் வறுமை, பெண்களின் நிலை, மது விலக்கு, சட்டம் ஒழுங்கு போன்றவற்றை இந்நூல் ஆராய்கிறது. கார்ப்பரேட் ஊடகங்கள் […]

Read more

திலக பாமா கவிதைகள்

திலக பாமா கவிதைகள், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 600024, பக். 732, விலை 650ரூ. இந்நாளின் புதுக்கவிதை வாணர்களுள், குறிப்பாக பெண் கவிஞர்களுள் குறிக்கத்தக்க, ஒருவர் திலக பாமா, மரபின் தாக்கம் கொண்டவை, இவரது படைப்புகள். ஆனால் சிந்தனைகள் புதுமை வேகம் கொண்டவை. மொழியைப் பயன்படுத்தும் வல்லமை வாய்ந்துள்ள, இவரின் சொல்லாட்சிகள் சுவைக்கத் தக்கன. கவிதைகளைக் கதைகளாகவும், கதைகளைக் கவிதைகளாகவும் எழுதக்கூடிய சதுரம்பாடு பாராட்டத்தக்கது. வழிவழியாகப் பெண்ணைப் படைத்த பாதையினின்றி விலகி, ஒரு புதுப் பாதையை இவர் […]

Read more