பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. ராமநாதபுரம் பாம்பனில் அப்பாவுவாக பிறந்தவர் பாம்பன் சுவாமிகளாக, குமரகுருதாச சுவாமிகளாக அறியப்பட்டார். முருகனை முழுமுதற்கடவுளாக கொண்டு தமிழகம் முழுக்க யாத்திரை செய்தவர்.கற்றறிந்ததை, அறிவால் பெற்றறிந்ததை சண்முக கவசமாக, குமார ஸ்தவமாக அருளியவர். அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நுால் இது. வாழ்வின் பெரும்பகுதியை இறை அனுபவத்திற்காக மக்களின் இறை வாழ்விற்காக செலவிட்டவர் பாம்பன் சுவாமிகள்.இல்லறத்தில் இருந்து நிரந்தர துறவறம் செல்ல நினைத்தவர் முருகனே பழநிக்கு அழைத்தாரா என நண்பர் கேட்க, […]

Read more

சுவாமி விவேகானந்தர் (வாழ்க்கையும் சிந்தனைகளும்)

சுவாமி விவேகானந்தர் (வாழ்க்கையும் சிந்தனைகளும்), பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.200. எழுமின், விழிமின் என முழங்கிய வீரத்துறவி; மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என வாழ்ந்தவர்; சீர்திருத்தவாதியாகவும், ஜாதி மத இன வேறுபாடுகளைச் சாடிய ஆன்மிகவாதியாகவும், பொதுவுடைமைவாதியாகவும், இந்தியாவின் உயர்வு பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்த சிந்தனாவாதியாகவும் விளங்கியவர். இந்து மதத்தின் பெருமையை மீட்டெடுத்து அதற்குப் புத்துணர்ச்சி ஊட்டி, உலகின் பார்வையை இந்தியாவின் மீது திருப்பிய வீரத்துறவி. பாரதத்தின் புகழை வெளிநாடுகளில் பரப்பிய முன்னோடி. 39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் 300 […]

Read more

பார்த்தது கேட்டது படித்தது! பாகம் 5

பார்த்தது கேட்டது படித்தது! பாகம் 5, அந்துமணி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.600 தினமலர் – வாரமலர் இதழில், வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது, அந்துமணி எழுதி வரும், பா.கே.ப., என்ற, ‘பார்த்தது கேட்டது படித்தது’ பகுதி. இந்த பகுதியில் வெளியான கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ஏற்கனவே மூன்று புத்தகங்களாக வந்துள்ளன. நான்கு மற்றும் ஐந்தாவது தொகுதிகளை, தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது. புத்தகங்களின், ‘என்னுரை’ பகுதியில், பா.கே.ப., பகுதியை தன் டைரி என குறிப்பிட்டுள்ளார் அந்துமணி. சாதாரண மனிதனின் […]

Read more

பார்த்தது கேட்டது படித்தது – பாகம் 6

பார்த்தது கேட்டது படித்தது – பாகம் 6, அந்துமணி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.300. ஒரு சின்ன பூனைக் குடும்பம்; அதுல, அம்மா, அப்பா, ஒரு குட்டிப் பூனைன்னு அன்பு அன்பா குடும்பம் நடந்துச்சாம்… ஒரு நாள், அப்பா பூனை செத்துப் போச்சாம். அப்போ அம்மா பூனையும், குட்டி பூனையும் அப்பாவோடு பேசி மகிழ்ந்த வார்த்தைகளைச் சொல்லிச் சொல்லி அழுதுச்சாம்… அது ரெண்டும் என்ன சொல்லி அழுதுச்சுன்னு சொல்லுங்க பார்ப்போம்? ரஜினி சாரை போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொன்னா, எப்பவுமே தலையை […]

Read more

தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு தினமலர் வாரமலர் அந்துமணி பதில்களின் பங்கு

தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு தினமலர் வாரமலர் அந்துமணி பதில்களின் பங்கு, ரஜனி ரஜத், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.150. தினமலர் வாரமலர் இதழில் வெளியாகும், அந்துமணி கேள்வி – பதில்கள் பகுதியை பற்றிய ஆய்வு நுால். அரசியல், திரைப்படம், நாட்டு வளர்ச்சி, பொருளாதாரம், அறிவியல், சுற்றுப்புறச் சூழல், குடும்பம், பெண்கள் பற்றி அந்துமணி பதில்களை வகைப்படுத்தி அலசப்பட்டுள்ளது. சமுதாய விழிப்புணர்வு, பெண்கள் முன்னேற்றம், சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நாட்டுப்பற்று, மொழிப்பற்று போன்றவற்றில் அந்துமணி பதில்கள் ஏற்படுத்திய விளைவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. […]

