போலீஸ் ஒரு நிருபரின் வாக்குமூலம்

போலீஸ் ஒரு நிருபரின் வாக்குமூலம், க. விஜயகுமார், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 96, விலை 90ரூ. இந்த புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவதற்கு முன், முதலில் இந்நுாலின் ஆசிரியர் க.விஜயகுமாருக்கு வாழ்த்துரையை வழங்கி விடுவோம். காவல் துறை குறித்து, இப்படி ஒரு வெளிப்படையான வாக்குமூலத்தை புத்தகமாக எழுத, மனதில் நிறைய, ‘தில்’ வேண்டும். அந்தளவுக்கு காவல் துறையில் ‘தில்லுமுல்லு’ செய்யும் கறுப்பு ஆடுகளை தோலுரித்து காட்டியுள்ளார். 15 ஆண்டுகளாக, ‘தினமலர்’ நாளிதழில் ‘க்ரைம் ரிப்போர்ட்டர்’ ஆக பணியாற்றிய காலகட்டங்களில், அவர் சந்தித்த […]

Read more

முத்திரை சிறுகதைகள்

முத்திரை சிறுகதைகள், தொகுப்பாசிரியர் கி.ராமசுப்பு, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 156, விலை 140ரூ. கதைகள்… மனித வாழ்வின் அனுபவத்தை பூர்த்தி செய்யும் மாபெரும் ஆயுதம்! கதைகள் இல்லா விட்டால்; கற்பனைகள் இல்லாவிட்டால் மனித வாழ்வு வறட்சி கண்டு விடும். தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை, ஆயிரமாயிரம் ஆண்டு காலமாகவே கதை கேட்டே வளர்ந்த சிறப்புடையது. தாத்தா – பாட்டி, கூத்து, நாடகம், புத்தகம், சினிமா… என எந்த வழியிலாவது கதைகள் நம்மை வந்தடைந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது… கூத்தும், நாடகமும் காணாமல் […]

Read more

மனசில் பட்டதை

மனசில் பட்டதை, ஆண்டாள் பிரியதர்ஷினி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், 184, விலை 180ரூ. கடவுளை கடவுளாகப் பார்ப்பது ஒரு வகை. கடவுளை மனிதனாகப் பார்ப்பது இன்னொரு வகை. கடவுளை, தந்தை – தாயாக, தோழன் – தோழியாக பார்ப்பது என்ன வகை… எந்த வகையிலும் சேராத பந்த வகை. ‘எவ்வளவு பக்கத்தில் கடவுளை பார்க்க முடியும்… எவ்வளவு பக்குவத்தில் அவரை உணர முடியும்’ என, எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? உண்டு எனில், உங்கள் மனசுக்குள் நீங்கா ரீங்காரமிட காத்திருக்கும் ஆன்மிக வண்டு […]

Read more

நல்லிரவு

நல்லிரவு, க.விஜயகுமார், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 96, விலை 80ரூ. ‘குட் நைட்’ சொல்வது பகலிலா, இரவிலா? என்று ‘டாக் ஷோ’ நிகழ்த்தும் அளவிற்கு ‘துாங்கா உலகின்’ துாக்கம் மாறிக் கொண்டே வருகிறது. 20 வயதில் தலைகீழாக படுத்துக் கொண்டு விடிய விடிய இரவைக் கழிக்கும் ‘நவ நாகரிகர்’களால், 40 வயதில் நேராக உட்கார்ந்து மலம் கூட கழிக்க முடியாமல் போகிறது. எனவே, துாக்கமின்மைக்கு, ‘வேலை, வெட்டி’ என்று ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். ‘காரணம் இருக்கட்டும், நிவாரணம் இருக்கிறதா?’ […]

Read more

ஆன்மிகம் அறிவோமா

ஆன்மிகம் அறிவோமா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 60, விலை 60ரூ. மனிதர்களுக்கும், மகான்களுக்கும் என்ன வித்தியாசம்? தமக்கு மேலே இருக்கிறவர்களையே எப்போதும் மனிதர்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்… ‘அவர்களைப் போல் ஆவது எப்போது?’ என்கிற ஆசையில்! தமக்கு கீழே இருக்கிறவர்களையே எப்போதும் மகான்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்… ‘அவர்களும் நம்மைப் போல் ஆவது எப்போது?’ என்கிற அக்கறையில்! அந்த வகையில், நல்வாழ்விற்கு மகான்கள் காட்டிய பாதை இரண்டு. ஒன்று ஆன்மிகம்; இன்னொன்று நற்பண்பு. இவை இரண்டும் ஒரே புள்ளியில் இணையும் இரு கோடுகள். […]

