நடைவழி நினைவுகள்

நடைவழி நினைவுகள், சி.மோகன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.175 மோகன் தனது ஐம்பது ஆண்டுகால எழுத்து வாழ்க்கையில் சந்தித்த அபூர்வமான ஆளுமைகளைப் பற்றி எழுதிய தொடர் ‘நடைவழி நினைவுகள்’. தமிழின் முதன்மையான எழுத்தாளர்கள் 16 பேர் கலை சார்ந்த ஆளுமைகளாகவும், அவரவர்களுக்கே உரிய பிரத்யேகக் குணங்களோடும் இந்தப் புத்தகத்தில் வெளிப்பட்டுள்ளார்கள். ஒரு வாசகரோடு அந்த ஆளுமைகள் நெருங்கிக் கைகுலுக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் புத்தகம் இது. நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

சமூக நீதிக்கான அறப்போர்

சமூக நீதிக்கான அறப்போர், பி.எஸ்.கிருஷ்ணனுடன் உரையாடல்:வே.வசந்தி தேவி, சவுத் விஷன் புக்ஸ் வெளியீடு, விலை: ரூ.350. தலித் மக்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளுக்காகப் போராடிய பி.எஸ்.கிருஷ்ணனுடன் இந்திய அரசின் முன்னாள் செயலாளரான வே.வசந்தி தேவி நிகழ்த்திய மிக நீண்ட உரையாடல் இது. 70 ஆண்டுகால வரலாற்றைப் பேசுவதோடு ஒடுக்கப்பட்டோர் மீள்வதற்கான மகத்தான சிந்தனைகளையும் முன்வைக்கும் முக்கியமான நூல். நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

இந்தியத் தேர்தல்களைப் புரிந்துகொள்ளல்

இந்தியத் தேர்தல்களைப் புரிந்துகொள்ளல், பிரணாய் ராய், தொராய், ஆர்.சொபாரிவாலா, தமிழில்: ச.வின்சென்ட், எதிர் வெளியீடு, விலை: ரூ.399 ஊடகவியலாளர், பொருளாதார வல்லுநர், பட்டயக் கணக்காளர், தேர்தல் முடிவுகளைக் கணிப்பவர் என்று பன்முக ஆளுமை கொண்ட பிரணாய் ராய், தொராய் ஆர்.சொபாரிவாலாவுடன் இணைந்து எழுதிய புத்தகம் ‘தி வெர்டிக்ட்: டிகோடிங் இண்டியா’ஸ் எலெக் ஷன்ஸ்’. 1952 தொடங்கி 2019 தேர்தல் வரையிலான வரலாற்றைப் பற்றிய விரிவான பகுப்பாய்வு நூல் இது. பல்வேறு தரப்பினரது கவனம் ஈர்த்த இப்புத்தகம் இப்போது தமிழில் வெளிவந்திருக்கிறது. நன்றி: தமிழ் இந்து,16/1/2020. […]

Read more

கீழடி

கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம், தொல்லியல் துறை வெளியீடு, விலை: ரூ.50 எல்லோருக்கும் புரியும்வண்ணம் மிக எளிமையான நடையில் எழுதப்பட்டிருக்கிறது. இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், அரபு உள்ளிட்ட 24 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நன்றி: தமிழ் இந்து,16/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

சயின்ஸ் விக்னெட்ஸ்

சயின்ஸ் விக்னெட்ஸ், ஜந்தர் மந்தர், சயின்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.110 சிறுவயதில் இருந்தே அறிவியலில் ஆர்வத்தைத் தூண்டும் நோக்கத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ‘துளிர்’ என்ற மாத இதழின் மூலம் 1987முதல் தமிழகச் சிறார்களுக்கு பெரும் சேவையாற்றிவருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஆங்கிலம் வழி பயிலும் மாணவர்களையும் கணக்கில்கொண்டு 1993-ல் ‘ஜந்தர் மந்தர்’ என்ற ஆங்கில மாத இதழும் வெளிவரத் தொடங்கியது. அவ்விதழின் வெள்ளிவிழாவை ஒட்டி வெளியாகியுள்ள இச்சிறப்பு மலர் பொது அறிவு கேள்வி-பதில், வேதியியல், புவியியல், வானியல் என அறிவியலின் பல்வேறு புதிர்களை அவிழ்க்கும் […]

