கனவெனும் மாயசமவெளி

கனவெனும் மாயசமவெளி, ஆர்னிகாநாசர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.180. ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் மூன்றாம் தொகுப்பின் பெயர் கனவெனும் மாயசமவெளி. இந்த பெயரில் வரும் சிறுகதை தான் செம த்ரில்லர் கதை. கனவுகளை களவாடும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பற்றிய கனவு… கனவுக்குள் கிரைம்… த்ரில்லர்… கில்லர்… நனவிலும் தொடரும் திகில் என பய பிராந்தியம் ஏற்படுத்துகிறது. மின்சார ஈல் மீன்களைப் பற்றிய கதை சற்றும் எதிர்பாராதது. அதன் மரபணுவை மனிதன் எப்படி பயன்படுத்தி ஜெயிக்கிறான் என்பது விறுவிறுப்பான கதை. நுாறாண்டு […]

Read more

மன அழுத்தத்திலிருந்து நிம்மதி

மன அழுத்தத்திலிருந்து நிம்மதி, க.விஜயகுமார், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.180 நிம்மதியான வாழ்க்கைக்கு நல் வழிகாட்டி! மனிதன், ‘தன்னை உணர’ சில தேவைகளைப் பெற்றாக வேண்டும். உளவியல் அறிஞர் ஆப்ரஹாம் மாஸ்லோவின் உயிர், பாதுகாப்பு, உணர்வு பரிமாற்றம், நிலைத்திருத்தல், உணருதல் சார்ந்த தேவைகளை அழகாக விளக்குகிறார் விஜயகுமார். தேவையே இல்லாமல் சிலர் பிறக்கின்றனர்; தேவைகளை தேடி சிலர் வாழ்கின்றனர்; தேவை கிடைக்காமலே சிலர் மறைகின்றனர். எதிர்பார்ப்பு, ஏமாற்றங்களுக்கிடையே மனப் பிரச்னை இருக்கிறது. ஆங்கிலத்தில் STRESS என்கிற வார்த்தைக்கு, ’மன அழுத்தம்’ என்று […]

Read more

லவ குசா

லவ குசா, தி.செல்லப்பா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.150. விசேஷம் இது வித்தியாசம் என்ற பெயரில் தமிழக கோவில்களின் அதிசய வரலாறு, செல்லும் வழி குறித்து எழுதிய செல்லப்பாவின் இரண்டாவது புத்தகம். கர்ப்பிணியாய் கானகம் சென்ற சீதாவின் வயிற்றில் பிறந்த கன்றுக்குட்டிகளாம் லவன், குசன் பற்றிய அழகான தொகுப்பு இது. இக்கதையில் மணமுடிக்கும் போது சீதாவின் வயது, கானகம் சென்ற போது வயது, மகப்பேறின் போதுள்ள வயதை குறிப்பிடுவது அரிய தகவல். பொறுமையின் சிகரமான சீதா ஏன் பொங்கி எழுந்தாள்… வானளாவ […]

Read more

நம்மாழ்வார்

நம்மாழ்வார், வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.230. கயிற்றில் வித்தை காட்டும் கழைக் கூத்தாடி போல, எழுத்தில் வித்தை காட்டி நம்மை ஆட்டுவிப்பவர் நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. அவர் வார்த்தைகளை படித்துக் கொண்டு வேறெதையும் சிந்திக்க முடியாது. அந்த வார்த்தைகள் படமாக மனக் கண்ணில் விரிந்து சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து, அழ வைத்து நாடகமாடும். இது, அவரது வார்த்தைகளுக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம். சான்றின் ஒரு பருக்கையாக கிஸ்னா… என் கூட்டுக்காரா… ஆச்சார்யா கதாபாத்திரங்களைச் சொல்லலாம். அழகனை, […]

Read more

புல்லாங்குழல்

புல்லாங்குழல், ஆர்னிகாநாசர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160 ஆசிரியர் ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் தொகுப்பின் கடைசி புத்தகம் புல்லாங்குழல். கற்பனைக்கு எட்டாத அதிசயங்களை அழகான கதையாக பிணைத்து உள்ளார். கதைக்கு கதை அறிவியல் வித்தியாசங்களை காட்டி அதிசயிக்கச் செய்யும் ஆசிரியரின் கைவண்ணத்துக்கு ஒரு கோப்பை தேநீர், காகித அம்பு கதைகளே சான்று. முனியம்மா ரயில் வண்டி நிலையம்… இனிமேல் நடக்கப் போகும் கூத்தின் ஆரம்ப கட்ட யதார்த்தம். ஆசிரியரின் கற்பனைக் கதைகளுக்கான அறிவியல் தேடல் மிக அதிகம் என்பதை அவரது […]

Read more

கோயிலுக்குப் போகலாமா, சுட்டிகளே!

