இராகவம் தொகுதி 2

இராகவம் தொகுதி 2, தொகுப்பும் பதிப்பும் கா.அய்யப்பன், காவ்யா வெளியீடு, விலை 900ரூ. உவேசா வழித்தடத்தில் நாட்டுடமையான தமிழறிஞர்களின் படைப்புகளை முழுமையாகத் தொகுத்து வெளியிட்டுவரும் காவ்யா பதிப்பகம், ரா.இராகவையங்காரின் படைப்புகளை ‘இராகவம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. சங்கத் தமிழ் ஆய்வின் முன்னோடிகளான உ.வே.சாமிநாதையர், ச.வையாபுரிப் பிள்ளை இருவராலும் பாராட்டப்பட்டவர் ரா.இராகவையங்கார். ‘இராகவம்’ இரண்டாம் பாகத்தில் அவர் எழுதிய குறுந்தொகை உரைவிளக்கமும் பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆராய்ச்சி உரைகளும் இடம்பெற்றுள்ளன. 1946-1951 காலகட்டத்தில் வெளியான முதல் பதிப்புகளின் அடிப்படையில் இத்தொகுப்பைத் தொகுத்திருக்கிறார் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப […]

Read more

இராகவதம் 1

இராகவதம் 1, ரா. இராகவையங்கார் ஆக்கங்கள், தொகுப்பும் பதிப்பும்- கா. அய்யப்பன், காவ்யா, சென்னை, பக். 1040, விலை 1000ரூ. மதுரைத் தமிழ்ச்சங்க சமஸ்தான வித்துவானாக இருந்தவர் ரா.இரா. தமிழ் ஆய்வு வரலாற்றில் தமக்கென ஒரு தனி இடத்தைப் படித்தவர். செந்தமிழ்ப் பத்திரிகையின் முதல் மூன்று ஆண்டுகள் ஆசிரியராக இருந்தபோது, அவ்விதழில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். செந்தமிழ் இதழில் அவர் எழுதிய கட்டுரைகளின் பட்டியல் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளன. இதில் செந்தமிழ் இதழிலும், கலைமகள் மற்றும் விழா மலரில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் […]

Read more