அருளே ஆனந்தம்

அருளே ஆனந்தம், பி.சுவாமிநாதன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.200 மகா பெரியவரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களையும் அவரது அறநெறி உரைகளையும் சிந்தனைகளையும் ‘காமதேனு’ வார இதழில் பி.சுவாமிநாதன் தொடராக எழுதினார். அது இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. தொடரோடு இணைந்து வெளியான ஏ.பி.ஸ்ரீதரின் தத்ரூபமான ஓவியங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பும் இடம்பெற்றிருக்கிறது. நன்றி: தமிழ் இந்து, 20/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சிராப்பள்ளி மாவட்டக் கோயில் வரிசை நூல்கள்

சிராப்பள்ளி மாவட்டக் கோயில் வரிசை நூல்கள், மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், மொத்த விலை: ரூ.1,300 திருச்சிராப்பள்ளியை மையமாகக் கொண்டு இயங்கும் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பணிகள் முக்கியமானவை. சமீபத்தில், இந்த வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் அர.அகிலா, மு.நளினி, இரா.கலைக்கோவன் ஆகியோர் இணைந்து திருச்சிராப்பள்ளியின் முக்கியமான கோயில்களினுடைய வரலாற்றையும் கலைச் சிறப்புகளையும் கல்வெட்டுச் சான்றாதாரங்களோடு ஐந்து தொகுப்புகளாக வெளியிட்டுள்ளனர். அவை ‘சோளர் தளிகள் ஏழு’, ‘சோழர் தளிகள் நான்கு’, ‘எறும்பியூர் துடையூர் சோழர் தளிகள்’, ‘பாச்சிள் கோயில்கள்’, ‘தவத்துறையும் கற்குடியும்’. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியையும் மையப்படுத்தி […]

Read more

புத்தரும் அவரது தம்மமும்

புத்தரும் அவரது தம்மமும், பி.ஆர்.அம்பேத்கர், கருத்து=பட்டறை வெளியீடு, விலை: ரூ.600 அம்பேத்கர் அவரது மரணத் தறுவாயில் எழுதிய புத்தகம். பௌத்தம் பற்றி எளிமையாகவும் விரிவாகவும் எழுதப்பட்ட புத்தகம். விவிலியத்தைப் போல அத்தியாயப் பிரிப்பும் வாக்கிய அமைப்பும் கொண்டு புத்தரையும் அவரது கருத்துகளையும் தொகுத்தளித்த புத்தகம். பௌத்த அமைப்புகளும், அம்பேத்கர் பவுண்டேஷனும் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுவருகின்றன. ‘கருத்து=பட்டறை’ கொண்டுவந்திருக்கும் இந்தப் பதிப்பு தரமான தாளில், ராயில் சைஸில், கெட்டி அட்டைப் பதிப்பாகக் கொண்டுவந்திருக்கிறது. நன்றி: தமிழ் இந்து, 20/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் […]

Read more

நீர்வளரி

நீர்வளரி, கோணங்கி, அடையாளம், விலை 600ரூ. தமிழ் சொல்கதை மரபின் லட்சணங்கள் அனைத்தையும் சூடிக்கொண்ட நவீன கதைசொல்லி கோணங்கி. கரிசலின் உணர்வு மூட்டங்களை மந்திர மொழியில் சொன்ன சிறுகதைக் கலைஞர். ‘பாழி’, ‘பிதிரா’, ‘த’ உள்ளிட்ட நாவல்களைத் தொடர்ந்து ‘நீர்வளரி’ நாவலை இப்போது வெளியிட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்தப் பேட்டி எடுக்கப்பட்டது. ஒரு கதைசொல்லியை உங்களிடம் கண்டுகொண்ட பின்னணி, காலத்தைச் சொல்லுங்கள்… விளாத்திகுளத்திலிருந்து வந்த ச.ஜோதிவிநாயகத் தின் ‘தேடல்’ சிற்றிதழில் ‘கருப்பு ரயில்’ சிறுகதை பிரசுரமானது. அப்போது என் வயது இருபது. அதைப் படித்து உற்சாகமான […]

Read more

வீட்டு வைத்தியர்

வீட்டு வைத்தியர், டாக்டர் தி.சே.செள.ராஜன், சந்தியா பதிப்பக வெளியீடு, விலை: ரூ.390 ராஜாஜியின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பணியாற்றிய டாக்டர் தி.சே.செள.ராஜன் சுதந்திரப் போராட்ட வீரர். சுதந்திரப் போராட்டத்துக்காகச் சிறை சென்றிருந்த காலகட்டத்தில், பல்வேறு சிரமங்களுக்கு இடையே அவர் எழுதிய புத்தகம் இது. முதற்பதிப்பு வெளியானது 1945-ல். அவருடன் சிறையில் இருந்த ராஜாஜியே இந்தப் புத்தகத்துக்குச் சுவையான முன்னுரை எழுதியிருக்கிறார். உடல் பாகங்கள் தொடர்பான விளக்கங்கள் தொடங்கி, பல்வேறு நோய்கள் தொடர்பான அறிகுறிகள், நோய்க்கான எளிய மருத்துவ முறைகள், சுகாதார மேம்பாட்டுக்கான எளிய […]