கோயிலுக்குப் போகலாமா, சுட்டிகளே!, பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.150 தாத்தா பேரக்குழந்தைகளோடு கோவிலுக்கு செல்லும்போது தொணதொணக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது போல அமைந்த நுால் இது. தோப்புக்கரணம், கைகளை துாக்கி வணங்குவது, விசாரசர்மன் சண்டிகேஸ்வரர் ஆன அதிசயம், பூமியில் புதையலாக கிடைத்த சைலாதி என்ற குழந்தை எட்டு வயதுக்கு பின் நந்தீஸ்வரர் ஆன கதை, மூன்றாம் பிறையை சிவன் தலையில் சூடிக் கொள்ள காரணம், அனுமன் சிந்துாரம் வச்ச கதை என குழந்தைகளின் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியான பதிலை […]

Read more

வாழ நினைத்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம், முனைவர் செளந்தர மகாதேவன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.150 நுாலாசிரியர் முனைவர் சவுந்தர மகாதேவனின், ‘வாழ நினைத்தால் வாழலாம்’ என்ற புத்தகம், திருக்குறளின் சாறு பிழிந்து, சுவைமிகு ரசமாக படைக்கப்பட்டிருக்கிறது. இன்பம், துன்பம், நம்பிக்கை, நட்பு என எந்த பக்கம் திரும்பினாலும், வழிகாட்டியாய், கலங்கரை விளக்கமாய் திருக்குறள் நமக்கு ஆறுதல் தருகிறது என்பதை சொல்லியிருக்கிறார். உலகப் பொதுமறையான திருக்குறளை விளக்க உரையுடன் தராமல், சிறு சிறு குட்டிக் கதைகளை சொல்லி, அவற்றின் வழியே திருக்குறள் கருத்துக்களை விளக்கும் […]

Read more

புதிய பார்வையில் ராமாயணம்

புதிய பார்வையில் ராமாயணம், பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.320 எளிமைக்கு உதாரணம் இந்த புதிய ராமாயணம். சொல்ல சொல்ல இனிக்குதடா… என்பது போல, படிக்க படிக்க பரவசம் தருகிறது. ராமா… உன் கருணை எத்தனை… என மனம் வியந்து கொண்டே கதைக்குள் செல்கிறது. சில மவுனங்கள் சில விளக்கங்களாய் ஐயம் திரிபுற விளக்குகிறார் ஆசிரியர். சில கதாபாத்திரங்கள் ராமனோடு பேசும் போது, அந்த கதாபாத்திரங்களின் பிரமிப்பை நம் மனம் அப்படியே உள்வாங்குகிறது. நம் இருவர் தொழிலும் ஒன்று தானே […]

Read more

அழகன் முருகன்

அழகன் முருகன், டாக்டர் லட்சுமி ராஜரத்தினம், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.90  பக்தர்களுக்கு அருளும் பண்பாளன்… பார் போற்றும் தயாளன்… பக்தர்களின் துயர் தீர்க்க பறந்தோடி வரும் மயிலோன் அழகன் முருகனைப்பற்றி ஆயிரம் பேர் பாடினாலும் தீராது.சொல்ல சொல்ல இனிக்கும் முருகன் திருவிளையாடலை, அழகு தமிழில் விளக்கியுள்ளார் ஆசிரியர் லட்சுமி ராஜரத்தினம். பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக்கூத்தருக்கு கழுத்தணி வழங்கி, அவரின் திறமையை உலகுக்கு வெளிப்படுத்திய முருகன், பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாத பிரம்மனுக்கு தண்டனை வழங்கி, அவரின் கர்வத்தை அழித்தொழித்தான். வித்வத் […]

Read more

பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.16\ ராமநாதபுரம் பாம்பனில் அப்பாபுவாக பிறந்தவர் பாம்பன் சுவாமிகளாக, குமரகுருதாச சுவாமிகளாக அறியப்பட்டார். முருகனை முழுமுதற்கடவுளாக கொண்டு தமிழகம் முழுக்க யாத்திரை சென்றவர். கற்றறிந்ததை அறிவால் பெற்றறிந்ததை சண்முக கவசமாக, குமாரஸ்தவமாக மக்களுக்கு அருளியவர்.அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நுால் இது. வாழ்வின் பெரும்பகுதியை இறை அனுபவத்திற்காக, மக்களின் இறை வாழ்விற்காக செலவிட்டவர் பாம்பன் சுவாமிகள். இல்லறத்தில் இருந்து நிரந்தர துறவறம் செல்ல நினைத்தவர் முருகனே பழநிக்கு அழைத்தாரா என நண்பர் […]

Read more
1 2 3 4 5 6 7