இரத்தமே உயிரின் ஆதாரம்

இரத்தமே உயிரின் ஆதாரம், டாக்டர் டி.பி.ராகவ பரத்வாஜ், எல்.கே.எம். பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 120ரூ. ஒருபுறம் நெடுஞ்சாலை விபத்துகளில் ரத்த ஆறு பாய்ந்தோட, மறுபுறம் மருத்துவமனைகளில் உயிர் காக்கும் ரத்த வகை கிடைக்காமல் அலறி ஓடுவது நாடெங்கும் காணும் காட்சி. ரத்தமில்லாமல் உயிரில்லை; உலகில்லை. ரத்தம் எல்லா ஜீவராசிகளுக்கும் சிவப்பே என்பதில் இயற்கை மீதொரு வியப்பு தோன்றுகிறது. எந்த ஒரு வியாதியைச் சொல்லி மருத்துவமனைக்குச் சென்றாலும் உடனே ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. பெரும்பாலான உடற்குறைபாடுகளுக்கு ரத்தத்தின் குறைபாடே காரணம். நம் ரத்தத்தின் கூறுகள் […]

Read more

தெரிந்த புராணம் தெரியாத கதை

தெரிந்த புராணம் தெரியாத கதை, டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி, எல்.கே.எம். பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 150ரூ. ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும், புராணங்களிலும் உள்ள கதைகளை அறிந்த பலரும், கிளைக் கதைகளை அறிந்திருக்க மாட்டார்கள். கிளைக் கதைகளையும் அவற்றில் பொதிந்துள்ள உட்கருத்துக்களையும், எளிய நடையில், தெளிவான முறையில், எல்லோருக்கும் புரியும் வகையில் நூலாசிரியர் எழுதியுள்ளார். மன்னனா? துறவியா? என்ற கட்டுரையில் ஜனகர் – பஞ்சசிகர் தொடர்புடைய நிகழ்வுகள் புலனடக்கம், சத்தியத்தின் உயர்வு, அகந்தை, ஆணவம் துறத்தல் முதலானவற்றை வலியுறுத்துகின்றன. மனைவி கூறிய கருத்தை மதித்த […]

Read more

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமைகள் – பெருமைகள்

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமைகள் – பெருமைகள், கவிமாமணி முத்துமணி, எல்.கே.எம்., பப்ளிகேஷன், பக்கங்கள் 672, விலை 290ரூ. பஞ்ச பூதத் தலங்களில், வாயுத்தலமாக விளங்குவது திருக்காளத்தி ஆகும். களத்ர தோஷம், ராகு-கேது தோஷங்களுக்குப் பரிகார ஸ்தலமாக ஸ்ரீ காள ஹஸ்தி விளங்குகிறது. ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமையும், பெருமையும் அறிய இந்நூல் மிகவும் உதவும் என்பதில் ஐயமில்லை. இந்நூலில் காளத்தீஸ்வர சுப்ரபாதம், ஸ்தோத்திரம், சரணம், மங்களம் என்று நான்கு பகுதிகளுக்கும், பாடலும் – உரையும் எழுதியுள்ள நூலாசிரியரின் நுண்மதி போற்றத்தக்கதாகும். உரையில் பல புராணச் செய்திகளும், […]

Read more

சீர்காழி மூவர்

சீர்காழி மூவர், டாக்டர் சுதா சேஷய்யன், எல்.கே.எம். பப்ளிகேஷன்ஸ், சென்னை – 17, பக்கம் 264, விலை 120 ரூ. ஆன்மிகச் சொற்பொழிவுகளிலும், சிறந்த கூட்டங்களில் தொகுப்புரையாற்றுவதிலும் வல்லவரான ஆசிரியர் ஒரு மருத்துவர். தமிழ் பக்தி, கலாசாரம் என்பதை இணைத்து, இந்த நூலில் புகழ்பெற்ற மூவர் இசையை அழகாக விவரித்திருக்கிறார். சீர்காழி மூவர் என்று அழைக்கப்பட்ட, முத்துத்தாண்டவர், மாரி முத்தா பிள்ளை, மற்றும் அருணாசலக் கவிராயர் ஆகியோர் பெருமைகளை விளக்குகிறது இந்த நூல். சீர்காழி என்றால் ஞானசம்பந்தர் என்ற நினைவும், அடுத்ததாக, தமிழ் இசை வளர்த்த […]

Read more

மண்ணில் உலவிய மகான்கள்

மண்ணில் உலவிய மகான்கள், க.துரியானந்தம், எல். கே. எம். பப்ளிகேஷன்ஸ், பக்கம் 120, விலை 50 ரூ. மகான்கள் கடவுளுக்கு மிக நெருக்கமானவர்கள். பரம்பொருளை ஆழமாகத் தியானித்தபடி இருப்பதால், அவர்களின் தெய்வீக ஆற்றல் ஒப்பற்றதாகத் திகழ்கிறது. மனித உருவில் நடமாடிய மகான்களின், திவ்ய சரிதங்களை அறிவதும் பரம சுகத்தை அளிக்கிறது. அப்படி இந்நூலில் காலணா காசை மக்களிடம் வசூல்செய்து, கோவில் திருப்பணிகள் செய்த பாடகச்சேரி சுவாமிகள், ராமநாமஜெய மகிமையை மக்கள் மனதில் பதித்த போதேந்திர சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், ரமணரையே அடையாளம் காட்டிய சேஷாத்ரி சுவாமிகள், […]

Read more