Read more

கல்வெட்டுகள் சொல்லும் கோயில் கதைகள்

கல்வெட்டுகள் சொல்லும் கோயில் கதைகள், குடவாயில் பாலசுப்ரமணியன், சூரியன் பதிப்பகம்   தமிழகத்தில் பல முக்கியமான கல்வெட்டுகள் இருக்கும் இடங்கள் கோயில்கள். பண்டைத் தமிழ் மன்னர்கள் கோயில்களைக் கட்டியதுடன் தங்களைச் சார்ந்த பல செய்திகளை கல்வெட்டுகளிலேயே பதித்துவைத்தார்கள். கோயில் கல்வெட்டுகள் பகரும் செய்திகள் தொடர்பாக ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூல் இது. நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தொல்தமிழ் எழுத்துகள் ஓர் அறிமுகம்

தொல்தமிழ் எழுத்துகள் ஓர் அறிமுகம், செந்தீ நடராசன், என்.சி.பி.எச்.   இந்தியாவிலேயே அதிகக் கல்வெட்டுகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஆவணப் படுத்துதலில் மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழ் தொன்மையானது. கீழடிச் சான்றுகளும் அதையே நமக்கு உணர்த்துகின்றன. இந்தப் பின்னணியில் தொல்தமிழ் எழுத்துகள், அவை கூற நினைக்கும் செய்திகளை இந்த நூலின் வழியாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் மூத்த சமூகப் பண்பாட்டு ஆய்வாளர் செந்தீ நடராசன்.   நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

முச்சந்தி இலக்கியம்

முச்சந்தி இலக்கியம், ஆ.இரா. வெங்கடாசலபதி, காலச்சுவடு, விலை 140ரூ.   புலவர்களும் இலக்கிய ஆளுமைகளும் படைப்பவை மட்டுமே இலக்கியம் என்றொரு மூடநம்பிக்கை இருக்கிறது. சாதாரண மக்களும் அதிகம் அறியப்படாத படைப்பாளர்களும் உலகின் எல்லா நிலப்பகுதிகளிலும் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். தாங்கள் வாழ்ந்த காலத்தைப் பிரதிபலிக்கும் படைப்புகளை அவர்களும் எளிய முறையில், மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் படைப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட எளியோர் இலக்கியம் குறித்த நூல் இது. நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000000581.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

சென்னப்பட்டணம்

சென்னப்பட்டணம், ராமச்சந்திர வைத்தியநாத்,பாரதி புத்தகாலயம்   ஆங்கிலேயர் வருகைக்குப்பின் தமிழகத்தின் வடகிழக்கு முனையில் உள்ள கடலோர நகரமான சென்னை, முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதன் தொடக்க காலம் தொட்டு சென்னையை வளர்த்தெடுத்தவர்கள், உழைக்கும் ஏழை, எளிய மக்கள். இந்தப் பின்னணியில் சென்னை நகரின் வளர்ச்சியை பின்தொடர்கிறது இந்த நூல்.   நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

சினிமா ரசனை

சினிமா ரசனை, அம்ஷன்குமார், சொல் ஏர் பதிப்பகம், விலை 275ரூ. தமிழ்நாட்டில் சினிமா ரசனை பெரிதாக வளர்ந்திராத காலத்தில், அயல் சினிமாவையும் நம் சினிமாவையும் புரிந்துகொள்வது எப்படி, அவற்றின் கலைநுட்பங்கள், தன்மை குறித்துத் தொடர்ச்சியாக எழுதிவந்தவர் இயக்குநர் அம்ஷன்குமார். மகாகவி பாரதி, சர் சி.வி.ராமன் குறித்த அவருடைய ஆவணப் படங்கள் குறிப்பிடத்தக்கவை. 20 ஆண்டுகளுக்கு முன்பே அவர் எழுதிய நூல் இது. நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000022755.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் […]

Read more
1 23 24 25 26 27 44