சீனாவின் கொரோனா அரசியல்

சீனாவின் கொரோனா அரசியல், கோலாகல ஸ்ரீநிவாஸ், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 68, விலை 70ரூ. மனிதரிடம் இருந்து மனிதருக்கு கொரோனா வைரஸ் பரவாது என, ஜன., 14ம் தேதி சீன அரசு, உலக சுகாதார நிறுவனத்துக்கு அறிக்கை கொடுக்கிறது. அதை மீளாய்வு செய்யாமல் அப்படியே காப்பியடித்து உலகத்துக்கு அறிவிக்கிறது, WHO. இங்கே தான் வைரஸால் மனிதப் பேரழிவு துவங்கியது. இப்படித் தான் சீனா, உலக நாடுகளை ஏமாற்ற ஆரம்பித்தது என்ற, வேரில் இருந்து துவங்குகிறார் ஆசிரியர் கோலாகல ஸ்ரீநிவாஸ்.வைரஸால், 184 […]

Read more

சேக்கிழாரின் பெரியபுராணம்

சேக்கிழாரின் பெரியபுராணம், 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில், பா.க.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 344, விலை 360ரூ. நாடி ஜோதிடத்தில் வல்லவரான நுாலாசிரியர் ரமணன் எழுதிய நுால் சேக்கிழாரின் பெரியபுராணம் – 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில். 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, சிவபெருமான் அவர்களுக்கு கொடுத்த சோதனைகள், அந்த சோதனையைத் தாண்டி அவர்களின் இறைபக்தியை ஊரறியச் செய்து ஆட்கொண்ட விதம் ஆகியவற்றை நுாலாசிரியர் விளக்குகிறார். நாயன்மார்கள் மீதான சிவபெருமானின் அளவு கடந்த பக்தியை கேள்விப்பட்டு, ரமண […]

Read more

தமிழ்நாட்டு கொலை வழக்குகள் பாகம் 2

தமிழ்நாட்டு கொலை வழக்குகள் பாகம் 2, கோமல் அன்பரசன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 132, விலை 120ரூ. இரண்டாம் பாகமாக இரட்டிப்பு கொலை வழக்குகளுடன் சுடச் சுட வந்துள்ளது, ‘தமிழ்நாட்டு கொலை வழக்குகள்!’ பல நேரங்களில் செய்திகளை விட அதன் பின்னணி ஆச்சரியம், அதிர்ச்சி தரும் என ஆசிரியர் கோமல் அன்பரசன் தன், ‘என்னுரை’யில் குறிப்பிட்டு, உண்மை தன்மை மாறாத கதை படிக்கலாம் என நம்பிக்கை தருகிறார். ஆட்டோ சங்கர், நாவரசு, பிரேமானந்தா, டாக்டர் பிரகாஷ் என முக்கிய வழக்குகளின் […]

Read more

சங்ககால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி

சங்ககால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி, முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக்.114, விலை 800ரூ. ஒருவரின் வாழ்க்கையில் சிறப்புத் தரவுகளை மணம் வீசும் மலர்களாக்கி தொடுத்து மகிழ் மாலையாக்கும் வித்தையை ஒருவர் கற்றிருந்தால் மட்டுமே, அந்தப் படைப்பு வரவேற்பைப் பெறும் என்ற கருத்தை, முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் ப.க.பொன்னுசாமி, தன் முன்னுரையில் கூறியிருப்பதை, இந்த தமிழ் கூறும் நல்லுலகம் அறிய, இந்த நுால் ஒரு சிறந்த உதாரணம். தமிழ் நாளிதழ், ‘தினமலர்’ எழுத்துச் சீர்திருத்தம். கணினியில் எழுத்துருவப் […]

Read more

கர்த்தரின் நாமத்தில்

கர்த்தரின் நாமத்தில், சகோதரி லூசி களப்புரா, தமிழில் ஜி.வி.ரமேஷ்குமார், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 128, விலை 130ரூ. நுாலாசிரியர் ஜி.வி.ரமேஷ்குமாரின் நான்காவது படைப்பு இது. மலையாளத்தில் வெளிவந்த சகோதரி லுாசி களப்புராவின், ‘கர்த்தரின் நாமத்தில்’ என்ற நுாலை தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். கேரள கிறிஸ்துவ மிஷனரிகளில் நடக்கும் அதிகார துஷ்பிரயோகம், ஆணாதிக்க மனநிலை, பெண் அடிமைத்தனம், பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக துணிச்சலாக குரல் எழுப்பியவர் கன்னியாஸ்திரி லுாசி களப்புரா; அவரின் வாழ்க்கை கதையே இந்த நுால். மலையாளத்தில் அவர் எழுதியதை […]

