ஆன்மிக ஒளியில் அறிவியல்

ஆன்மிக ஒளியில் அறிவியல், ப.திருமலை, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.240. அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் போன்ற பொருட்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள் போன்ற அனைத்தையுமே முன்னோர் ஒரு அர்த்தத்துடன் தான் செய்து வந்திருக்கின்றனர். நம் பழக்க வழக்கங்களில் உள்ள அறிவியல் உண்மைகளை மறந்து விட்டு, வெறும் சடங்குகளாக பார்ப்பதால் உரிய முக்கியத்துவம் தர மறுக்கிறோம். இத்தகைய ஆன்மிக பழக்க வழக்கங்களில் பொதிந்துள்ள அறவியல் ரகசியங்களை வெளிக் கொண்டு வரும் முயற்சி தான் இந்த புத்தகம். முப்பது சிறிய கட்டுரைகளை உள்ளடக்கியது; மருந்துப் […]

Read more

வருவான் வடிவேலன்

வருவான் வடிவேலன், தி.செல்லப்பா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. அழகன் முருகன் தமிழுக்கு சொந்தமானவர். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரம் சரவணபவ. இதனுடன் மந்திரச் சொற்களை சேர்க்கும் போது சக்தி அதிகமாகும். குருவின் மூலம் உபதேசம் பெற்று, நியமநிஷ்டையுடன் இருந்தால் மட்டுமே மந்திரம் சொல்ல வேண்டும். கந்தசஷ்டி கவசம் எழுதிய தேவராய சுவாமிகள் மந்திரச் சொற்களை சேர்த்து கட்டமைத்தார். இந்த வரிகளைச் சொன்னால் நியமத்துடன் மந்திரம் சொன்னதாக அர்த்தம். சரவணன், முருகன், கந்தன் பெருமைகளை தொகுத்து, ‘தினமலர் ஆன்மிகமலர்’ இதழில் வெளிவந்தது, ‘வருவான் […]

Read more

கந்தனே உனை மறவேன்

கந்தனே உனை மறவேன், திருப்புகழ் மதிவண்ணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.220. ‘சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை! சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை!’ என்ற பழமொழிக்கு இணங்க, முப்பத்து முக்கோடி தேவர்களும் வணங்கும் தேவ சேனாதிபதி வரலாற்றை விளக்கும் நுால். பக்திரசம் சொட்ட எழுதியுள்ளார் மதிவண்ணன். கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள், நக்கீரர், தாயுமானவர், வள்ளுவர் போன்றவர்களின் படைப்புகளில் இருந்து மேற்கோள் காட்டி, சரளமான நடையில் தற்கால பாடல் வரிகளையும் புகுத்தி எழுதப்பட்டுள்ளது. கந்தனின் பிறப்பு, வளர்ப்பு, திருவிளையாடல்கள், வேல் […]

Read more

ஸ்ரீமந் நாராயணீயம் பாகம் – 2

ஸ்ரீமந் நாராயணீயம் பாகம் – 2, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.290. கேரளாவைச் சேர்ந்த நாராயண பட்டத்திரி, தன் குருவுக்கு வந்த வாதநோயை, தனக்கு மாற்றுமாறு வேண்டிக் கொண்டார். குரு நலம் பெற, நாராயண பட்டத்திரிக்கு வாதநோய் ஏற்பட்டு உடலை வருத்தியது. இந்த நோயை தீர்க்குமாறு, கேரளாவில் உள்ள குருவாயூரப்பனை வேண்டுகிறார். வெறும் வேண்டுதலாக இல்லாமல் பாடல்களாக பாடுகிறார். 10 ஸ்லோகங்கள், ஒரு தசகம் வீதம் 1,000 ஸ்லோகங்கள் இயற்றுகிறார். ஒவ்வொரு தசகத்தையும் பெருமாளிடம் படித்து காட்டி, சரி செய்ததாக வரலாறு […]

Read more

எப்போதும் எம்.ஜி.ஆர்.

எப்போதும் எம்.ஜி.ஆர்., எல்.முருகராஜ், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.140. கட்சி பேதமில்லாமல் எல்லார் உதடுகளும் உச்சரிப்பது, எம்.ஜி.ஆர்., பெயரைத் தான்; அவரை பார்க்க, ஓர் அரசு ஊழியர் வருகிறார். ‘எனக்கு இப்போது தான் திருமணமாகி உள்ளது. மனைவியும் அரசு ஊழியர். ஆனால், அவர் ஒரு ஊரில் இருக்கிறார்; எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்…’ என்கிறார். கணவனும், மனைவியுமாக இருக்கும் அரசு ஊழியர்கள், ஒரே ஊரில் பணியாற்ற உத்தரவிடுகிறார். ‘கிராம கோவிலில் அன்றாடம் விளக்கேற்ற விரும்புகிறோம். அதற்கு எண்ணெய் வாங்க வழியில்லை…’ என்று, […]

