நீங்களும் படிக்கலாம்

நீங்களும் படிக்கலாம், அழகிய சிங்கர், விருட்சம், பக். 90, விலை 60ரூ. முழுநேர வாசகன் என்பது மிகவும் உயர்ந்த விஷயம் என்று இந்திய இலக்கியம் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார், க.நா.சு., வாழ்நாள் முழுவதும் படிப்பதிலேயே தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டவர் அழகிய சிங்கர். சென்ற ஆண்டில் கிட்டத்தட்ட, 3,000 பக்கங்களுக்கு மேல் அவர் படித்த, 20 புத்தகங்களின் விபரங்கள் தான், ‘நீங்களும் படிக்கலாம்’ என்ற இந்த சிறிய நூல். எல்லாரும் புத்தகங்கள் வாசிக்க வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் தான் இவை. எஸ்.ராமகிருஷ்ணன் […]

Read more

நீங்களும் படிக்கலாம்

நீங்களும் படிக்கலாம், அழகியசிங்கர், விருட்சம், பக். 84, விலை 60ரூ. இந்நூலாசிரியர் அண்மையில் தான் படித்த எட்டு நாவல்கள், ஐந்து கவிதைத் தொகுதிகள், ஐந்து கட்டுரைத் தொகுதிகள், இரண்டு சிறுகதைத் தொகுதிகள் என மொத்தம் இருபது நூல்களைப் பற்றி இந்நூலில் சுருக்கமாக அறிமுகம் செய்திருக்கிறார். அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்ற முதல் வரிசை எழுத்தாளர்களிலிருந்து தனது முதல் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக்கும் ராமலக்ஷ்மி வரை பலருடைய நூல்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஜாதிப் பிரச்னைகளின் பல்வேறு முகங்களைக் காட்டும் “சஞ்சாரம்’‘ […]

Read more

நீங்களும் படிக்கலாம்

நீங்களும் படிக்கலாம், அழகியசிங்கர், விருட்சம், பக். 84, விலை 60ரூ. சென்ற ஆண்டு தான் படித்த நூற்றுக்கணக்கான புத்தகங்களிலிருந்து 20 புத்தகங்களை மட்டும் எடுத்து விமர்சனமாக எழுதி அதை புத்தகமாக வெளியிட்டுள்ளார் அழகியசிங்கர். மருத்துவம், கவிதை, கதை என எல்லாமும் இதில் உள்ளன. சாருவின் நூல் பற்றிப் பேசுவதையில் அவர் எழுத்துத் திறனை சிலாகித்தும் அவரின் சில கருத்துகளை நிராகரித்தும் நேர்மையாகப் பதிவு செய்துள்ளார். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே செல்லலாம். எழுத்தாளர்களை கௌரவிக்கும் செயல் இந்நூல் எனலாம். நன்றி: கல்கி, 21/8/2016.

Read more