மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை

மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை, மு. நியாஸ் அகமது, விகடன் பிரசுரம், பக். 192, விலை 140ரூ. “நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன்‘’- இது தனக்கு மிக நெருங்கியவர்களுடன் ஜெயலலிதா பகிர்ந்து கொண்ட வாசகம். அந்த நரகங்கள் எவை, அவற்றை எப்படித் தாண்டிக் குதித்துத் தப்பித்து வந்தார் என்பதை விவரிப்பதுதான் இந்த நூல். இரண்டாவது வயதில் தந்தையை இழந்தது, தாயார் வேதவல்லி, “சந்தியா’‘ என்கிற பெயர் தாங்கி படங்களில் நடித்தது, சர்ச் பார்க் கான்வென்டில் ஜெ.யின் படிப்பு, […]

Read more

சத்யஜித்ரே வாழ்வும் வழியும்

சத்யஜித்ரே வாழ்வும் வழியும், விகடன் பிரசுரம், விலை 160ரூ. இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் புகழ் தேடித்தந்தவர் சத்யஜித் ரே. 1954-ல் அவருடைய முதல் படமான “பாதேர் பாஞ்சாலி” வெளிவந்தது. சர்வதேச பட விழாக்களில் பல பரிசுகளை வாங்கிக் குவித்தது. வாழ்நாள் சாதனைக்காக சிறப்பு ஆஸ்கார் பரிசு இவருக்குக் கிடைத்தது. உடல் நலம் இல்லாத காரணத்தால், ஆஸ்கார் குழுவினரே கல்கத்தாவில் உள்ள அவர் வீட்டக்கு நேரில் சென்று பரிசை வழங்கினர். “திரைப்பட உலகின் மகத்தானவர் சத்யஜித் ரேதான்” என்று உலகப்புகழ் பெற்ற ஜப்பானிய டைரக்டர் […]

Read more

சத்யஜித்ரே வாழ்வும் வழியும்

சத்யஜித்ரே வாழ்வும் வழியும், வீ.பா. கணேசன், விகடன் பிரசுரம், பக். 216, விலை 160ரூ. இந்திய சினிமாவின் துருவ நட்சத்திரமாக விளங்கும் இயக்குநர் சத்யஜித்ரேயின் வாழ்க்கைப் பயணத்தையும், கலைப் பயணத்தையும் விரிவாக அறிந்து கொள்ள உதவும் நூல். கொல்கத்தா நகரவாசியாக இருந்த ரே, கிராமிய சூழலில் இருந்த சாந்தி நிகேதனில் சேருவதற்குக் காட்டிய தயக்கம், பின்னர், நுண்கலை பயில அங்கே சேருதல், 20 வயதான ரே, 80 வயது தாகூரை நான்குமுறை சந்தித்தும் இயல்பாகப் பேச முடியாமல் போனது, தாகூர் மறைவுக்குப்பின் படிப்பை பாதியில் […]

Read more

சத்யஜித்ரே வாழ்வும் வழியும்

சத்யஜித்ரே வாழ்வும் வழியும், வீ.பா.கணேசன், விகடன் பிரசுரம், பக்.216, விலை .ரூ.160; இந்திய சினிமாவின் துருவ நட்சத்திரமாக விளங்கும் இயக்குநர் சத்யஜித்ரேயின் வாழ்க்கைப் பயணத்தையும், கலைப் பயணத்தையும் விரிவாக அறிந்து கொள்ள உதவும் நூல். கொல்கத்தா நகரவாசியாக இருந்த ரே, கிராமிய சூழலில் இருந்த சாந்தி நிகேதனில் சேருவதற்குக் காட்டிய தயக்கம், பின்னர், நுண்கலை பயில அங்கே சேருதல், 20 வயதான ரே, 80 வயது தாகூரை நான்குமுறை சந்தித்தும் இயல்பாகப் பேச முடியாமல் போனது, தாகூர் மறைவுக்குப்பின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறியது, […]

Read more

திரைத்தொண்டர்

திரைத்தொண்டர், பஞ்சு அருணாசலம், விகடன் பிரசுரம், பக். 288, விலை 185ரூ. அறுபது ஆண்டுகால தமிழ்த் திரையுலக வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கிற பஞ்சு அருணாசலத்தின் சுயசரிதை இந்நூல். பஞ்சு அருணாசலத்தின் தந்தை அந்தக் காலத்திலேயே பி.ஏ. படித்திருந்தும், சம்பளத்துக்கு வேலை செய்வதை அவமானமாகக் கருதி, வேலைக்குப் போகாமல் இருந்ததால், அம்மாவின் நகைகள் அத்தனையையும் இழக்க நேரிடுகிறது. அந்தக் கோபத்தில் முதன் முதலாக அப்பாவை எதிர்த்துப் பேசிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி, பணம் சம்பாதிக்க பஞ்சு அருணாசலம் சென்னைக்கு ரயில் ஏறியது, நெஞ்சை நெகிழச் செய்கின்றது. […]

