மொழிபெயர்ப்புக் கவிதைகள்

மொழிபெயர்ப்புக் கவிதைகள், தமிழில்: ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ், ஷேக்ஸ்பியர்ஸ் டெஸ்க், விலை: ரூ.120. அமெரிக்கப் பெண் கவிஞர் எமிலி டிக்கின்சன், இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞருமான டி.எச்.லாரன்ஸ் ஆகியோரின் கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கூடவே, அவர்கள் இருவரின் வாழ்க்கைக் குறிப்புகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நன்றி: தமிழ் இந்து, 29/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

காகமும் நான்கு மீன்களும்

காகமும் நான்கு மீன்களும், ஆர்.வி.பதி, நிவேதிதா பதிப்பகம், விலை: ரூ.65. சிறுவர்களுக்கான பல நூல்களைப் படைத்திருக்கும் நூலாசிரியர் எழுதிய 10 சிறார் கதைகளின் தொகுப்பு இது. எளிய நடையில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கதையும் குழந்தைகளுக்கான நீதிநெறி போதனைகளை வழங்குகிறது. கதைகளுக்கான ஓவியங்களை ஓவியர் கி.சொக்கலிங்கம் வரைந்துள்ளார். நன்றி: தமிழ் இந்து, 5/2/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வழிகாட்டும் வள்ளுவம்

வழிகாட்டும் வள்ளுவம், பழ.சபாரெத்தினம், பாரதி புத்தகாலயம், விலை: ரூ.165. 1,330 குறள்களில் வாழ்வுக்கு வழிகாட்டுவனவாகத் தன் கண்ணுக்குப்பட்ட 62 குறள்களைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோள்களையும் இணைத்து அவற்றுக்கு நூலாசிரியர் விளக்க உரை எழுதியுள்ளார். நன்றி: தமிழ் இந்து, 5/2/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மகிழ்ச்சி நிறைந்த மணவாழ்க்கைக்கு மணியான யோசனைகள்

மகிழ்ச்சி நிறைந்த மணவாழ்க்கைக்கு மணியான யோசனைகள், பி.எஸ்.ஆர்.ராவ், நர்மதா பதிப்பகம், விலை – ரூ.100, வாழ்க்கைத் துணையை எப்படித் தேர்ந்தெடுப்பது, தம்பதிகள் அன்புடன் இருக்க என்ன செய்ய வேண்டும். ருசியாகச் சமைப்பது எப்படி, சண்டையைத் தவிர்ப்பது எப்படி என திருமண உறவில் இருப்பவர்களுக்கு எழக்கூடிய பல கேள்விகளுக்கு இந்நூலில் விரிவாக விடையளிக்கப்பட்டுள்ளது. நன்றி: தமிழ் இந்து, 5/2/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000006889_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

குட்டி இளவரசனின் குட்டிப் பூ

குட்டி இளவரசனின் குட்டிப் பூ, உதயசங்கர், வானம் வெளியீடு, விலை 100ரூ. பிரெஞ்சு எழுத்தாளர் அந்த்வான் எக்சுபெரி எழுதிய புகழ்பெற்ற நாவல் ‘குட்டி இளவரசன்’. அந்த நாவலில் இடம்பெறும் குட்டி இளவரசன், அவன் நேசிக்கும் குட்டிப்பூ ஆகியோருடன் அந்த்வான் எக்சுபெரியும் ஒரு கதாபாத்திரமாக இடம்பெற்றிருக்கும் கதை இது. புகழ்பெற்ற இந்தக் கதாபாத்திரங்கள் இன்றைய பிரச்சினைகள் சிலவற்றின் ஊடாகச் சென்று திரும்பும் புது முயற்சியே இந்தக் கதை. இளையோர் நாவலாகச் சிறார் எழுத்தாளர் உதயசங்கர் எழுதியுள்ளார். நன்றி: தமிழ் இந்து, 6/1/2022. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

மலரினும் மெல்லிது

மலரினும் மெல்லிது, வெ.நல்லதம்பி, வள்ளுவன் வெளியீட்டகம், விலை-ரூ.300. மலர்களின் ஆவணம் நாடகங்கள், கதைகள், கட்டுரைகள் பலவற்றை எழுதியவரும் தூர்தர்ஷனில் ‘எதிரொலி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தயாரித்தவருமான மூத்த ஊடகவியலாளர் வெ.நல்லதம்பி எழுதியிருக்கும் முதல் நாவல் இது. மலர்களை விளைவிக்கும் வேளாண்குடியில் பிறந்த கமலா, நாவலின் முதன்மைக் கதாபாத்திரம். அவள் வாழ்க்கையில் முன்னேற அவளுடைய தமிழாசிரியரும் வேளாண் கல்லூரிப் பேராசிரியரும் வழிகாட்டுகிறார்கள். கமலாவுக்கும் மேலைநாட்டைச் சேர்ந்த ஆங்கிலக் கலப்புத் தமிழனான ஜார்ஜுக்கும் காதல் மலர்கிறது. கமலாவின் இத்தகைய வாழ்க்கைப் பயணத்தை முன்வைத்து மலர் விளைவித்தலில் ஈடுபடும் வேளாண்குடி […]

