நாடகமும் தமிழிசையும்

நாடகமும் தமிழிசையும் , டி.கே.எஸ். கலைவாணன், வானதி பதிப்பகம், பக். 176; விலை ரூ. 150; தமிழ் இசையை பாமர மக்களிடமும் பரப்பிய பெருமை தமிழ் நாடகக் கலைஞர்களுக்கு உண்டு, நாடகமும் தமிழிசையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் நிறுவிக்காட்டும் ஆய்வு நூல். தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் தமிழிசைப் பாடல்கள், நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனார், நாடகம் வளர்த்த தமிழிசை, நாடகம் வளர்த்த நால்வர், நூற்றாண்டு கண்ட நடிப்பிசை மாமணிகள், திரையிசையில் தமிழிசையின் பங்களிப்பு, சுதந்திரப் போராட்டத்தில் தமிழிசையின் பங்கு,  […]

Read more

என்னை வளர்த்த சான்றோர்

என்னை வளர்த்த சான்றோர், டி.கே.எஸ். கலைவாணன், மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.175 பிரபல நடிகர் அவ்வை டி.கே.சண்முகம். அவரது மகன், குழந்தைப் பருவம் பற்றி எழுதியுள்ள அனுபவ நுால். தாய், தந்தை மற்றும் ஆசான்களுடன் பழகிய நாட்களை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். புகழ் பெற்ற குடும்பத்தில் பிறந்த சிறுவனின் இளமைக் காலம் மிளிர்கிறது. சம்பவங்கள், நுட்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிரகாசித்த நட்சத்திரங்களின் இயல்புகளை, அனுபவச் சுவட்டில் இருந்து கொட்டியுள்ளார். பணிவும், நெருக்கமும் வெளிப்படுகிறது; நகைச்சுவை படர்கிறது. பிரபலமாக இருந்த கலைவாணர், இசைத்தமிழ் அறிஞர் சம்பந்தன், […]

Read more

திருக்கயிலாய தரிசனம்

திருக்கயிலாய தரிசனம்,  டி.கே.எஸ். கலைவாணன்,  வானதி பதிப்பகம், விலை ரூ.125. உச்சியில், 22 அடி உயரம் கொண்ட இடத்தில் சிவபெருமான் உறைந்துள்ளதாகப் புராணங்கள் குறிப்பிடும். வெள்ளிப் பனிமலையில் சிவன் வீற்றிருப்பதாக எண்ணுவோர், திருக்கயிலாய நாதரைக் காண்பதற்குப் புனிதப் பயணம் செய்வது அரிய செயல். கடல் மட்டத்திலிருந்து, 23 ஆயிரம் அடி உயரம் கொண்ட திருக்கயிலாயப் பயணம் என்பது எல்லாருக்கும் கிட்டிவிடாது. இம்மலையைத் தரிசித்தால் மறுபிறவி இல்லை என்பது ஞானிகளின் கூற்று. இப்புனிதத் தலத்தைக் கண்டு வந்து, தாம் பெற்ற அனுபவத்தை இந்நுால் வழியாக நமக்கு […]

Read more

திருக்கயிலாய தரிசனம்

திருக்கயிலாய தரிசனம் (பயண அனுபவங்கள்), டி.கே.எஸ்.கலைவாணன்,  வானதி பதிப்பகம், பக்.176, விலை ரூ.125. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்&amp என்ற திருமூலரின் வாக்கின்படி நூலாசிரியர் தாம் 2010-ஆம் ஆண்டில் மேற்கொண்ட திருக்கயிலாய யாத்திரையை இந்நூலில் பயணக் கட்டுரையாகப் படைத்துள்ளார். திருக்கயிலாயத்துக்குச் சென்று வர மனப்பக்குவமும், உறுதியும் வேண்டும். அத்துடன் இறை அருளும் தேவை என்பதை அவர் நூலில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசு நடத்தும் கயிலாய யாத்திரை குழுவில் பங்கேற்பது எப்படி? என்பது குறித்தும், தனியார் அழைத்துச் செல்லும் யாத்திரை குழுவில் […]