Read more

பெரியார் இன்றும் என்றும்

பெரியார் இன்றும் என்றும், (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்), விடியல் பதிப்பகம், விலை: ரூ. 300. பெரியார் தன் வாழ்நாளில் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள், ஆற்றிய உரைகள் போன்றவற்றைப் படிக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரு ஆயுள் வேண்டும்! பெரியார் எழுத்துக்களின் தொகுப்புகள் அனைத்தையும் படிக்க முடியாதவர்களுக்கு இந்தப் புத்தகத்தை நிச்சயம் பரிந்துரைக்கலாம். பெரியார் தொட்ட எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய பெருந்தொகுதி! மிகவும் மலிவான விலை என்பது கூடுதல் வாசகர்களை ஈர்க்கும் நன்றி: தமிழ் இந்து, 18/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை […]

Read more

அயோத்திதாசர்

அயோத்திதாசர், டி.தருமராஜ், கிழக்கு பதிப்பகம், விலை 300ரூ. 1845-ல் பிறக்கும் காத்தவராயன் எந்தக் காலகட்டத்தில் அயோத்திதாசர் ஆகிறார்? 1892 சென்னை மஹாஜன சபைக் கூட்டத்துக்குப் பிறகு, பிராமணியத்துக்கு எதிராகவும் இந்து அடையாளத்துக்கு வெளியிலும் அவருடைய புதிய பயணம் தொடங்குகிறது என்பது தெரிகிறது. அதற்கு முன் அவருடைய வாழ்க்கை எப்படி இருந்தது, என்னவாக இருந்தார்? அயோத்திதாசரைப் பற்றிய விவரங்கள் எதுவாக இருந்தாலும் அவர் 1907 முதலாக 1914 வரை நடத்திய ‘தமிழன்’ பத்திரிகையின் வாயிலாக நமக்குக் கிடைப்பவைதான். அதில் அவர் தனது வாழ்வைப் பற்றி என்ன […]

Read more

சிறுகோட்டுப் பெரும்பழம்

சிறுகோட்டுப் பெரும்பழம், விக்ரமாதித்யனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள், வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.250. பாரதியார் நூற்றாண்டில் அன்னம் வெளியிட்ட’ ஆகாசம் நீல நிறம்’ தொகுதி மூலம் புதுக்கவிதையில் அழுத்தமான தடத்தைப் பதிக்கத் தொடங்கியவர் விக்ரமாதித்யன். கவிதையையே வாழ்வாகவும் கவிஞர் என்பதையே பிரதான அடையாளமாகவும் கொண்ட விக்ரமாதித்யனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தான்’ சிறுகோட்டுப் பெரும்பழம்’. எளிய வாசகர்களும் தங்கள் வாழ்வின் பல்வேறு பருவங்கள் மற்றும் அனுபவங்களூடாக நினைவில் வைத்துக்கொள்ளும் அழகிய கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. சாதாரண மக்களின் காதல், பிரிவு, ஏக்கம், இல்லாமை, நம்பிக்கை, அவநம்பிக்கை […]

Read more

குட்டிரேவதி கவிதைகள்

குட்டிரேவதி கவிதைகள், எழுத்து பிரசுரம், தொகுதி 1, விலை 599ரூ, தொகுதி 2,விலை 450ரூ. கவிதைக்குள் எப்படி வந்தீர்கள்? அப்பா இளம் பருவத்திலேயே தமிழ் மொழி மீது உண்டாக்கிய ஆர்வம்தான் காரணம். நிறைய சங்கப் பாடல்களை மனனமாக அவர் எனக்குச் சொல்லிக் காட்டுவார். இதனால், எனக்குத் தொடர் வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. இதற்குத் தீனிபோடும் வகையில் பழைய புத்தகக் கடைகளிலிலிருந்து எனக்கான புத்தகங்களை அப்பா தேடித் தேடி வாங்கிவந்து தருவார். நான் படித்த சித்த மருத்துவத்தில் தமிழ்மொழிப் பாடத்திட்டம் ஒரு முக்கியமான காலகட்டத்தின் சொற்களை […]

Read more

தமிழரின் தாவர வழக்காறுகள்

தமிழரின் தாவர வழக்காறுகள், பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன், உயிர் பதிப்பகம் வெளியீடு, விலை 210ரூ. தமிழக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளின் முன்னோடியும் மார்க்சிய அறிஞருமான நா. வானமாமலையின் மாணாக்கர்களில் ஒருவர் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சிவசுப்பிரமணியன், மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழ்ச் சமூகம், பண்பாடு, நாட்டார் வழக்காறு ஆகியவை சார்ந்து ஆய்வுமேற்கொண்டு, அத்துறைகளில் புது வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருப்பவர்; கோட்பாடுகளின் பெயரைச் சொல்லி அச்சுறுத்தாமல், தான் கண்டடைந்த மக்கள் வரலாற்றை எளிமையான மொழியில் சொல்லிச் செல்பவர். 78 […]

Read more
1 21 22 23 24 25 44