Read more

சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா, எல்.முருகராஜ், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலை 120ரூ. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புதிதாக மாலை போட்டு, விரதமிருந்து அய்யப்பனை காணத் தயாராகியிருப்பர். இவர்களுக்கு எல்லாம் சபரிமலை அய்யப்பன் கோவில் பற்றி அவர்களது குருசாமி நிறைய சொல்லியிருந்தாலும், அதையும் தாண்டி மனதில் பல சந்தேகம் இருக்கும். எல்.முருகராஜ் ஒரு புகைப்படக் கலைஞர் என்பதால், புத்தகம் முழுவதும் பல வித்தியாசமான வண்ணப் படங்கள் பொக்கிஷம் போல நிறைந்து உள்ளன. வரும், 2020 மகர விளக்கு தரிசனம் வரை என்ன விசேஷம், எப்போது […]

Read more

பார்வையை மாற்றுங்கள் பாராட்டுகள் நிச்சயம்

பார்வையை மாற்றுங்கள் பாராட்டுகள் நிச்சயம், ஜி.எஸ்.எஸ்., தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலை 140ரூ. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் தவறான அனுமானங்களை வளர்த்துக் கொள்ளக்கூடாது. நினைத்ததை சாதிக்க முடியாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம், நம்மைச் சுற்றி நடக்கும் மாற்றங்களை நாம் உணராமல் போவது தான். இது தான் இந்த புத்தகத்தில் நுாலிழையாய் தொடர்ந்து நம்மை வழிநடத்துகிறது. எதையும் மாத்தி யோசி என்பது தான் எழுத்தாளரின் கண்ணோட்டம். இப்படி ஆகிவிட்டதே என வருந்துவதை விட, எப்படி மாற்றினால் நன்றாக இருக்கும் என […]

Read more

உன்னை அறிந்தால்

உன்னை அறிந்தால், லட்சுமி ராஜரத்னம், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 120, விலை 120ரூ. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை. வார்த்தை தவறி விட்டால்… அதன் விளைவுகள் சொல்லொணா துயரம் தருகின்றன. நெல் போட்டால் நெல் விளையும். சொல் போட்டால் சொல் தானே விளைய வேண்டும். மாறாக துன்பம், கோபம், ஆற்றாமை, ஆதங்கத்தை ஏன் அறுவடை செய்ய வேண்டும் என, கேள்வி கேட்கிறார், ஆசிரியர் லட்சுமி ராஜரத்னம். மக்கு பல், உதட்டை கடவுள் ஏன் கொடுத்திருக்கிறார் தெரியுமா என்பது அவரது கேள்வி. […]

Read more

பசுமை நிறைந்த நினைவுகளே

பசுமை நிறைந்த நினைவுகளே, எல்.முருகராஜ், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலை 450ரூ. பிரிக்க முடியாதது வாரமலரும் வாசகர்களும் என்பதற்கேற்ப, 25 ஆண்டுகளாக வாசகர்களை குற்றாலத்திற்கு அழைத்துச் செல்லும் மாபெரும் பணியை செய்து வருகிறது, ‘தினமலர்’ வாரமலர். மூலிகைகளுடன் நம்மை தொட்டு விளையாடும் குற்றாலம் அருவிக்கு மட்டும் கூடுதல் வரம் கொடுக்கப்பட்டிருக்கிறது போல. மழையின் சாரலுடன் அருவியின் சாரலும் இணைந்து ஏற்படுத்தும் அனுபவம், வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பரவசம். அந்த குற்றாலத்திற்கு வாசகர்களை அழைத்துச் செல்லும், ‘தினமலர்’ குழுவுடன் இணைந்து பயணித்து வரும் […]

Read more

அடிப்படை மார்க்கெட்டிங் கோட்பாடுகள்

அடிப்படை மார்க்கெட்டிங் கோட்பாடுகள், எஸ்.ரங்கராஜன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 172, விலை 150ரூ. விளம்பரம் இல்லாத உலகம் ஏது? நம்மைப் பற்றி மற்றவர்களின் நன்மதிப்பைப் பெறுவதும் ஒரு வகையில் விளம்பரம் தான். பூவுக்கும், நாருக்கும் மட்டுமல்ல… அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுக்கும் விளம்பரம் பிரதானமாக உள்ளது. மார்க்கெட்டில் எத்தனை வகை பொருட்கள் இருக்கிறது என்பதை விட, எத்தனை பொருட்கள் வாடிக்கையாளர்களின் மனதில் இடம் பிடிக்கின்றன என்பது தான் முக்கியம். அந்த வகையில், உற்பத்தியாளர்களின் விளம்பரங்கள் பெற்ற வளர்ச்சி, வீழ்ச்சி, வெற்றி, […]

Read more
1 3 4 5 6 7