Read more

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர்

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர், டி.கே.எஸ்.கலைவாணன், வானதி பதிப்பகம், விலை 200ரூ. தமிழகத்தில் அவ்வையார் என்றால் டி.கே.ஷண்முகம். டி.கே.ஷண்முகம் என்றால் அவ்வையார் என்று மிக ரத்தினச் சுருக்கமாக, ராஜாஜியால் பாராட்டப்பட்டவர், தமிழ் நாடக மேடையில், அந்த காலத்தில் ஆண்கள், பெண் வேடம் தரித்து நடிப்பது வழக்கமானது தான். ஆனால், வயதில் மிக இளைஞரான, டி.கே.எஸ்., வயது முதிர்ந்த அவ்வை பாட்டியாக வேடம் தரித்து, அதே குரலில் பேசி நடித்த பாங்கு, அவருக்கு அளவில்லாத புகழை ஈட்டித் தந்திருக்கிறது. டி.கே.எஸ்.,சின் நாடக வாழ்க்கை, ஆறு வயதிலேயே […]

Read more

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர்

நூற்றாண்டு கண்ட நாடக வேந்தர் (அவ்வை டி.கே.சண்முகம்),  டி.கே.எஸ்.கலைவாணன், வானதி பதிப்பகம், பக். 248, விலை ரூ. 200. நாடக மேதை அவ்வை டி.கே.சண்முகத்தின் வாழ்க்கை வரலாற்றை பல்வேறு பரிமாணங்களில் சுவைபடத் தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர். 2012-ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்ட அவ்வை சண்முகம் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட அறிஞர்கள், கலைஞர்களின் கருத்துகள் மற்றும் பத்திரிகைகளில் இடம் பெற்ற கருத்துகளை ஆண்டு வரிசைப்படி இந்நூல் தொகுத்தளித்திருப்பது சிறப்பு. கொத்தமங்கலம் சுப்பு, கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கு.மா.பாலசுப்பிரமணியம், கி.வா.ஜகந்நாதன், வாலி போன்ற பல்வேறு கவிஞர்கள் அவ்வை சண்முகம் பற்றி எழுதிய […]

Read more

மனைவி அமைவதெல்லாம்

மனைவி அமைவதெல்லாம், டி.கே.எஸ். கலைவாணன், வானதி பதிப்பகம், பக். 96, விலை 65ரூ. பெற்றெடுத்த தாய்க்கு பின், ஒரு நல்ல இல்லத்தரசி நமக்கு வாய்ப்பதற்கு நாம் முற்பிறவியில் தவம் செய்திருக்க வேண்டும். அத்தகைய இலக்கணமாக திகழ்ந்து வழிகாட்டிய இல்லறத்தாளின் பங்களிப்பை, ‘மனைவி அமைவதெல்லாம்’ என்ற வாழ்வியல் நுாலாகப் படைத்திருக்கிறார் நுாலாசிரியர். ஒவ்வொரு கணவனும், மனைவியும் படித்து பயன் பெறும் நோக்கில் எழுதப்பட்டு உள்ளது இந்நுால். நன்றி: தினமலர், 11/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026692.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

இமயமலைச் சாரலிலே

இமயமலைச் சாரலிலே, டி.கே.எஸ். கலைவாணன், வானதி பதிப்பகம், விலை 90ரூ. பொதுவாக பயண நூல் என்றால், அது பயணித்தவரின் அனுபவங்களின் வடிகாலாக மட்டுமே இருக்கும். ஆனால் “நாடக மன்னர்”அவ்வை டி. சண்முகத்தின் மகனான டி.கே.எஸ். கலைவாணன், அந்த மரபை மீறி தனது பயணத்தின் அனுபவங்களால் மற்றவர்கள் பயன் அடைய வேண்டும் என்ற நோக்கில் இதனை ஆக்கி இருக்கிறார். பயண ஏற்பாட்டாளர் மூலம் இமயமலையில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ஹரித்துவார் போன்ற இடங்களுக்குச் சென்ற அவர், அங்கே பார்க்க வேண்டிய இடங்கள், தங்கும் […]

Read more