Read more

நாளாம் நாளாம் திருநாளாம்

நாளாம் நாளாம் திருநாளாம், வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.280. அகங்காரத்தில் ஆரம்பிப்பதாக நினைத்த எழுத்தாளருக்கு அள்ளித்தரும் அன்னையின் வரம் அந்த நிமிடமே கிடைத்தபோது மனம் மைசூர்ப்பாகாய் கரைந்துவிட்டது. துணையாக கண்ணீர் சேர்ந்து உப்புச்சீடையாக மாறிவிட்டது. சில நேரங்களில் யாரும் தான் கேட்கமாட்டார்களே என நிஜமான, ‘மைண்ட் வாய்சில்’ மனசுக்குள்ளேயே பேசிய நிகழ்வு நடந்திருக்கும். உடனடியாக நிறைவேறும் போது அதை அனுபவிக்க முடியாமல் மனம் தடுமாறும். இங்கும் அப்படித்தான் அன்னையின் அன்பை நினைந்து மனம் கரைந்து உப்புச்சுவடுகளின் வழியே அப்பனை […]

Read more

எண்களின் ஜாலங்கள்

எண்களின் ஜாலங்கள், இரா.சிவராமன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.100. தொடர் வரிசைகள் என்றால் என்ன? பிரமிப்பூட்டும் தொடர் வரிசைகள் எவை? கணிதத்தின் அற்புத பண்புகள் என்னென்ன? கூட்டுத் தொடர் வரிசை எண் அறைகளில் வண்ணமிடும் விளையாட்டு, கணிதத்தில் புதிதாக கண்டுபிடிக்க வாய்ப்புள்ளதா? உடனடியாக கூட்டலை கண்டறியும் முறை எது? கணிதத்தில் மிக அடிப்படை அம்சமாக கருதப்படுவது எது? இது போன்ற சிக்கலான் விஷயங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் வரைபடங்கள், விளக்கங்கள் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார் நுாலாசிரியர் முனைவர் இரா.சிவராமன். – […]

Read more

இளையோரே, இனியவை கேளீர்!

இளையோரே, இனியவை கேளீர்! (நன்னெறிக் கதைகள்), பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.360. பொதுவாகவே பலருக்கு நல்ல விஷயங்களை நேரடியாக சொன்னால் பிடிக்காது. கசப்பான மருந்தை தேன் தடவியோ, காப்ஸ்யூலில் அடைத்தோ தருவதைப் போன்று, பல நல்ல கருத்துகளை குட்டிக் கதைகள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த நுாலின் ஆசிரியர். அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தரித்ததைப் போன்று, இந்த நுாலில் உள்ள இரு பக்க கதைகளில் ஏராளமான வாழ்க்கைத் தத்துவங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். நுாலின் தலைப்பு, ‘இளையோரே […]

Read more

நெஞ்சினில் ரஞ்சனி

நெஞ்சினில் ரஞ்சனி, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.210. ‘வானமழை நீ எனக்கு’ நாவலில் அழகும் அறிவும் ஐஸ்வர்யமும் நிறைந்த ரஞ்சனியை பின்தொடர்ந்த ஆசிரியர், நான்கு வார சந்திப்பின் மூலம் அவளை நிரந்தர மாக பிரியும் நிலைக்கு தள்ளப்படுவார். அவள் அளித்த அன்புப் பரிசாக கைக்கடிகாரத்தை பார்த்து காலத்தை ஓட்டும் போது, திடீரென அவள் மீண்டும் வருகிறாள். மதுரை மீனாட்சி கோவிலில் ஒயிலாக நடந்து எழிலாக வளைய வந்து தன்னை ஆட்கொண்ட அந்த பேரழகு, இந்த நாவலில் நடை பயிலாமல் […]

Read more

ரத்தத்தின் ரத்தமே

ரத்தத்தின் ரத்தமே, எஸ்.ரஜத், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. நிறமும், அழகும் கடவுள் நிறைய பேருக்கு கொடுத்திருக்கிறார். ஒரு சிலர் தான் நிறம், அழகைத் தாண்டி, நல்ல குணத்தால் காலமெல்லாம் தன் புகழை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றனர். எம்.ஜி.ஆர்., தியேட்டரைத் தாண்டி, மக்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்த நிரந்தர முதல்வர். சிம்லாவில் நம் ராணுவத்தினரை ரசிக்க வைத்த கலாரசிகன். படப்பிடிப்பின் போது உடல் களைத்தாலும், மனம் களைக்காமல் ரசிகர்களை கொண்டாடும் தலைவன். கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கும் என்பதை மக்களின் வேண்டுதல் […]

Read more
1 2 3 4 7