ஆமை காட்டிய அற்புத உலகம்

ஆமை காட்டிய அற்புத உலகம், யெஸ். பாலபாரதி, புக்ஸ் பார் சில்ரன், பக். 80, விலை 60ரூ. சிறார் நாவல் உலகில் ஓரு புதிய வரவு, ‘ஆமை காட்டிய அற்புத உலகம்.’ ஜூஜோ என்ற ஆமையுடன் சிறுவர்கள் மேற்கொள்ளும் ஒரு சாகசப் பயணத்தை விவரிப்பதுதான் இந்த நாவல். சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் எப்போதும் வசீகரிப்பது கடல். கடலும் அதன் அற்புதங்களும் கேட்கச் சலிக்காதவை. அத்தகைய விரிவானதொரு பின்புலத்தில் கடலுக்குள்ளே சென்று நாமே பார்க்கிற நேரடி அனுபவத்தைத் தருகிறது இந்நாவல். கடல்வாழ் உயிரினங்கள், அவற்றின் வாழ்க்கை […]

Read more

கலாம் கனவு நாயகன்

கலாம் கனவு நாயகன், ரமேஷ் வைத்யா, விகடன் பிரசுரம், பக். 159, விலை 185ரூ. அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு முதன்முறையாக, அவரே சொல்வதாக, ரமேஷ் வைத்யா எழுத்தில், காமிக்ஸாக 60 பக்கங்களில் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் ஆற்றிய உரைகளின் பகுதிகள், அவர் அளித்த பேட்டிகள், சுட்டிக் குழந்தைகளின், பொதுமக்களின் கேள்விகளுக்குச் சொன்ன பதில்கள், அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின்போது வந்திருந்தவர்களிடையே அவர் ஏற்படுத்திய உத்வேகமான உணர்வுகள், நம் நாட்டின் மீது அவர் கொண்டிருந்த பெருமிதமான கருத்துகள் என்று பல பரிமாணங்களிலும் படைப்புகளை […]

Read more

உறக்கத்திலே வருவதல்ல கனவு

உறக்கத்திலே வருவதல்ல கனவு, ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், விகடன் பிரசுரம், பக். 263, விலை 130ரூ. நான் விளக்காக இருப்பேன்! முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தமிழகத்தின் பல்வேறு பள்ளி மாணவர்களிடையே ஆற்றிய எழுச்சி உரைகளின் தொகுப்பு தான் இந்த நூல். வாழ்க்கையில் வெற்றிபெற நான்கு விஷயங்கள் முக்கியம் என்கிறார் கலாம் 1. வாழ்வில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும்; சிறிய லட்சியம் குற்றமாகும் 2. அறிவைத் தேடித்தேடிப் பெறல் வேண்டும் 3. லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும் 4. விடா முயற்சி […]

Read more

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும், கோ. வடிவேலு செட்டியார் இயற்றிய தெளிபொருள் விளக்கமும், கருத்துரையும், குறிப்புரையும் (இரண்டு பாகங்கள்), பதிப்பாசிரியர் சிவாலயம் ஜெ. மோகன், வெளியீடு சிவாலயம், பக். 872+888 (இரு பாகங்கள்) விலை 1400ரூ. பரிமேலழகரை விளக்கிய வடிவேலு செட்டியார்! திருக்குறளுக்கு உரைகண்ட பழைய உரையாசிரியர்களில், பரிமேலழகரே மிகுந்த சிறப்புடையவர் என்பது, அவரைத் திட்டுகின்றவர்களும் சேர்ந்து சொல்லுகின்ற முடிபாகும். ‘வடநூல் துறையும் தென்திசைத் தமிழும் விதிமுறை பயின்ற நெறியறி புலவன்’ எனப் பாராட்டப் பெறுபவர் அவர். மூலநூலாசிரியராகிய திருவள்ளுவரோடு சேர்த்து வைத்துக் கொண்டாடும் […]

Read more

நா. முத்துக்குமார் கவிதைகள்

நா. முத்துக்குமார் கவிதைகள், நா. முத்துக்குமார், பட்டாம்பூச்சி பதிப்பகம், பக். 272, விலை 225ரூ. கவிதை காலத்தின் கண்ணாடியாகவும், சமூகத்தின் முகமாகவும் தனிநபர் தன் அனுபவங்களை தீட்டிடும் சித்திரமாகவும் பார்க்கப்படுகிறது. கவிதைக்கு மொழிவளம், அனுபவச் செறிவு மிகவும் அவசியம். நா.முத்துக்குமாருக்கு அவை இரண்டுமே வாய்த்திருப்பது வரம். நா.முத்துக்குமார் கவிதை, உரைநடை, திரைப்பாடல் என்று எழுத்தின் பல தளங்களிலும் இயங்குபவர். என்றாலும் கவிதை அவருக்கு தாய்வீடு. அந்தத் தாய் வீட்டில் அவரது பால்ய கால அனுபவங்களை அவர் பதிவு செய்திருக்கிறார். கவிதை மனம் எல்லோருக்குமே வாய்ப்பதில்லை. […]

