உலகத் தமிழ்த் துாதர் தனிநாயகம் அடிகளார்

உலகத் தமிழ்த் துாதர் தனிநாயகம் அடிகளார், பால்வளன் அரசு, கதிரவன் பதிப்பகம், விலைரூ.120. ஈழத்தில் பிறந்து, தமிழகத்தில் முறையாகத் தமிழ் ஆய்வு மேற்கொண்டு, மலேஷியாவில் பேராசிரியராக வீற்றிருந்தவர் சேவியர் தனிநாயகம் அடிகளார். பன்மொழிப் புலவராகவும், பன்னாட்டுத் தமிழ்த் துாதராகவும், உலகத் தமிழாய்வு மன்ற நிறுவனராகவும், உலகத் தமிழ் மாநாடுகளின் அமைப்பாளராகவும், தமிழ்ப் பண்பாடு என்னும் ஆங்கில முத்திங்கள் இதழின் ஆசிரியராகவும் விளங்கியவர். ஐரோப்பியப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் தமிழ் ஆய்வுச் சொற்பொழிவுகள் ஆற்றியவர். அவரது அரும் பணிகள் பற்றிச் சொல்லும் நன்னுால். தேவநேயப் பாவாணர், […]

Read more

உலகப் பெரும் புலவர் வீரமாமுனிவர்

உலகப் பெரும் புலவர் வீரமாமுனிவர், முதுமுனைவர் பால் வளன் அரசு, கதிரவன் பதிப்பகம், விலைரூ.120. வீரமாமுனிவர் இத்தாலி நாட்டில் இருந்து தமிழகத்துக்கு, 18ம் நுாற்றாண்டில் வருகை தந்தவர். தன் பெயரைத் தைரியநாதர் என்று ஆக்கியவர். மதுரைப் புலவர் பெருமக்கள் வீரமாமுனிவர் என்றும், திருமதுரைச் செந்தமிழ்த் தேசிகர் என்றும் அழைத்து மகிழ்ந்தனர். தேம்பாவணி, அன்னை அழுங்கல் அந்தாதி, திருக்காவலுார் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, அடைக்கல மாலை, பெரியநாயகி மேல் பெண் கலிப்பா ஆகியவற்றை படிப்போர், வீரமாமுனிவரின் இலக்கிய ஆளுமையை உணர முடியும்.இந்த நுால் ஒரு இலக்கியப் […]

Read more

திருக்குறள்

திருக்குறள், புலவர் துரை தமிழரசன், கதிரவன் பதிப்பகம், விலை 400ரூ. உலக அளவில் திருக்குறளுக்கு வெளியான உரைகள் போல வேறெந்த நூலுக்கும் உரைகள் வெளியானதில்லை. இவ்வளவு உரைகள் இருந்தபோதிலும் தமக்குத் தோன்றும் புதிய கருத்துகளை – சிந்தனைகளை தமிழ் உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் புதிய உரைகளை பலரும் எழுதி வருகிறார்கள். அந்த வகையில் புலவர் துரை தமிழரசனின் ‘திருக்குறள் எளிய தெளிவுரையும், இனிய ஆய்வுரையும்’ என்ற இந்த நூலில் பல சிறப்புகள் காணப்படுகின்றன. […]

Read more

தூது வந்த வீரர்

தூது வந்த வீரர், ஏம்பல் தளும் முல் முகம்மது, நியூலைட் புக் சென்டர், 1504ஏ, எம்.ஐ.ஜி., 3ம் முதன்மைச் சாலை, மாத்தூர், எம்.எம்.டி.ஏ., சென்னை 68, பக். 224, விலை 200ரூ. தாமஸ் கார்லைல், 1840ல் லண்டனில் ஆற்றிய சொற்பொழிவின் தமிழாக்கம் இந்நூல். இதில், இளவரசர் சார்லஸ் ஆற்றிய இஸ்லாமும் மேற்கு நாடுகளும் என்ற சொற்பொழிவின் தமிழாக்கமும் இணைந்துள்ளது. அண்ணல் நபிகள் நாயகம் பற்றி, அப்போது பரப்பப்பட்டு வந்த வதந்திகளையும், இஸ்லாம் மார்க்கம் பற்றிய உண்மை நிலைகளையும், ஒரு கிறிஸ்தவராக இருந்து கார்லைல் ஆற்றிய […]

Read more