படித்த வேலையா? பிடித்த வேலையா?

படித்த வேலையா? பிடித்த வேலையா? , காம்கேர் கே.புவனேஸ்வரி, தாமரை பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்,  பக்.196, விலை ரூ.145. நூலாசிரியர் கணினித் துறையில் தான் சந்தித்த சவால்கள் குறித்தும், கணினி உள்பட பல்வேறு துறைகளில் இன்றைய இளம் தலைமுறையிருக்கு உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் இந்நூலில் எழுதியிருக்கிறார். ஐ.டி. துறை இளைஞர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களை குறைப்பதற்கான வழிமுறைகள், இணையதள வங்கி செயல்பாடுகள், கடன் அட்டை குறித்த விழிப்புணர்வு, பெண் நிர்வாகிகளின் கீழ் பணிபுரியும் பெண்கள் மனநிலை மாறுமா என 20 அத்தியாயங்களில் பல்வேறு […]

Read more

ஸ்ரீவசன பூஷணம், ஆசார்ய இருதயம்

ஸ்ரீவசன பூஷணம், ஆசார்ய இருதயம், தி. பாஷ்ய ராமாநுசதாசன், செல்வி. ரம்யா கஜபதி, பக். 160, 120, விலை 100ரூ, 50ரூ. வைணவ தத்துவம், இதம், புருஷணார்த்தம் ஆகியவற்றை விளக்க, ஆசாரியர்கள் எழுதியுள்ள நூல்களில், இந்த இரண்டும் பலரால் போற்றப்படுகின்றன. பெரும்பாலும் வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் இவை இருப்பதால், தற்காலத்தில் படிப்போர்க்குக் கடினம். அதனால் எளிய தமிழில், அவற்றுக்கு இந்த உரை நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சொல்லழகும், பொருளழகும் உடைய ஸ்ரீவசன பூஷணம் என்ற நூலை, பிள்ளைலோகாசாரியர் அருளிசெய்தார். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்கள் […]

Read more

நல்ல நிலம்

நல்ல நிலம், கண்மணி கிரியேட்டிங் வேவ்ஸ், சென்னை, விலை 600ரூ. வாழ்ந்த மண்ணின் மேல் ஒரு மனிதன் வைக்கிற பற்றும் பாசமும் வார்த்தைக்கு அடங்காதவை. சொந்த பூமியை மனிதன் இழந்து வெறும் நினைவுகளோடு மட்டும் நிற்பதுதான் இன்றைய வாழ்க்கை நிர்ப்பந்தம். சந்தர்ப்பமும், சூழ்நிலையும் ஒரு மனிதனை அவனது சொந்த மண்ணிலிருந்து வேரோடு பிடிங்கியெடுத்து, இன்னொரு மண்ணில் வீசி எறிந்து விடுகின்றன. ஆனால் மனிதன் ஜடமல்ல. வீசியெறித் இடத்தில் வேரூன்றி அவன் நிலை கொள்ள முயல்கிற சந்தர்பங்கள் எல்லாம், அவனது சொந்த மண்ணின் நினைவு வந்து […]

Read more

நிழல் இளவரசி

நிழல் இளவரசி, இந்து சுந்தரேசன், தமிழில்-மதுரம் சுந்தரேசன், வானதி பதிப்பகம், பக். 512, விலை 250ரூ. பரந்து விரிந்திருந்த முகலாய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தை, கைப்பற்ற ஷாஜஹான் மிகக் கடுமையாகப் போரிட்டு ஈவிரக்கமில்லாமல், தன் சொந்த சகோதரர்கள், உடன் பிறவா சகோதரர்கள் மற்றும் மருமகன்கள் என்று எல்லாரையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு, முடி சூட்டிக் கொள்கிறார். காதல் மனைவி மும்தாஜ் உடன்கூடிக் களித்து, பதினான்கு குழந்தைகளைப் பெறுகிறான். நாவல் ஆரம்பத்திலேயே மும்தாஜ், தன் 38 வயதில் பதினாலாவது குழந்தையை பெற்று விட்டு இறந்துபோகிறாள். தந்தையை கவனித்துக் […]

Read more