நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், வசந்தா பிரசுரம், சென்னை, விலை 220ரூ. தமிழ்த் திரையுலகில், சாதனை படைத்த இயக்குனர்களில் முக்கியமானவர் ஏ.சி. திருலோகசந்தர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட இயக்கிய படங்கள் 65. அதில் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் 25. “ஏவி.எம்.” பட நிறுவனத்தை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் “அன்பே வா”. அதை இயக்கியவர் திருலோகசந்தர். இவர் தயாரித்த “பத்ரகாளி” படத்தின் கதாநாயகி ராணி சந்திரா, படம் முடிவடைவதற்கு முன் விமான விபத்தில் இறந்து போனார். படத்தைக் கைவிட்டால், பல லட்சங்கள் நஷ்டம் […]

Read more

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமைகள் – பெருமைகள்

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமைகள் – பெருமைகள், கவிமாமணி முத்துமணி, எல்.கே.எம்., பப்ளிகேஷன், பக்கங்கள் 672, விலை 290ரூ. பஞ்ச பூதத் தலங்களில், வாயுத்தலமாக விளங்குவது திருக்காளத்தி ஆகும். களத்ர தோஷம், ராகு-கேது தோஷங்களுக்குப் பரிகார ஸ்தலமாக ஸ்ரீ காள ஹஸ்தி விளங்குகிறது. ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமையும், பெருமையும் அறிய இந்நூல் மிகவும் உதவும் என்பதில் ஐயமில்லை. இந்நூலில் காளத்தீஸ்வர சுப்ரபாதம், ஸ்தோத்திரம், சரணம், மங்களம் என்று நான்கு பகுதிகளுக்கும், பாடலும் – உரையும் எழுதியுள்ள நூலாசிரியரின் நுண்மதி போற்றத்தக்கதாகும். உரையில் பல புராணச் செய்திகளும், […]

Read more

கால வரிசையில் பாரதி பாடல்கள்

கால வரிசையில் பாரதி பாடல்கள், பதிப்பாசிரியர் – சீனி. விசுவநாதன், விலை 650ரூ., வெளியீடு – சீனி. விசுவநாதன், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை 35. மகாகவி பாரதி மீது தீராத பக்தி பூண்டு, பாரதியின் படைப்புகள் அனைத்தையும் தேடிப் பிடித்து ஒருங்கிணைக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் இந்நூலின் படைப்பாசிரியர். இவரது கடின உழைப்பை பாரதியின் உடன்பிறந்த தம்பி சி.விசுவநாதனும், கவிஞர் கண்ணாதசனுமே வியந்து பாராட்டியுள்ளனர். அதன்படி பாரதியின் படைப்புகள் அனைத்தையும் காலவரிசையில் தனித் தனியாகத் தொகுத்து, அவற்றை […]

Read more