Read more

வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதம்

வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதம், அனந்தாச்சாரி,  அருணா பப்ளிகேஷன்ஸ், விலை – ரூ.230 எளிய தமிழ்நடையில் பாகவதம் மகாபாரதத்தை இயற்றியவர், வேதங்களைத் தொகுத்து அளித்தவர் இந்து மதத்தின் 18 புராணங்களில் 17ஐ இயற்றியவர் வேதவியாசர். அவற்றில் மிகப் புனிதமானதாகக் கருதப்படுவதும் இன்றளவும் ஆன்மிகச் சான்றோர்களாலும் சொற்பொழிவாளர்களாலும் பெரிதும் மேற்கோள் காட்டப்படுவதுமான புராணம் ஸ்ரீமத் பாகவதம். வியாசர் வடமொழியில் இயற்றிய பாகவத புராணத்தை எளிய தமிழில் அனைத்து வயதினரும் புரிந்துகொள்ளும் வகையில் கதைகளாகக் கொடுத்துள்ள நூல் இது. புராணத்தின் பத்து ஸ்கந்தங்களின் (பகுதிகள்) சாராம்சமும் 119 […]

Read more

தமிழ்ப் பண்பாட்டில் பால்வேற்றுமைப் பதிவுகள்

தமிழ்ப் பண்பாட்டில் பால்வேற்றுமைப் பதிவுகள், (பெண் தொன்மம் குறித்த ஆய்வுகள்), பெ. நிர்மலா, பல்கலைப் பதிப்பகம், விலை: ரூ.140. ‘பல்வேறு வடிவங்களில் பாதுகாக்கப்பட்டு உன்னதமான வையாகவும் முன்மாதிரிகளாகவும் காட்டப்படும் காலத்துக்கு ஒவ்வாத ஆண், பெண் பற்றிய புனைவுக் கற்பனைகளை அடையாளம் காட்டுகின்றன இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள். பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த இலக்கியங்கள், இலக்கணங்கள், சிற்பங்கள், புராணங்கள், வழிபாட்டு மரபுகள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் காணப்படுகிற பால் வேற்றுமைப் பதிவுகளை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரைகள், நாம் வாழும் ஆணாதிக்கச் சமூகத்தின் அவலத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. நன்றி: தமிழ் […]

Read more

வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி

வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி, நக்கீரன், காடோடி வெளியீடு, விலை: ரூ. 70, சிதைக்கப்பட்ட வாழ்க்கை எங்குமே பெண்களின் மீதான மதிப்பு என்பது அவர்களது உடலை மையமிட்டதாகவே அமைகிறது. அந்த மதிப்பீடு ஆண்களின் உடலுக்குப் பொருந்துவதில்லை. அத்தகைய சீரழிக்கப்பட்ட பெண் உடலின் அவலங்களைப் பேசுகிறது இந்தக் குறுநாவல். இதயம்கூட வெறும் சதையாகவே பார்க்கப்படும் பெண்களைப் பற்றிய கதை இது. சிதைக்கப்பட்ட இப்பெண்களின் வாழ்க்கை, அவர்கள் அறியாத அரசியலால் கொத்திக் குதறப்பட்டது. உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்ட, குருதிக்கறை படிந்த அந்த வரலாற்றின் ஓர் அசிங்கமான பக்கத்தை இந்நாவல் புரட்டிக்காட்டுகிறது. […]

Read more

ஒரு வாழ்க்கை சில சிதறல்கள்

ஒரு வாழ்க்கை சில சிதறல்கள் (அராபியப் பெண்ணியச் சிறுகதைகள்), தொகுப்பும் மொழியாக்கமும்: ஜான்சி ராணி. வெளியீடு,  எதிர் வெளியீடு, விலை: ரூ.160. வாழ்க்கைக் கதைகள் மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி வடக்கு ஆப்ரிக்கா வரையிலான வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த சமகாலப் பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பழமையான பண்பாட்டு விதிமுறைகள், புதிய தேவைகள், திருமணம் – தாய்மை, காதல், கல்வி, பணி, சுதந்திரம் என்று நவீன காலப் பெண்கள் அராபியச் சூழலில் எதிர்கொள்ளும் அனைத்துவிதமான சிக்கல்களையும் இவை நுணுக்கமாகப் பேசுகின்றன. நன்றி: […]

Read more
1 3 4 5 6 7 44