அழியும் மரங்கள்

அழியும் மரங்கள், சுப்ரபாரதிமணியன், சப்னா புக் ஹவுஸ், விலை 100ரூ. நம் நாட்டில் 365 விலங்கினங்களும், 1236 தாவர இனங்களும் அழியும் தருவாயில் இருப்பதாக இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனம் கூறி உள்ளது. அவ்வாறு அழிந்து வரும் தாவரங்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்கும் பணியை இந்த நூல் செய்துவருகிறது. நன்றி: தினத்தந்தி, 26/4/2017.   —-   தேவதைகளால் தேடப்படுபவன், படி வெளியீடு, விலை 60ரூ. புதுக்கவிதைகள் கொண்ட புத்தகம். தங்கம் மூர்த்தி மிகச்சிறந்த கவிஞராக வருவார் என்பதற்கு முன்னோட்டமாக விளங்குகிறது இந்த நூல். […]

Read more

வாங்க பேசலாம் செல்லம்ஸ்

வாங்க பேசலாம் செல்லம்ஸ், இளங்கோவன் கீதா, படி வெளியீடு, விலை 100ரூ. இளங்கோவன் முகநூலில் எழுதிய குறிப்புகள் வானத்திற்குக் கீழான அனைத்து விஷயங்களைப் பற்றியும் பேசுகின்றன. வகைப்படுத்த முடியாதபடிக்கு ஆவேசமும், அன்பும், கருணையும், விவாதமும் கொண்ட பகுதிகள். மெல்லிய புன்னகையோடு ரொம்பவும் உள்புகுந்து வருந்தாமல் செல்கிற சுலபமான பத்திகள். எல்லோருடைய வாழ்க்கைக்கும் சம்பந்தம் உடைய பகுதிகளைப் பற்றி பேசுவதால் நமக்கு நெருக்கமாகிவிடுகின்றன. எப்போதுமே உண்மைக்கு அருகில் இருப்பவை சுவாரஸ்யம் நிரம்பியவை. வாழ்க்கையைக் கொண்டாட்டமாகப் பார்த்து, முன் பின்னாய் யோசித்துப் பார்த்து எழுதப்பட்டவை. காதலர் தின […]

Read more

எண்ணும் எழுத்தும்

எண்ணும் எழுத்தும், பிருந்தா சாரதி, படி வெளியீடு, பக். 88, விலை 70ரூ. எண்களுக்குள் நுழைந்து வாழ்க்கையைத் தேடும் உத்தி. ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரித்தும் இன்னொன்றைச் சேர்த்தும் காணும் வாழ்வியல் தத்துவம் இக்கவிதைகளுக்குள் உட்புகுந்து பயணிக்கின்றன. ஒரே சிகரத்தில் இருந்து உருண்டு வந்து இரண்டான கூழாங்கற்களின் சந்திப்பும், எரிந்து கொண்டு இருக்கும் இரண்டு ஊதுவத்திகளின் புகை ஒன்றாய்க் கலப்பதும், வெற்றிடத்தில் ஒன்றைத் தேடுவதும் என வாழ்வின் பல கோணங்கள் ஆராயப்படம் களமாக இக்கவிதைகள் அலசப்படுகின்றன. நன்றி: குமுதம், 22/3/2017.

Read more