மகாபாரதத்தில் வரமும் சாபமும்

மகாபாரதத்தில் வரமும் சாபமும், இ.எஸ்.லலிதாமதி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.230. நுாற்றுக்கணக்கான கிளைக்கதைகளைக் கொண்டது மகாபாரதம். அந்த கதையில் வரும் பாத்திரங்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக வரம் கொடுப்பதும், சாபம் பெறுவதுமாக அமைந்துள்ளது. அது பற்றி விரிவாக உரைக்கும் நுால். மகாபாரதத்தில் கிருஷ்ணர், காந்தாரியிடம் சாபம் பெற்று பிறவி பயனை முடிக்கிறார். பண்டு, அர்ஜுனன், யயாதி, பரீட்சித், ஜனமே ஐயன், அசுவத்தாமன் என, சாபம் பெற்ற கதாபாத்திரங்களாகவே உள்ளன. குந்தி, காந்தாரி, சஞ்சயன், கிருஷ்ணர், துருபதன் போன்ற பாத்திரங்கள் வரம் பெற்றவை. […]

Read more

மகிழ்ச்சிச் சிறகுகள்

மகிழ்ச்சிச் சிறகுகள், முனைவர் இளசை சுந்தரம், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.270 ‘தினமலர்’ நாளிதழில் வெளியான ‘என் பார்வை’ என்ற பல்துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். அண்மையில் மறைந்த எழுத்தாளர் இளசை சுந்தரத்தின் கடைசி நுால். முன்னுரையிலேயே ‘நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை விதைக்கிறார். காலம் எனும் சிற்பி நம்மை செதுக்கிக் கொண்டிருக்கிறான். அதில் நாம் சிற்பமா… இல்லை சிதறி விழும் கற்களா? சிற்பமாக வேண்டுமானால் சாதனை செய்ய வேண்டும். பூமியை படுக்கையாக்குவதும், பாதையாக்குவதும் நம் கையில் தான் உள்ளது. […]

Read more

திருக்கயிலையில் நாதோபாஸனை

திருக்கயிலையில் நாதோபாஸனை, ஜெமினி ராமமூர்த்தி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. திருக்கயிலை யாத்திரை செல்ல விரும்பும் இந்திய யாத்ரீகர்களுக்கு, நினைத்த போதெல்லாம் செல்ல முடியாது. கயிலையும் மானஸரோவரும் இந்தியாவில் இல்லை; இரண்டுமே மேற்கு பகுதியில் உள்ள இமயத்தில் இருக்கின்றன. அப்படிப்பட்ட புனித தலங்களை பல சிரமங்களுக்கு இடையே நேரில் சென்று தரிசித்து, அந்த அனுபவங்களை எளிய நடையில் அனைவரும் புரிந்து அனுபவிக்கும் வகையில் ஜெமினி ராமமூர்த்தி எழுதியுள்ளார். நாமே நேரில் சென்று அந்த தலங்களை தரிசித்த அனுபவத்தை, இந்த நுாலைப் படிப்பதன் […]

Read more

வரம் தரும் அன்னை

வரம் தரும் அன்னை, பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.190. இந்து கடவுள் என்றால் இந்தியாவிலிருந்து தான் வரமுடியுமா… பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம்; மகாகாளி உருவெடுக்கலாம்; சரஸ்வதி வீணை மீட்டலாம். மகாலட்சுமி அருட்கடாட்சம் தரலாம் என்பதை உணர்த்தும் நுால். பிரான்சில் இருந்து வந்த மிர்ரா, அன்னையாக மகான் அரவிந்தர் அடியொற்றி, தத்துவங்களை பின்பற்றி நடந்தவர். நீ நீயாய் இரு என்பது தான் அன்னை சொல்லும் வேதம். உண்மை, அன்பு, பாசம் என நற்பண்புகளுடன் விளங்குவது தான் நீயாக இருப்பதன் அவசியம். […]

Read more

நட்சத்திரப் பெண்

நட்சத்திரப் பெண் – விஞ்ஞான சிறுகதைகள், ஆர்னிகாநாசர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.200 நிஜமா, கற்பனையா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு விஞ்ஞானத்துடன் கதை பேசி வடிவம் கொடுத்துள்ளார் ஆர்னிகா நாசர். இளமை துள்ளும் எழுத்துக்கு காதலும், அறிவியலும் கைகோர்த்து வெற்றி மகுடம் சூட்டுகின்றன. காலக் கடிகாரத்தை கொண்டு நல்லதை முடிக்கப் போகிறார் என்று நினைக்கும் போது, முடிவிலும் நிஜத்தைப் போலவே சோகத்தை தருகிறார். ரோபோ குழந்தையை பேச வைத்து அதிரச் செய்கிறார். பூனையும், எலியுமான ‘டாம் அண்டு ஜெர்ரி’ கதை […]