Read more

திருப்புமுனையான திரைப்படப் பாடல்கள்

திருப்புமுனையான திரைப்படப் பாடல்கள், ஜி.எஸ்.எஸ்.,, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. மொழிக்கு இசையில்லை. ஆனால் பாடலுக்கு மொழி அவசியம். கவிஞர்களின் ரசனையில் தோய்ந்து வரும் வார்த்தைகள் வரிகளாக கட்டமைக்கும் போது, மொழி புரிந்தால் மட்டுமே மனம் லயிக்கும். 32 முத்தான பாடல்களை, அவற்றின் வரிகளை படமாக்கப்பட்ட விதத்தை, ஒளிப்பதிவு கோணத்தை, இன்னும் சில கூடுதலான தகவல்களோடு சேர்த்து காவியமாக்கியுள்ளார் நுாலாசிரியர் ஜி.எஸ்.எஸ்., ‘திருப்புமுனையான திரைப்பட பாடல்கள்’ புத்தகத்தில் ஒவ்வொரு பாடலுக்குமான பாடலாசிரியரின் தாக்கத்தையும் தெளிவுபடுத்தியது அருமை. தசாவதாரம் படத்தில், ‘கல்லை மட்டும் […]

Read more

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.200. இறைவனின் அன்பு எல்லையில்லாதது. படித்தவர், உயர்குலத்தவர் என்றெல்லாம் இறைவன் பகுத்தறிந்து அன்பை தருவதில்லை; பெறுவதும் இல்லை. எளிமையும், எல்லையில்லா சரணாகதியும் தான் இறைவனை மனித உடலுக்கு ஒன்றச் செய்கிறது. அதிலுள்ள உயிரை உருக்கி தன்னை நோக்கி வரச் செய்கிறது. படிக்காவிட்டாலும் எளிமையான காளி பக்தியால் தன்னை உயர்த்திய ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றிய வரலாறு இது. காளியின் அருளால் அனைத்து மதங்களின் சாராம்சங்களையும் முழுமையாக அறிந்தவர். அனைத்தும் காட்டும் வழி ஒன்றே […]

Read more

ஓம் சக்தி!

ஓம் சக்தி! தமிழக சக்தி பீடங்கள், பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. ஓம் சக்தி என்ற இந்த புத்தகத்தில் அம்மன்களின் வரலாறும், சிறப்பும் தொகுக்கப்பட்டு உள்ளது. அனைத்திற்கும் ஆதியானவள் அன்னை காமாட்சி காஞ்சியிலே குடியிருக்கும் விதம், ஆதிசங்கரர் கோவிலை அமைத்த விதம், தீய சக்திகளிடம் இருந்து பக்தர்களை காத்தருளிய கருணை ஆகியவற்றை ஆசிரியர் பிரபுசங்கர் குறிப்பிடுகிறார். அன்னை காமாட்சியின் அருள் கிடைப்பதற்கான ஸ்லோகங்களையும் விவரிக்கிறார். இரண்டாவதாக அன்னை மீனாட்சியின் அருளை புத்தகத்தில் வாரி வழங்குகிறார். அன்னையின் வரலாறு, மதுரையின் […]

Read more

ஒரு கதைசொல்லியின் கதை

ஒரு கதைசொல்லியின் கதை, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.230. கதை சொன்னா அன்பும் நம்பிக்கையும் வந்துருமா… ஏன் சின்ன குழந்தையா இருக்கறப்போ அம்மா நிலாவை காட்டி கதை சொல்லி தானே சோறு ஊட்டுனாங்க. அப்போ நம்பினோம். மனமும் உடலும் ரணப்பட்டு கிடக்கும் போது, யாராவது பேசுவாங்களானு ஏங்குற மனசுக்கு கதை சொன்னா பிடிக்கும். அதை சிவா செய்து கொண்டிருக்கிறான். வேண்டாமென்று உதறித் தள்ளிய காதலி, குண்டடிபட்டு கிடக்கும் போதும் அன்பு மாறாமல் சிவாவால் பாதுகாக்க முடிகிறதென்றால், அந்த காதல் […]

Read more

ஸ்ரீ சேஷாத்ரி ஆயிரம்

ஸ்ரீ சேஷாத்ரி ஆயிரம், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்,  விலைரூ.290. பற்றில்லாத நிலை என்பது தன்னை மறத்தல். உடம்பை, உணவை மறந்து போதல். தெய்வக்குழந்தையாக பிறந்து வளர்ந்த ஸ்ரீசேஷாத்ரியும் அந்த நிலையை இளம்வயதிலேயே அடைந்தார். பதின்ம வயதில் தந்தை, தாத்தாவை இழந்து பின்னர் தாயை இழந்த நிலையில், தாய் சொன்ன அருணாச்சலம் என்ற வார்த்தையை மட்டும் பற்றுக்கோடாக கொண்டார். உணவை மறந்த உடல் நலிந்தாலும் அருணாச்சல மந்திரத்தால் உள்ளம் உறுதியடைந்தார். அப்படியே ஊருக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். சேஷாத்ரி கதையை படிக்க […]

Read more
1 2 3 4 5 7