நவீன தாமிரபரணி மஹாத்மியம்

நவீன தாமிரபரணி மஹாத்மியம், முத்தாலங்குறிச்சி காமராசு, பொன் சொர்ணா பதிப்பகம், விலை 450ரூ. தமிழகத்தில் தோன்றி, தமிழகத்திற்கு உள்ளேயே ஓடி கடலில் கலக்கம் ஒரே நதியான தாமிரபரணி, புண்ணியமானது என்று இதிகாசங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டு இருக்கிறது. அப்படிப்பட்ட தாமிரபரணியின் வரலாறு, அதன் முக்கியத்துவம், அது தொடர்புடைய அதிசயிக்கத்தக்க தகவல்கள், கதைகள் ஆகிய அனைத்தும் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. தாமிரபரணி நதியைப் பற்றி அறிந்து கொள்ள இந்த ஒரு நூலைப் படித்தாலே போதும் என்ற அளவு அத்தனை அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அத்தியாத்தின் […]

Read more

ஜமீன் கோயில்கள்

ஜமீன் கோயில்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, சூரியன் பதிப்பகம், விலை 140ரூ. ஜமீன்தார்கள் என்றாலே ராஜ கம்பீரமும், மிடுக்கும், அதிகாரத் தொனியும்தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர்களிடமும் மென்மையான மனம் இருந்ததையும், பாரம்பரியமான ஆன்மிக வழிபாடுகளை மேற்கொண்டிருந்ததையும் விளக்குவதுதான் இப்புத்தகம். நன்றி: தினமணி, 13/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026627.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நெல்லை வரலாற்று சுவடுகள்

நெல்லை வரலாற்று சுவடுகள், முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, பக். 244, விலை 240ரூ. திருநெல்வேலி சீமைப் பற்றிய, சிறு சிறு, பல அரிய செய்திகளை, இந்நூலுள் தொகுத்து வழங்கி உள்ளார், நூலாசிரியர். தென்கயிலை எனவும், பொதிகைமலை எனவும் போற்றப்படும், அகத்தியர்மலை முதல், அம்பாசமுத்திரத்தில் துண்டிக்கப்பட்ட தண்டவாளம் ஈறாக இருநூற்றுக்கும் மேற்பட்டச் செய்திகளை தரும், அரிய தகவல் களஞ்சியமாக திகழ்கிறது இந்நூல். ‘ நெல்லை மாவட்டத்தின், பண்பாட்டின் சின்னங்களாக விளங்கும் கோவில்கள், கோபுரங்கள், அரண்மனைகள், தேவாலயங்கள், நீரூற்றுகள், அருவிகள், ஆறுகள், பாலங்கள், விலங்குகளின் சரணாலயங்கள், சடங்குகள், […]

Read more

குளத்தூர் ஜமீன் கதை

குளத்தூர் ஜமீன் கதை, முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, விலை 175ரூ. தமிழ்நாட்டின் முந்தைய ஜமீன்தார்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதில் மக்களுக்கு நெருக்கமாகவும், அணுக்கமாகவும் வாழ்ந்தவர்கள் பலருண்டு. அவர்களை உள்ளது உள்ளபடி எழுதிப்போவதில் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னணியில் இருக்கிறார். ஆடம்பரம் இல்லாத எழுத்து அவரிடம் இருக்கிறது. பரபரக்கிற எளிய மொழி கைவசம் இருக்க, முழு வீச்சில் குளத்தூர் ஜமீன் கதையை எழுதியிருக்கிறார். ஜமீன்தார்களின் நேர்த்தி, நடைமுறை, பழக்கவழக்கங்கள் என எல்லாமே 162 பக்கங்களில் பரவிக்கிடக்கிறது. அவர்கள் பயன்படுத்திய ராலே சைக்கிள், கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. […]

Read more

நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும்

நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும், முத்தாலங்குறிச்சி காமராசு, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 376, விலை 150ரூ. தென் தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சி காலத்துக்கு முன்பே பாளையக்காரர்கள் என்ற பெயரில் ஜமீன்தாரி முறை அமலில் இருந்ததையும், நாயக்கர் ஆட்சிக்குப் பின் அது பலப்பட்டதையும் விரிவுபட்டதையும் நூல் எடுத்துரைக்கிறது. இதில் பாண்டிய நாட்டுக்கு உள்பட்ட 72 பாளையங்களில் அன்றைய நெல்லை ஜில்லாவைச் சேர்ந்த சிவகிரி, நெற்கட்டும், செவ்வல், எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி,  உள்ளிட்ட 10 ஜமீன்களின் குறுநில மன்னர்கள் வாழ்ந்ததையும் வீழ்ந்ததையும் நூல் விளக்குகிறது. ஊர்க்காடு […]

Read more
1 2