Read more

நட்சத்திர பலன்களும், ஆன்மிக குறிப்புகளும்

நட்சத்திர பலன்களும், ஆன்மிக குறிப்புகளும், ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.230. பொதுவாக எந்த ஒரு செயலைத் துவங்குவதானாலும், செய்வதாக இருந்தாலும், நாள், நட்சத்திரம், ராசி பலன் பார்த்து செய்வதே வழக்கம். அந்த அளவுக்கு அன்றாட வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுள்ள நட்சத்திரம், அதன் தமிழ் அர்த்தமும், நட்சத்திர கோவில்கள், நட்சத்திரங்களும் அபிஷேகங்களும், நட்சத்திரத்திற்கான எழுத்துகள், தெய்வங்களும் நட்சத்திரங்களும், ராசியின் பொதுப் பலன்கள், 12 ராசிகளுக்கும் வழிபாட்டு பலன்கள். ராசிக்கான வழிபாடு தானம், 12 ராசிகளுக்குரிய புனித நதிகள், 12 […]

Read more

மகான் ஸ்ரீ நாராயண குரு புனித சரிதம்

மகான் ஸ்ரீ நாராயண குரு புனித சரிதம், ஆர்.வி. பதி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.200 நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டு மக்களின் வளர்ச்சியில் இருக்கிறது; மக்களின் வளர்ச்சி என்பது அவர்களுக்கு தரப்படும் சமமான வாய்ப்புகளில் இருக்கிறது. அப்படி சம வாய்ப்பு பெற இயலாத ஏழை எளிய மக்களின் அரிய வழிகாட்டியாக அம்மக்களை உயர்த்த பாடுபட்டவர் தான், கேரளத்தில் செம்பழந்தியில் அவதரித்த ஸ்ரீ நாராயண குரு. ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம். மதம் எதுவானாலும் மனிதன் நன்றானால் […]

Read more

வரம் தரும் அன்னை

வரம் தரும் அன்னை, பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.190. இந்து கடவுள் என்றால் இந்தியாவிலிருந்து தான் வரமுடியுமா… பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம்; மகாகாளி உருவெடுக்கலாம்; சரஸ்வதி வீணை மீட்டலாம். மகாலட்சுமி அருட்கடாட்சம் தரலாம் என்பதை உணர்த்தும் நுால். பிரான்சில் இருந்து வந்த மிர்ரா, அன்னையாக மகான் அரவிந்தர் அடியொற்றி, தத்துவங்களை பின்பற்றி நடந்தவர். நீ நீயாய் இரு என்பது தான் அன்னை சொல்லும் வேதம். உண்மை, அன்பு, பாசம் என நற்பண்புகளுடன் விளங்குவது தான் நீயாக இருப்பதன் அவசியம். […]

Read more

திருவடி முதல் திருமுடி வரை

திருவடி முதல் திருமுடி வரை, அருண் சரண்யா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160 புத்தகத்தின் பெயரைப் பார்த்ததும் திருமாலும், பிரம்மனும் விஸ்வரூபம் எடுத்த சிவபெருமானின் அடியையும், முடியையும் காணச் சென்ற கதை தானே என்று நினைக்க வேண்டாம். திருவடி முதல், திருமுடி வரையான உடலின் ஒவ்வொரு உறுப்புகளைப் பற்றிய அரியின், சிவனின் திருவிளையாடல்கள் விளக்கப்படுகின்றன. சிறு சிறு கதைகளின் வழியே எளிமையாக மனதில் பதியும் வகையில் சொல்லப்பட்டுள்ளது. தன் இடையால் சிவபக்தனை திருத்திய திருமாலின் கதை சுவாரசியத்தைத் துாண்டும். ராதையின் அன்பை […]

Read more

லவகுசா

லவகுசா, தி.செல்லப்பா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.150 விசேஷம் இது வித்தியாசம் என்ற பெயரில் தமிழக கோயில்களின் அதிசயத்தக்க வரலாறு, செல்லும் வழி குறித்து எழுதிய செல்லப்பாவின் இரண்டாவது புத்தகம். கர்ப்பிணியாய் கானகம் சென்ற சீதாவின் வயிற்றில் பிறந்த கன்றுகுட்டிகளம் லவன், குசன் பற்றிய அழகான தொகுப்பு. இக்கதையில் மணமுடிக்கும் போது சீதாவின் வயது, கானகம் சென்றபோது வயது, மகப்பேறின் போதுள்ள வயதை குறிப்பிடுவது அரிய தகவல்.பொறுமையின் சிகரமான சீதா ஏன் பொங்கி எழுந்தாள்… வானளாவ புகழ்ந்து ராமகதைகள் சொல்லிய அவளது […]

Read more
1 2 3 7