Read more

காற்றாய் வருபவள்

.காற்றாய் வருபவள், இ.எஸ்.லலிதாமதி, தாமரை பிரதர்ஸ் மீடியா பி.லிட், விலை 60ரூ. இருக்கு ஆனா இல்லை. இந்த இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளியில் ஒளிந்திருக்கும் ஒரு மர்ம முடிச்சுத் தேடுதலில் பல திடுக் சம்பவங்களுக்கு நடுவே தன் சொந்தத்தின் சூட்சும உருவைக் கண்டறியும் காதல், சென்டிமென்ட் கலந்த பேய்க் கதை. நன்றி: குமுதம், 14/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026798.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பரிபூரண அருளாளன்

பரிபூரண அருளாளன், ஆர்.வெங்கடேஷ், தாமரை பிரதர்ஸ் மீடியா பி.லிட், பக். 104, விலை 100ரூ. திருவண்ணாமலை, பல யோகிகளையும், ஞானிகளையும் வழங்கிய அக்னி மலை. அங்கேதான் ரமணர், சேஷாத்ரி சுவாமிகள் உள்ளிட்டோர் வாழ்ந்தனர். உ.பி.யில் இருந்து, 1950களில், திருவண்ணாமலை வந்து, 40ஆண்டுகள், பக்தர்களுக்கு அருளியவர், யோகி ராம் சுரத்குமார். சாமி, பகவான், யோகி, விசிறி சாமியார் என்றெல்லாம் உணர்ச்சி பெருக்குடன் பக்தர்கள் வழிபட்டனர். அவரின் அருள் பெற்றோரின் அனுபவத் தொகுப்பே இந்நூல். நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

தோள் சாயும் பொழுது

தோள் சாயும் பொழுது, இ.எஸ்.லலிதாமதி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 80,விலை 60ரூ. ஆணும், பெண்ணும் நண்பர்களாகவே எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்… பள்ளி வரை அல்லது கல்லூரி வரை… அதற்கும் மேல் திருமணம் வரை… அதிகபட்சம் பேரால் இவ்வளவு தான் கடந்திருக்க முடியும்… ஆனால், ‘தோள் சாயும் பொழுது’ நாவல், மேற்சொன்ன எல்லாவற்றையும் கடந்த ஆண், பெண் நட்பை நம் மனக் கண்ணில் பிரதிபலிக்கிறது. இளமை காலத்தில், ‘புரியாத உறவு’ உணர்வுடன் இருந்ததை, இருவருக்குமான உறவின் முரண்களை பேசுகிறது. திருமணத்திற்கு […]

Read more

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம், இந்திரா சவுந்தர்ராஜன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 272, விலை 150ரூ. காலத்தால் அழிந்திடாத வெகு சில நுால்களில் மகாபாரதமும் ஒன்று. மானுடத்தின் மலிவான சங்கதிகளில் இருந்து, தெய்வீகத்தின் உன்னதம் வரை சகலத்தையும் இது தன் வசம் கொண்டிருக்கிறது. ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், இதன் மூலக்கதை தெரிந்த அளவு, கிளைக்கதைகள் பலருக்கு தெரியவில்லை. பல துணைப்பாத்திரங்கள் அறியப்படாமலேயே வியாசரின் மூல நுாலில் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களையும் பிரபலப்படுத்தி இருக்கிறது இந்த நுால். இதைப் படித்து முடிக்கையில், […]

Read more

எச் 2 ஓ

எச் 2 ஓ, ஜோதி மகாதேவன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெ, பக். 68, விலை 50ரூ. ‘எச் 2 ஓ’ – இந்த தலைப்பு ஏற்படுத்திய ஆர்வத்தில் புத்தகத்தை திறந்து முதல் வரி வாசித்தால், ‘ஓசோன் பரவிய கிழக்கு கடற்கரை சாலை காற்று…’ என, ஆரம்பிக்கிறது நாவல். மிக நேர்த்தியான எழுத்து நடையால், சினிமா பார்ப்பது போல் கதைக்களம் காட்சிகளாய் விரிகிறது. சென்னையில் வேலை பார்க்கும் மிடில் கிளாஸ் இளைஞனுக்கும், ஹை கிளாஸ் அப்பார்டமென்ட்டில் வாழும், ஒரு பேரழகிக்கும் இடையேயான சுவாரசிய […]

Read more
1 4 5 6 7