Read more

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம், முகில், விகடன் பிரசுரம்,  பக்.493, விலை ரூ.250. வாழ்கின்ற மக்களுக்கு வாழ்கிற சாதனையாளர்களே பாடமாக அமைகிறார்கள் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல். உலகின் அதிவேக மனிதர் உசைன்போல்ட் முதல் டிஸ்கவரி சேனலில் காடுகளில் வழிகண்டறிந்து சாகசம் நிகழ்த்தும் பியர் கிரில்ஸ் வரை நிஜவாழ்வின் கதாநாயகர்களை நம்முன் நிறுத்தி, அவர்களைப் போல நம்மையும் நனவுலக நாயகராக்கும் முயற்சியை நூலாசிரியர் சிறப்பாகவே செய்திருக்கிறார். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட உசைன் போல்ட் தடகளத்தின் சரித்திரமானதையும், நடுத்தர வர்க்கத்தில் பிறந்து தனது அயராத உழைப்பால் […]

Read more

சாதி தேசத்தின் சாம்பல் பறவை

சாதி தேசத்தின் சாம்பல் பறவை, எவிடன்ஸ் கதிர், விகடன் பிரசுரம், பக். 216, விலை 175ரூ. காவல் துறை வன்முறைகள், சாதிய வன்கொடுமைகள், தீண்டாமை சித்ரவதைகள், கொத்தடிமை தொழிலின் அவலம், பெண்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராக, 20 ஆண்டுகளாக போராடிய, ‘எவிடன்ஸ்’ கதிரின் அனுபவங்களே இந்த கட்டுரை தொகுப்பு. இந்த புத்தகம், அநீதிகள் நடக்கும்போது, அமைதியாய் இருப்போரின் மனசாட்சியை தட்டி எழுப்பும். நன்றி: தினமலர், 17/1/2017.

Read more

சிகரம் தொட்ட சாதனையாளர்கள்

சிகரம் தொட்ட சாதனையாளர்கள், புதுகை மு.தருமராசன் , புதுகைத் தென்றல், விலை 90ரூ. முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், எழுத்தாளர் வல்லிக்கண்ணன், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் உள்பட 13 சாதனையாளர்கள் பற்றி புதுகை மு.தருமராசன் எழுதிய புத்தகம். “நயனுறு நடைச்சித்திரம்” – சிகரம் தொட்ட சாதனையாளர்கள். இனிய நடையில் ரத்தினச் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 21/12/2016.   —-   நெடுஞ்சாலை வாழ்க்கை, விகடன் பிரசுரம், விலை 175ரூ. நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்களைப் பற்றிய கட்டுரைகள். நெடுஞ்சாலைப் பயணங்களில் லாரி டிரைவர்கள் […]

Read more

லாபம் தரும் பட்ஜெட்

லாபம் தரும் பட்ஜெட், விகடன் பிரசுரம், பக். 168, விலை 115ரூ. பசுமை விகடனில் பல வாரங்கள் தொடராக வெளிவந்து விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். நெடுங்காலமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்த நாம், இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் விவசாயம் செய்ய ரசாயன உரங்களைப் பயன்படுத்த தொடங்கினோம். இதன் காரணமாக, உணவு தானியங்களிலும், காய்கறிகளிலும் நஞ்சு கலக்கப்படுவதுடன், மண்ணின் இயற்கைத் தன்மையும் மாறி வருகிறது. ரசாயனப் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகள் பயணப்படுவதற்காக […]

Read more

கணினித் தமிழ்

கணினித் தமிழ், இல. சுந்தரம், விகடன் பிரசுரம், பக். 368, விலை 230ரூ. கணினி, இணையம் இவை இன்று மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக மாறி வருகின்றன. இந்நிலையில் இவற்றைப் பற்றிய புரிதலை அனைத்துத் தரப்பினருக்கும் உண்டாக்கும் வகையில், ‘கணினித் தமிழ்’ என்னும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து அலகுகளில் ஆசிரியர் கணினி, இணையம் சார்ந்த செய்திகளைப் பதிவு செய்துள்ளார். கணினியின் பாகங்கள், அதன் செயல்பாடு, அதில் பயன்படும் வன்பொருட்கள், மென்பொருட்கள், இன்று பெருகி வரும் நவீன மொபைல்பேசிகளில் பயன்படுத்தப்படும் இயங்குதளங்கள், […]

Read more
1 3 4 5 6 7 31