Read more

தெருவிளக்கும் மரத்தடியும்

தெருவிளக்கும் மரத்தடியும், ச.மாடசாமி, புதிய தலைமுறை வெளியீடு, பக். 88, விலை 80ரூ. கற்பித்தலின் நுட்பங்களை பேசுகிறது இந்த நூல். வகுப்பறை வடிவமைப்பை கலைத்துப் போட்டு, கற்கும் அனுபவங்களை புதுப்பிக்கும் வகையிலான கட்டுரைகள் இதில் உள்ளன. கல்லூரி பேராசிரியராக வகுப்பறை சார்ந்தும், அறிவொளி இயக்கத்தில் கிராமப்புறங்களில் கற்பித்தல் சார்ந்தும், பொதுவெளியில் மாணவர்களின் திறனை மதிப்பிடுவதில் நுட்பங்கள் சார்ந்தும், 17 பதிவுகள் இந்த புத்தகத்தில் உள்ளன. நூலாசிரியரின் பொறுப்புடைமை, சொற்களின் வழி ஒளிர்கிறது. தட்டையான தத்துவத்தில் பயணிக்கவில்லை என்பதை அவர் வரிக்குவரி உணர்த்திக் கொண்டே இருக்கிறார். […]

Read more

தி கர்ஸ் ஆப் சூர்யா

தி கர்ஸ் ஆப் சூர்யா, தேவ் பிரசாத், ரேண்டம் ஹவுஸ் இண்டியர், பக். 306, விலை 299ரூ. இதயத்தைத் துரிதகதியில் இயங்க வைக்கும் மர்ம நாவல்! ஒரே மூச்சில் படித்து முடிக்கத் தூண்டும்! வசீகரமான ஆங்கில நடை. மதுரா கிருஷ்ண ஜன்மஸ்தான் கோவில். ‘திபெத் லிபரேஷன் பிரன்ட்’ என்ற ரகசிய அமைப்பைச் சேர்ந்த டென்சிங், கிருஷ்ணர் கோவிலில் உள்ள, சியமந்தக மணியை திருட வருகிறான். கோஹினூர் வைரம் போன்ற விலை மதிக்க முடியாத கல் அது; நீல நிறம் கொண்டது. திருடும் முயற்சியில் அவன் […]

Read more

தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள்

தென் ஆப்பிரிக்க பயண அனுபவங்கள், டாக்டர் கலைமாமணி யோக, யோகா சாவித் பப்ளிகேஷன்ஸ், பக். 184, விலை 150ரூ. பிழைப்பு தேடி தென்னாப்ரிக்கா சென்ற தமிழர்கள், பல தலைமுறைகளாக அங்கே வாழ்ந்து, தமிழர் பண்பாட்டை மறக்காமல் பின்பற்றுவதை, இதில் விவரித்துள்ளார் நூலாசிரியர். டர்பன் நகருக்கு, 16ம் நூற்றாண்டில் பிழைப்பு தேடி சென்ற தமிழர்கள், வழிபாட்டிற்காக ஆலயங்களை நிறுவி, தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளை அங்கும் கொண்டாடி வருவதை விளக்கமாக கூறியுள்ளார். நம்மூர் பட்டு புடவைகளுக்கு அங்கு மவுசு இருப்பதை பல்வேறு சம்பவங்கள் மூலம் விவரித்துள்ளார். […]

Read more

அடையாளம் தேடி

அடையாளம் தேடி, மு. வித்யா பெனோ, சந்தியா பதிப்பகம், பக். 72, விலை 80ரூ. ஆற்றங்கரை, திருவிழா, கோவில் படித்துறை இங்கெல்லாம் சந்தித்து காதலர்கள் காதல் வளர்த்த காலம் மலையேறி விட்டது. அலைபேசி, வாட்ஸ் ஆப், இணையம் வழியாகத்தான் இப்பொழுது காதல் வழிகிறது. அப்படி வழியும்பொழுது, அவர்கள் அருகில் இருப்பவர்களை, பல நேரம் சங்கடத்தில் தான் ஆழ்த்துகிறது. அதனை, ‘சிநேகிதியின் தூக்கத்தையும் / சேர்த்து கெடுக்கிறது / நம் செல்போன் முத்தங்கள்’ என்று அழகாக பதிவு செய்திருக்கிறார் வித்யா பெனோ. வாழை இலை காற்றில் […]

Read more

சயமாம் பர்மா மரண ரயில் பாதை

சயமாம் பர்மா மரண ரயில் பாதை, (மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு), சீ. அருண், தமிழோசை பதிப்பகம், பக். 232, விலை 180ரூ. நல்வாழ்வை நினைத்து நகரத்துக்கு போன கதை! ஒருமுறை சயாம் நாட்டுக்குச் சென்ற நம் தேசியகவி ரவீந்திரநாத் தாகூர், அந்த மண்ணைத் தொட்ட தும் காதலுக்கு நிகர்த்த ஒரு வாக்கியத்தைச் சொன்னார். ‘உன்னை என்னுடையதென்று நொடியில் கண்டுகொண்டேன்’. ஆனால், ஒவ்வொரு நாடும் ஒவ்வொருவருக்கும் வேறுவேறாகத்தான் இருக்கிறது. இந்த நூலிலே வரும் தொழிலாளக் கொத்தடிமைகள் சயாமுக்கு வைத்த பெயர், ‘சாவூர்’ என்பதாகும். மரண ரயில் […]

Read more
1 135 136 137 138 139 240